நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட ஒருபக்க அறிக்கை! ஆனால் ஜாய் கிறிஸ்டில்லா வெளியிட்ட பதிலடி
சென்னை: சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோருக்கு இடையே நடக்கும் இரண்டாம் திருமணச் சர்ச்சை நாளுக்கு நாள் சூடு பிடித்துக்கொண்டே இருக்கிறது. இந்த விவகாரம், இப்போதெல்லாம் தனிப்பட்ட பிரச்சினை என்ற எல்லையைக் கடந்து, சட்ட ரீதியிலான போராட்டமாகவும், சமூக வலைதளச் சண்டையாகவும் மாறிவிட்டது!

சர்ச்சையின் பின்னணி
சமூகத்தில் பெரிய அந்தஸ்து உடையவராகக் கருதப்படும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ரங்கராஜ், முதல் மனைவி இருக்கும்போது விவாகரத்து கூடப் பெறாமல் ஜாய் கிரிஸில்டாவுடன் நெருங்கிப் பழகி, அவரைக் கர்ப்பமாக்கி, திருமணம் செய்துகொண்டு இப்போது ஏமாற்றிவிட்டார் என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
காவல் ஆய்வாளரிடம் புகார்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா தன்னைப்பற்றி அவதூறு பரப்பக் கூடாது என்று கோரி, ரங்கராஜ் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். ஆனால், ரங்கராஜுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
மகளிர் ஆணையத்தில் புகார்
காவல் ஆணையர் அலுவலகத்தில் நடவடிக்கைத் தாமதமானதால், அப்செட் ஆன ஜாய் கிரிஸில்டா, கடந்த வாரம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், ரங்கராஜ் திருமண மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னைப் போல் 10 பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
பதிலடி கொடுத்த ரங்கராஜ்
இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, அக்டோபர் 15ஆம் தேதி மகளிர் ஆணையத்தில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்தச் சூழலில்தான், ரங்கராஜ் ஒரு பக்க நீளத்துக்கு அறிக்கை வெளியிட்டு, தன்னைப்பற்றிப் பேசி வரும் அனைவருக்கும் பதில் அளித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கை
"திருமதி ஜாய் கிரிஸில்டா எழுப்பி வரும் சர்ச்சைகளைத் தீர்த்து வைக்குமாறு பலரும் தன்னைத் தொடர்பு கொண்டு வருகின்றனர்". "எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. உண்மை சட்டத்தின்படியே நிலைநாட்டப்படும். இந்தச் சர்ச்சையைத் தீர்த்துக் கொள்ள நான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்". "இந்த பிரச்சினை தொடர்பாக நான் ஊடக விசாரணை அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ ஊக்குவிக்கவோ விரும்பவில்லை". "ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பது போன்று நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காண ஒருபோதும் நான் விரும்பவில்லை".
சர்ச்சைகளுக்கு மத்தியிலும், ரங்கராஜ் தனது தொழிலில் முழு கவனம் செலுத்தி, டெல்லியில் உணவகம் திறந்த வீடியோவும் வைரலான நிலையில், அவர் எப்போதும் கூலாகத் தனது பிசினஸை விரிவுபடுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது.
ஜாய் கிரிஸில்டாவின் ஒரே வரி பதிலடி
மாதம்பட்டி ரங்கராஜ், நீதிமன்ற நடவடிக்கையை மட்டுமே நம்புவதாகக் கூறி, ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்ட அதே நேரத்தில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரே வரியில் பதிலடி கொடுத்திருக்கிறார்!
அவர் ரங்கராஜை மறைமுகமாகக் குறிப்பிட்டு, "சட்டத்திற்கு முன் நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது Husband @MadhampattyRR" என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சட்டத்தின் பிடியில் இருந்து ரங்கராஜ் தப்பிக்க முடியாது என்று ஆவேசத்துடன் அவர் பதிவிட்டிருப்பது, இந்தச் சர்ச்சை விரைவில் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே முடிவுக்கு வரும் என்பதை உணர்த்துகிறது.
ரங்கராஜின் நீண்ட அறிக்கைக்கு, ஜாய் கிரிஸில்டாவின் இந்த ஒரு வரி பதிலடி, சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications