சம்பாதிச்சு என்னத்த பண்ண போற? உடனே 1000 பேருக்கு உதவிய மதுரை முத்து.. அசந்து நின்ற திருப்பரங்குன்றம்
மதுரை: விஜய் டிவியின் பிரபலம் மதுரை முத்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அருகில் உள்ள ஏழை எளியவர்கள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. இந்த வருடம் எல்லோருக்கும் சந்தோஷமாக அமையவில்லை என்றாலும், அமைய வைப்போம் என்று மதுரை முத்து கூறினார்.
மதுரையைச் சேர்ந்த, விஜய் டிவியின் பிரபலம் மதுரை முத்துவின் வீடு, திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளத்தில் உள்ளது.. டி. அரசபட்டி என்ற ஊரில் பிறந்தவர் முத்து, தன்னுடைய பெயருடன் சொந்த ஊரின் பெயரையும் இணைத்து கொண்டு, மதுரை முத்து என தன்னை அடையாளப்படுத்தி கொண்டார்

மதுரை முத்து: டிவி நிகழ்ச்சிகள் தவிர, வெளிநாடுகளிலும் ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள மதுரை முத்து, அதன்மூலம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபலமாக இன்று விளங்குகிறார்.
மதுரை முத்து, மறைந்த மனைவி லோகா மற்றும் தன்னுடைய தாய் - தந்தைக்கு சொந்த ஊரான மதுரையில் உள்ள வீட்டில், கோவில் கட்டி வருகிறார். இதுகுறித்த அறிவிப்பை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ வெளியிட்டு சமீபத்தில் அறிவித்திருந்தார். இயல்பிலேயே கருணை குணம் கொண்ட முத்து, சமீபகாலமாகவே முக்கியமான பண்டிகை நாட்களில், தன்னுடைய வீட்டு பகுதிகளில் வசித்து வருவோருக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.
பச்சரிசி: அந்தவகையில், பொங்கல் பண்டிகையை, தன்னுடைய வீட்டில் அருகிலுள்ள ஏழை எளியவர்கள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவியாக கரும்பு, வேட்டி, சேலைகள், ஒரு கிலோ பச்சரிசியை முத்து வழங்கினார்.
இது குறித்து மதுரை முத்து சொல்லும்போது, "நான் இருக்கும் பகுதி கிராம பகுதி. நான் தினமும் வாக்கிங் போகும்போது, என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, ஆதரவற்ற முதியவர்களை தேர்ந்தெடுத்து, என்னால் முடிந்த உதவியை செய்வது வழக்கம்.. இந்த முறை அவர்களுக்கு கரும்பு, வேஷ்டி சேலைகள் கொடுத்திருக்கிறேன்.. அவர்களும் சந்தோஷமாக கொண்டாடட்டும்,
பப்ளிசிட்டி: இதெல்லாம் பப்ளிசிட்டிக்காக இல்லை.. சின்ன ஒரு மனதிருப்திக்காக என்னைப் பார்த்து நான்கு பேர் செய்தால் அதுதான் எனக்கு வெற்றி. நிறைய பேர் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று சம்பாதிச்சு என்னத்த பண்ணப் போற என கேட்டு இருக்கிறார்கள்.
இப்போது இந்த உதவிகளை செய்கிறேன். திருமங்கலம் அரசப்பட்டி எனது சொந்த ஊர்.. அங்கு என்னுடைய அப்பா, அம்மா, மனைவிக்காக கோயில் கட்டியுள்ளேன். இன்னும் 15 நாட்களில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதில் 700 க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ளேன்.
சின்ன சந்தோஷம்: நாம் கண்ணில் பார்க்கிறவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்தால் என்னுடைய பெற்றோர்களே என்னை வாழ்த்துவது போல் சின்ன சந்தோஷம்.. இந்த வருஷம் எல்லோருக்கும் சந்தோசமாக அமையவில்லை என்றாலும் அமைய வைப்போம் பொங்கல் வாழ்த்துக்கள்" என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications