இரண்டாம் கல்யாணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்? முதல் மனைவி இதுவரை பேசலயே? இதுதான் விஷயமா?: பிரபலம்
சென்னை: பிரபல சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருந்தார்.. தற்போது ஜாய் தன்னுடைய இன்ஸ்டாவில், என்னுடைய போன் நம்பர் ஹேக் செய்யப்பட்டுவிட்டதால், அந்த எண்ணிலிருந்து வரும் எந்தவொரு அழைப்பு அல்லது குறுஞ்செய்திக்கும் பதிலளிக்க வேண்டாம்.. என்னுடைய நம்பர் யாரிடம் உள்ளதோ, அவர்கள் அந்த நம்பரை டெலிட் செய்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. இந்நிலையில், இதுகுறித்து பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "திடீரென ஃபேமஸ் ஆகிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்.. விக்ரம் வெற்றி விழாவில் இதை ஆரம்பித்து வைத்ததே கமல்ஹாசன்தான்..

அதற்கு பிறகுதான், அனைத்து விவிஐபிகள், அரசியல்வாதிகளின் வீட்டு விசேஷங்கள் முதல் அனைத்து பிரபலங்களுக்கும் சமையல் செய்யக்கூடியவராக உயர்ந்தார்.. தனி ஃபிளைட்டில் சென்று சமைத்து வரும் அளவுக்கு பாப்புலர் ஆனார்..
நைட்டி டிரஸ் - செம லுக்
சமையல் கலை சிறந்த கலையாகும்.. இவரே போய் நிறைய இடங்களில் சமைப்பார் என்றால், சமைத்ததை போய் ருசித்து பார்த்து கொண்டிருக்கிறார்.. பிரபலங்களுக்கு சமைத்தே, 1200 கோடி சம்பாதித்துவிட்டதாகவும், 10, 12 கார்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதிலும் ஒவ்வொரு காரும் 60, 70 கோடி ரூபாய் கார்களாம்..
மாதம்பட்டி ரங்கராஜின் டிரஸ், நடையே எப்போதுமே செம லுக்காக இருக்கும்.. இதற்கெல்லாம் அவரது காஸ்ட்யூம் டிசைனர் ஜாய்தான் காரணம்.. பிக்பாஸில் கமல்ஹாசன் நைட்டியில் சுருக்கு வைத்ததுபோல, நீளமான கவுனில் சுடிதார் போலவும் காஸ்ட்யூம்களை போட்டுட்டு வந்தார். அதுமாதிரியே மாதம்பட்டிக்கும் தைத்து தந்து, ஆடைகளால் பிரபலமாக்கிவிட்டார்.
நெருக்கடியில் திருமணம்?
இந்த பெண்மணியைதான் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளார்.. தனக்கு ஏற்கனவே கல்யாணமாகி, குழந்தைகள் இருப்பதை மாதம்பட்டி மறந்துவிட்டார், மறைத்துவிட்டார்..
கிறிஸ்துவ பெண்ணுக்கு முறைப்படி சர்ச்சில் தாலி கட்டியிருக்க வேண்டும். ஆனால், தான் இந்து என்பதால், கோவிலில் குங்குமம் வைத்து, மாலை அணிவித்துள்ளார். குழந்தை வயிற்றில் 6 மாதம் ஆகிவிட்டதால், நீண்ட நாளைக்கு மறைக்க முடியாது என்பதால், ஜாய் தந்த நெருக்கடியில் இந்த திருமணம் நடந்திருக்கலாம்.
6 மாத கர்ப்பம், மிஸ்டர், மிஸஸ் மாதம்பட்டி என்றெல்லாம் பதிவிட்டு, மாலை அணிந்துள்ள போட்டோவையும் போஸ்ட் செய்துள்ளார் ஜாய்.. ஆனால் யார் கர்ப்பம் என்று தெரியவில்லை.
முதல் மனைவி புகார் தருவாரா
இப்போது முதல் மனைவி புகார் தந்தால், என்னாகும் என்ற சலசலப்பு சோஷியல் மீடியாவில் நடந்து வருகிறது.. ஆனால், முதல் மனைவியும், மாதம்பட்டியும் இதை பற்றி எதுவுமே பேசவில்லை. முதல் மனைவி மாதம்பட்டியின் மாமா மகள் என்கிறார்கள்.. 2 குழந்தைகளும் உள்ளபோது, இதுவரை முதல் மனைவி இதை பற்றி எதுவுமே பேசவில்லை..
ஜாய் மட்டும்தான் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.. ஒருவேளை முதல் மனைவி புகார் தந்தால், மாதம்பட்டி மீது எப்ஐஆர் போட்டுத்தான் ஆகணும்.. அப்படி எப்ஐஆர் பதிவிட்டால், மாதம்பட்டியை நிச்சயம் கைது செய்வார்கள்..
செட்டில்மென்ட் செய்யப்பட்டதா?
இப்படிப்பட்ட சூழலில்தான், "என்னுடைய போனை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள், அதனால் என்னுடைய செல்போன் அழைப்பு, மெசேஜ் வந்தால், அதை டெலிட் செய்துவிடுங்கள்" என்று ஜாய் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவுதான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது..
ஒருவேளை மாதம்பட்டி ஜாய்க்கு பணம் தந்து செட்டில் செய்திருப்பாரா? அல்லது முதல் மனைவியை சமாதானம் செய்துவிட்டாரா? என்றெல்லாம் யூகங்கள் சோஷியல் மீடியாவில் ரெக்கை கட்டி பறக்கின்றன..
சரிந்த சாம்ராஜ்ஜியம்
இப்போதாவது மாதம்பட்டி மனைவி வாய் திறப்பாரா? மாதம்பட்டி ரங்கராஜ் ஏதாவது மறுப்பு சொல்லியாவது விளக்க அறிக்கை தருவாரா? என்று இணையத்தில் கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் எப்படியிருந்தாலும் முதல் மனைவி சட்டப்படி புகார் தந்தால் மட்டும்தான், மாதம்பட்டி மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
எப்போதுமே உச்சத்தில் வரும்போது, பிரபலமாகி கொண்டே வரும்போது, மிகவும் கவனமாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.. காரணம் அந்த நேரத்தில்தான், மற்றவர்களின் கவனம் குவிந்திருக்கும்.. அதை கவனிக்காமல் தவறு செய்துவிட்டால், இப்படியான சிக்கல்கள் வரத்தான் செய்யும்.. அந்தவகையில், மாதம்பட்டி ரங்கராஜ் என்ற சாம்ராஜ்ஜியம் சரிந்துவிட்டது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications