Magarasi Serial: ஐ... மகராசி சீரியலில் பிரியமானவள் அழகு அம்மா!
சென்னை: சன் டிவியில் மகராசி என்று ஒரு புத்தம் புது சீரியல் இந்த மாதம் 21ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இன்னும் நேரம் அறிவிக்கவில்லை என்பதால், எந்த நேரத்துக்கு ஒளிபரப்பாகும் சீரியல் எது முடிந்து இந்த தொடர் ஆரம்பிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
நாயகி சீரியல் முடியும் தருவாயில் பயணிப்பதாக சீரியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்றாலும் எப்போது ஒளிபரப்பாகும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

அம்மா பிரியமானவள்
பிரியமானவன் சீரியலில் அம்மாவாக நடித்த அம்மா நடிகை இந்த சீரியலிலும் அம்மாவாக நடிக்கிறார். எனவே, பிரியமானவள் சீரியலை இவருக்காக ரசித்துப் பார்த்த மக்கள் மகராசி சீரியலிலும் இவரை பார்க்க வெகு ஆர்வமாக உள்ளனர்.

சீரியல் நாயகி
என்னதான் நாயகி சீரியல் முடிந்துவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு கடைசிக் கட்டத்தில் சீரியல் பயணிப்பதாக தோன்றினாலும், முடிந்து விடும் என்று சொல்ல முடியவில்லை. இன்னும்கூட சன் டிவி சீரியல்களில் ரேட்டிங் நம்பர் ஒன்னில்தான் இருக்கிறது.

வழக்கமான சீரியல்
எப்போதும் போல அழுகை, கோபம், ஆத்திரம் ,கொலை, கொள்ளை.அடுத்தவர் குடியைக் கெடுப்பது, வயிற்றிலிருக்கும் கருவை அழிக்க கங்கணம் கட்டிக்கிட்டு திரியறது, வீட்டுக்கு வந்த மருமகளை ஆரத்தி எடுக்கும்போதே உன்னை இந்த வீட்டை விட்டு துரத்துவேன் என்று சபதம் எடுப்பது என்று கதை இல்லாமல் இருந்தால் பார்க்கறவங்க குடும்பம் நல்லா இருக்கும்.

சன் டிவி சீரியல்
மகராசி சீரியல், அவங்க வீட்டு மருமகள் என்று நினைத்து வேறு ஒரு பெண்ணை மருமகளாக வரவேற்கும் காட்சி ப்ரோமோவாக வெளியாகி வருகிறது. இந்த குடும்பத்துக்கு நான் மருமகள் இல்லை இதை நான் இவர்களிடம் எப்படி சொல்வேன் என்று நாயகி புலம்பும் காட்சியும் ப்ரோமோவில் இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications