மாதம்பட்டி ரங்கராஜனுக்கு வந்த நெருக்கடி! ஜாய் கிரிஸில்டா வெற்றிக்கு எதிர்நீச்சல் சீரியல் நடிகை வாழ்த்து
சென்னை: நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட விவகாரம், கோலிவுட்டில் பெரும் தலைப்புச் செய்தியாக இருந்த நிலையில், இறுதியாக இந்தச் சிக்கல் ஒரு 'ப்ரீ க்ளைமேக்ஸ்' கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது திருமணம் செய்ததை, பிறந்த ஆண் குழந்தை தன்னுடையதுதான் என்பதையும் ரங்கராஜ் ஒத்துக்கொண்டதால், ஜாய் கிரிஸில்டாவின் நீண்ட போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகப் பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கிரிஸில்டாவின் விடாப்பிடி போராட்டம்
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது முதல் இந்த விவகாரம் பூதாகரமானது. ஜாய் கிரிஸில்டா பற்றி பேசுவதைத் தடுக்க ரங்கராஜ் எடுத்த சட்ட முயற்சிகளுக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டைப் போட்டது. விசாரணைகள் நடந்தபோது, ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார். ஆனால், ஜாய் கிரிஸில்டா நிறைமாத கர்ப்பிணியாகத் தனியாக ஆஜரானது, பார்ப்பவர்களை அவர்மீது இரக்கம் கொள்ள வைத்தது.
பராமரிப்பு செலவு
விசாரணையை முடித்த சில நாட்களிலேயே, ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் தனக்கு மாதா மாதம் 6.50 லட்சம் ரூபாய் பராமரிப்புச் செலவுக்காகக் கொடுக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்து, அடுத்தக்கட்ட அழுத்தத்தைக் கொடுத்தார்.
மாதம்பட்டி ரங்கராஜின் ஒப்புதல்
இப்படித் தனக்கு என்னவெல்லாம் வழிகள் இருக்கோ அத்தனை வாயிலாகவும் கிரிஸில்டா போராடிக்கொண்டிருந்தபோது அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இதனால் ரங்கராஜ் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஒருவழியாக அவர் உண்மையை ஒத்துக் கொண்டார். ஜாய் கிரிஸில்டாவுடனான இரண்டாவது திருமணத்தையும், பிறந்த குழந்தை தன்னுடையதுதான் என்பதையும் ரங்கராஜ் ஒத்துக் கொண்டார்.
இருப்பினும், ரங்கராஜை கைது செய்யலாம் என்று காவல்துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரைத்ததால், அடுத்து இதில் என்ன நடக்கும் என்றக் கேள்வி எழுந்திருக்கிறது.

வாழ்த்து தெரிவித்த நடிகை
நீண்ட போராட்டம் நடத்தி ஜாய் கிரிஸில்டா நீதியைப் பெற்றுவிட்டார் என்றுப் பலரும் அவருக்குப் பாராட்டும் வாழ்த்தும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில், நடிகையும், எழுத்தாளருமான கொற்றவை, ஜாய் கிரிஸில்டாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். அவர் தனது வாழ்த்தில், "விதி படத்தில் வரும் பெண்ணை போன்று போராடி நீதி பெற்றுள்ளீர்கள். அவதூறு பேசிய வாய்கள் எல்லாம் இப்போது மிக்சர் சாப்பிடும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கூலான வாழ்த்தை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் வைத்திருக்கிறார். நடிகை கொற்றவை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாயின் நெகிழ்ச்சி பதிவு
முன்னதாக, ஜாய் கிரிஸில்டா தனது ஸ்டோரியில், "நான் எனது மகனைத் தவறாக ஒருபோதும் வளர்க்கமாட்டேன். அவனை ஒரு போராளியாக நான் வளர்த்தெடுப்பேன். மை லிட்டில் சிம்பா! உன்னைச் சுற்றியிருக்கும் பெண்களுக்கு நீ பாதுகாப்பாகவும், அவர்களிடம் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும்" என்றுப் பதிவிட்டிருந்தார்.
கூலான ரங்கராஜின் ரீஆக்சன்
இவ்வளவுப் பெரிய சர்ச்சையில் சிக்கிய போதும், மாதம்பட்டி ரங்கராஜ் தனதுச் சமூக வலைதளங்களில் கூலாகவேக் காணப்படுகிறார். ரங்கராஜ் சமீபத்தில் வெளியிட்டப் பதிவில், "A place where love is served just like food... That is our journey." (அன்பு உணவு போலப் பரிமாறப்படும் ஒரு இடம்... அதுவே எங்கள் பயணம்) என்றுப் பதிவிட்டிருந்தது, இந்த விவகாரம் தனக்குப் பெரிதல்ல என்பது போலக் கடந்து செல்வதைக் காட்டியது.
நீண்டப் போராட்டத்திற்குப் பிறகுக் கிடைத்த இந்த வெற்றிக்காக ஜாய் கிரிஸில்டாவுக்குப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், அடுத்து வரவிருக்கும் நீதிமன்ற நடவடிக்கையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ரசிகர்கள், ரங்கராஜ் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாமல் குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றும் அக்கறையோடுச் சொல்லி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications