கல்பனா முறைக்க.. மகாவும் அக்னிப் பார்வை பார்க்க.. கடைசியில் கலகல.. ஹய்யோ ஹய்யோ!
சென்னை: சன் டிவியின் ரோஜா,லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சேர்ந்து மெகா சங்ககம் என்று ஒளிபரப்பாகிட்டு வருது.
ஊர்க்காரங்க இந்த ரெண்டு குடும்பத்தையும் திருவிழாவுக்கு அழைக்க ரெண்டு வீட்டு மருமகள்களான கல்பனா, மகாலட்சுமி இவங்க ரெண்டு பேரின் உதவியைத்தான் முதலில் கேட்டு இருக்காங்க.
இவங்க ரெண்டு பேரும் சமாதானம் செய்துதான் கடைசியில் ரெண்டு குடும்பத்து பெரியவங்களும் திருவிழாவுக்கு வர சம்மதிச்சு இருக்காங்க.

பூர்ண கும்பம்
பூசாரி ரெண்டு வீட்டு மருமகள்களையும் கூப்பிட்டு, உங்களாலதாம்மா இந்த திருவிழா சாத்தியமாச்சு. இந்த பூர்ண கும்ப முதல் மரியாதையை ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கிக்கோங்கன்னு சொல்றார்.

அன்னபூரணி அம்மா
பூர்ண கும்பத்தை மகாலட்சுமியும் கல்பனாவும் சேர்ந்து வாங்கிக்கறாங்க. அதுக்கு முன்னாடி ஒரு குட்டி சீன் வச்சாங்க பாருங்க.. அது சூப்பர். அதாவது மகாவும், கல்பனாவும் நேருக்கு நேர் கோபப் பார்வை பார்த்தபடி வந்தனர். ஆஹா சண்டை வரப் போகுது போலயேன்னா நினைச்சா.. பக்கத்துல வந்ததும் கலகலவென சிரிச்சு ஜாலியாக்கிட்டாங்க.

அன்பான பேச்சு
நம்ம ரெண்டு குடும்பமும் பார்த்துக்கிட்டு எத்தனை வருஷம் ஆச்சு மகான்னு கல்பனா சொல்ல, இனியாவது வருஷா வருஷம் திருவிழாவுல சந்திக்க ஏற்பாடு செய்வோம்னு சொல்றாங்க மகாலட்சுமி. அன்னபூரணி அம்மா கோபம் இன்னும் தனியவே இல்லைன்னு மகாலட்சுமி சொல்றாங்க. மருமகள்களாச்சே,, குடும்பப் பாசம் இருக்காதா பின்னே.

உங்க வீட்டுக்கு
பூர்ண கும்பத்தை உங்க வீட்டுக்கு எடுத்துட்டு போங்க மகான்னு கல்பனா சொல்ல, இல்லை உங்க வீட்டுக்கு எடுத்துட்டு போங்க கல்பனா.. அன்னபூரணி அம்மா சந்தோஷப் படுவாங்கனு மகாலட்சுமி சொல்றாங்க. ஆமாம்... ரொம்ப தேங்க்ஸ் மகான்னு சொல்றாங்க கல்பனா.

ஐயா
மகா மகாலிங்கம் ஐயா மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சுதா..யார் அதை செய்தாங்கன்னு தெரிஞ்சுதான்னு கல்பனா கேட்க..இன்னும் இல்லை கல்பனா...இந்த திருவிழா முடியறதுக்குள்ள அந்த உண்மை தெரிஞ்சுரும்னு அந்த அம்மனை நான் நம்பறேன்னு சொல்றாங்க மகாலட்சுமி.
இவங்க ரெண்டு பேரும் பேசிக்கறதை மறைஞ்சு நின்னு கேட்கறான் ஒருத்தன்...அவன்கிட்டதான் விஷயம் இருக்கு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications