குக் வித் கோமாளியில் 18+ காமெடி! “கொழுந்தியா” இல்லையே என உருகிய மாதம்பட்டி ரங்கராஜன்! புது பஞ்சாயத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே குடும்பம் முழுக்க சேர்ந்து சிரிக்க பார்க்கும் ஒரு ஃபீல். அதிலும் 7வது சீசன் ஆரம்பித்ததிலிருந்து வழக்கம்போல கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது அந்த கலகலப்பே கொஞ்சம் ஓவராகிப் போய்ச்சா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
இந்த சீசனின் புதிய ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. அதில் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் போட்டியாளரான மஞ்சுநாதனிடம் பேசும் போது சொன்ன சில காமெடி வசனங்கள் தான் இப்போது சர்ச்சைக்கு காரணம்.

மாதம்பட்டி ரங்கராஜனின் வருத்தம்
ப்ரோமோவில், மஞ்சுநாதனும் அவரது மனைவியும் சமைத்து கொண்டிருக்கும்போது, அங்கே போய் பேச்சு ஆரம்பிக்கும் ரங்கராஜிடம், மஞ்சுநாதன் தன்னுடைய சமையல் பெருமைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது "நான் இப்படி சமைப்பது எல்லாம் உங்க அக்காவுக்குத்தானே... என் மாமனார் தான் இவளுக்கு பிறகு முயற்சி எடுக்காம விட்டுட்டாரு... எனக்கு ஒரு கொழுந்தியாவே இல்லை" என்று வருத்தப்படுவது போல பேசுகிறார்.
அதற்கு மஞ்சுநாதனின் மனைவி உடனே, "கடைசி மகளை கல்யாணம் செய்து விட்டதுக்குப் பிறகு இப்படி சொல்லுவது சரியா?" என்று கேட்கிறார். இதில் இன்னும் ஹைலைட் என்னனா, மஞ்சுநாதன் சொன்ன உவமை தான். எனக்கு ரெண்டு அண்ணி மாதிரியே இருக்காங்க அண்ணி என்பது அம்மா மாதிரி ஆனா குழந்தையா என்பது வேறதானே... "கொழுந்தியா இல்லாத வீடு... சிக்கன் பிரியாணியில் சிக்கன் இல்லாத மாதிரி!" என்று சொல்ல அதற்கு மாதம்பட்டி ரங்கநாதனும் சிரிச்சு கொண்டிருக்கிறார்.
இதுல தான் நெட்டிசன்கள் பிடிச்சுக்கிட்டாங்க! இந்த டயலாக் கேட்டவுடன் நெட்டிசன்கள், அண்ணி அம்மா மாதிரி என்றால் கொழுந்தியா தங்கச்சிக்கு அல்லது பிள்ளைக்கு சமம் தானே ஆனால் கொழுந்தியாளை பற்றி இப்படி பேசிக்கலாமா? "இது காமெடியா இல்ல, ரொம்ப ஓவரா போயிருச்சு!" கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
அதிலும் மஞ்சுநாதன் பேசியதை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜனும் எனக்கு கொழுந்தியாளே இல்ல என்று சொல்ல அதற்கு மஞ்சுநாதன் உங்க மாமனாரும் அதற்குப் பிறகு வேலை பார்க்கலையா என்று கிண்டலாக கேட்க, அதற்கு ஆமாம் எங்க வீட்டில ஒத்தைக்கொரு பொண்ணு என்று மாதம்பட்டி ரங்கராஜன் அலுத்து கொள்கிறார். இதைப் பார்த்து கடுப்பான ரசிகர்கள் இது என்ன நிகழ்ச்சி? 18 பிளஸ் கண்டன்டு தான் சமையல் நிகழ்ச்சியிலும் பேசுவீங்களா என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.
ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜன் முதல் மனைவி இருக்கும் போது ஜாய் கிரிஸில்டாவுடன் திருமணம் செய்தது, அவருடைய குழந்தை சர்ச்சைகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் ஜாய் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜன் தான் தந்தை என்று டி என் ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டும் வந்திருக்கிறது. இதற்கு இடையில் இவருக்கு இன்னொரு கொழுந்தியா வேற தேவையா? என்று சிலர் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications