மீண்டும் வரும் இடுப்பழகி மாதுரி தீட்சித்.. இம்முறை வெப் சீரிஸில் கலக்க ரெடி!
மும்பை: ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். அவருடைய டான்ஸ் என்றால் பார்ப்பவர்களுக்கு அப்படி ஜொள்ளு.. இப்போது குடும்பத் தலைவியாகி அழகாக குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரும் தற்போது வெப் சீரிஸ் பக்கம் தலை காட்டப் போகிறாராம்.
இதுதான் அவர் நடிக்கப் போகும் முதல் வெப் சீரிஸாகும். குடும்பப் பாங்கான கதையாம். கரண் ஜோஹர்தான் தயாரிக்கப் போகிறார். இதற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. நெட்பிளிக்ஸில் இடம் பெறப் போகிறது இந்த வெப் சீரிஸ்.
வெப் சீரிஸ் பக்கம் வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அந்தக் காலத்து இடுப்பழகி மாதுரி தீட்சித்.

வியப்பு ஆர்வம்
இதுகுறித்து அவர் சொல்கையில், வெப் சீரிஸில் நடிக்கவிருப்பது வியப்பாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது. ஒரு நடிகையாக,எதிலும் எனது பங்களிப்பைக் கொடுக்க நான் தயாராக இருக்க வேண்டும்.அதற்காக முழு அளவில் நான் தயாராக இருக்கிறேன் என்கிறார்.

நியூயார்க் ஸ்ரீராவ்
அதிக அளவிலான மக்களை சென்றடைய வெப் சீரிஸ்கள் உதவுகின்றன. அந்த வகையில் இந்த சீரிஸும் மக்களிடையே சென்றடையும் என நம்புகிறேன்.இந்த தொடரின் கதையை நியூயார்க்கைச் சேர்ந்த எழுத்தாளர் இயக்குநர் ஸ்ரீராவ் எழுதியுள்ளார். மிகவும் அருமையான கதை. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் குறைவிருக்காது. எப்படா ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்று ஆவலாக காத்துள்ளேன் என்கிறார் மாதுரி.

இன்டர்நெட் ஆட்சி
மேலும் அவர் கூறுகையில், இன்று உலகையே ஆட்சி செய்வது இன்டர்நெட்தான். அடுத்த இடம் பொழுது போக்குத்துறைக்குத்தான் போகும். இரண்டிலும் நான் முத்திரை பதிப்பேன். திரைத்துறையில் பதித்து விட்டேன். அடுத்து இன்டர்நெட்டிலும் பதிக்க இந்த சீரிஸ் உதவும். கலைஞர்களுக்கு இந்த வெப் சீரிஸ்கள் மிகப் பெரிய வரப் பிரசாதம் என்றார் மாதுரி.

களைக்கட்டும் வெப் சீரிஸ்
நிறையப் பேர் இப்போது வெப் சீரிஸ் பக்கம் வந்தவண்ணம் உள்ளனர். கஜோல் வருகிறார். பிரியாமணி வந்து விட்டார். அந்த வரிசையில் மாதுரி தீட்சித்தும் இணைகிறார். இன்னும் யாரெல்லாம் வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் யார் வந்தாலும் வரவேற்க ரசிகர்கள் தயார்தான்.. என்னங்க சொல்றீங்க.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications