என்னங்கப்பா இது.. கூண்டோடு இப்படி டிவி தாவிட்டீங்களா.. அப்ப சன்னு என்னாகும்??
சென்னை: கூண்டோடு கைலாசம் என்று கேள்விபட்டுள்ளோம்.. அதேபோல கூண்டோடு டிவி தாவியிருக்கிறார்கள் மதுரை முத்துவும், நம்ம ஆதவனும். இவர்கள் இருவரும் அப்படியே அலேக்காக ஜம்ப் ஆகியிருப்பது காமெடிப் பிரியர்களுக்கு ஹேப்பிதான் என்றாலும் கூட அதுக்காக இப்படியாப்பா திடீர்னு தாவுவீகன்னு அங்கலாய்ப்பவர்களும் உள்ளனர்.
அதாவது மகா ஜனங்களே.. ஒரு காலத்தில் டிவியில் காமெடிக்கென்று எந்தப் போட்டியும் இல்லாமல் ரொம்ப டிரை ஆக போய்க் கொண்டிருந்தது. அந்த சமயம் பார்த்து விஜய் டிவி அடிச்சுச்சு பாருங்க ஒரு அப்பாயின்ட்மென்ட்.. அதாங்க கலக்கப் போவது யாரு.. அப்படி ஒரு புரோகிராமை அதுவரைக்கும் ஒரு பயலும்.. அதாவது ஒரு டிவியும் போட்டதில்லை.. தமிழில்.
இந்த வகையில் விஜய் டிவிக்கு செமத்தியான லக்கி பிரைஸ் அடித்தது. அத்தனை பேரும் இந்த புரோகிராம் பக்கம் டியூன் ஆனார்கள். கலக்கப் போவது யாரு முதல் சீசன் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் வந்து அசத்தியவர்கள்தான் இந்த மதுரை முத்து, ஈரோடு மகேஷ், சிவகார்த்திகேயன், பிறகு ரோபோ சங்கர் இத்யாதி இத்யாதி காமெடியர்கள்.

அசத்தப் போவது யாரு
இந்த புரோகிராம் தொடர்ந்து வெற்றி நடை பெற்று பல சீசன்களைக் கண்டது. விஜய் டிவியின் அடையாளமாகவும் மாறிப் போனது. இந்த வெற்றி பார்முலாவைத்தான் பின்னர் சன் டிவி அப்படியே காப்பி அடித்து அசத்தப் போவது யாரு என்று அடாப்ட் செய்து போட்டது. ஆனால் அதை தொடர்ந்து நடத்த முடியாமல் விட்டு விட்டனர். இருப்பினும் அதில் வந்த மதுரை முத்துவை டிவி தக்க வைத்துக் கொண்டது.

நானாவது சொல்லிட்டு வந்தேன்
மதுரை முத்துவும், கூடவே ஆதவனும் சேர்ந்து சில புரோகிராம்களை சன் டிவியில் தொடர்ந்து செய்து வந்தனர். அதேபோல தேவதர்ஷினியுடன் இணைந்து ஒரு புரிகிராமை மதுரை முத்து கொடுத்தார். இதெல்லாம் இப்போது நின்று போய் விட்டன. இந்த நிலையில்தான் தற்போது தாய்க் கழகத்திற்கே திரும்பி வந்துள்ளார் மதுரை முத்து. கூடவே ஆதவனையும் அள்ளிக் கொண்டு வந்து விட்டார். ஈரோடு மகேஷும் இவர்களுடன் இணைய பிறகென்ன காமெடி கலாட்டாதான்.

ட்ரிபிள் மீனிங் பேச்சு
இந்த ரம்யா பாண்டியன் வேற இவர்களுடன் இணைந்துள்ளார். கூடவே வம்புக்கார வனிதாவும். இவர்கள் இணைந்திருப்பது கலக்கப் போவது யாரு சீசன் 9. சும்மாவே ஆதவனும், மதுரை முத்துவும் சேர்ந்து டபுள் மீனிங்கில் கலகலப்பாக்குவார்கள்.. இப்ப ரம்யா பாண்டியன் வேற இணைந்துள்ளார். என்னெல்லாம் ஆகப் போகுதோ.. டிரிபிள் மீனிங்கில் மிரட்டுவார்களோ என்னவோ.. பார்க்கலாம்.. !

மூஞ்சை சிரிச்ச மாதிரி
டிவி சீரியல்களை பார்த்து பார்த்து முகத்தை இறுக்கமா வச்சுக்கிட்டு இருந்தவங்களுக்கு இந்த காமெடி கூட்டணி மூஞ்சை சிரிச்ச மாதிரி வச்சுக்க ஏன் சிரிச்சுகிட்டே இருக்க கூட வச்சால் நல்லாத்தான் இருக்கும். எங்க இதை சிரிச்ச மாதிரி படிச்சு சிரிச்சுகிட்டே முடிங்க பார்க்கலாம். அதுக்குள்ள கலக்கப் போவது யாரு சீசன் ஆரம்பிச்சுரும்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications