ஹாய் மாமாஸ்.. ஹலோ மச்சான்ஸ்... என்னதான் உங்களுக்கு பிரச்சனை?!
சென்னை: நிஜ வாழ்வில் அவரவர் அனுபவத்தைத்தான் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொள்கிறார்கள். அதன்படி பார்த்தால் அக்காவை கல்யாணம் செய்துகிட்டு அவளின் தம்பியிடம் பேசுவதில் என்னதான் மாமாவுக்கு என்னதான் பிரச்சனை இருக்கும்?
இதே பிரச்சனைதான் அந்த தம்பிக்கும் இருக்கிறது. அக்காவை கல்யாணம் செய்துகொண்ட மாமாவிடம் பேச பல மச்சான்களுக்கு வாய் வருவதில்லை.
இப்படி சகஜமாக பேசிக் கொள்வதில் அப்படி என்னதான் பிரச்சனை இருக்கும்? இதற்கு பதில் தெரிஞ்சுக்க நாளை 12 மணிக்கு விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி பாருங்கள்.

பெண்ணுக்குத்தான் பிரச்சனை
கணவன் தம்பி இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு விழிப்பது என்பது அந்த பெண்தான். புருஷனும் தம்பியும் சகஜமாக இயல்பாக பேசிக்கொள்ள மாட்டார்களா அதை கண் குளிர பார்க்க மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் அந்த பெண்ணின் குறை எப்போது தீரும்?

மாதவன் ரகுவரன்
ரன் திரைப்படத்தில் அனு ஹாசனின் தம்பியாக மாதவன் நடிச்சு இருப்பார். கணவனாக ரகுவரன் நடிச்சு இருப்பார். அனு ஹாசன் இருவரும் பேசிக்க மாட்டார்களா என்று ஏங்கித் தவிப்பார். ஒரு நாள் அனு ஹாசனுக்குத் தெரியாமல் இருவரும் பேசிக்கொள்ள அதை காதில் வாங்கிக்ண்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற அனுஹாசன் ஓடிவந்து ரெண்டு பேரும் பேசிக்கிட்டீங்க உண்மைதானேன்னு கண்ணீர் வடித்து கேட்பார். இது உணர்வுப் பூர்வமான காட்சி.

ரியாலிட்டி ஷோ
நீயா நானா ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டு பேசிய பெண்களின் ஆசையும் அதுவாகத்தான் இருக்கிறது. ஒரு பெண் சொல்கிறார்.. என் தம்பி காலேஜ் போயிகிட்டு இருந்தப்போ வீட்டுக்கு வருவான். என்கிட்டே காசு குடுத்து அவனுக்கு பெட்ரோல் செலவுக்கு ஆகும் குடுன்னு சொல்லுவார்.

பொருட்கள் ஃபிரிட்ஜில்
தம்பிக்கு பிடிச்ச பொருட்கள் எல்லாம் அவன் வர்றான்னு தெரிஞ்சவுடனே வாங்கி ஃபிரிட்ஜில் வச்சு இருப்பேன். அதை பார்த்துட்டு அவன் வரும்போது இவர் இருக்க மாட்டார். எஸ்கேப் ஆகிருவார். அவர் போனில் என் தம்பி நம்பர் இருக்கும்.. ஒரு நாள் கூட போன் பண்ணி இருக்க மாட்டார்.

பேச மாட்டார்
பிறந்த நாள் வாழ்த்து சொல்லனும்னா கூட.. நான் போன் செய்தேன்.. நாட் ரீச்சபுள்னு வந்துச்சுன்னு சொல்லுவார். உடனே நான் போன் பண்ணுவேன் கிடைக்கும். சரின்னு இவர்கிட்டே கொடுத்தால். அந்த ரிங் போன நேரம் கூட பேசி இருக்க மாட்டாங்க சார்னு சொன்னார்.
நிஜமா இதுக்கு விடை தெரிஞ்சே ஆகணும்னு நினைக்கற மாமான்ஸ்.. மச்சான்ஸ் எல்லாரும் இந்த ஷோவை பாருங்க...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications