Maharasi Serial: சின்னத் திரைக்கு வந்த "நம்பியார்".. இவர் ரொம்ப அழகு.. மிரட்டலும் செம!
சென்னை: நம்பியாருக்கும், வில்லத்தனத்துக்கும் எப்பவுமே ரொம்பப் பொருத்தம்தான் போல.. பெரிய திரையைக் கலக்கிய நம்பியாருக்கு ஈடு இணையே கிடையாது. இப்போது சின்னத் திரையில் ஒரு நம்பியார் கலக்க வந்துள்ளார்.
நம்பியார்னதும் முறுக்கு மீசை, உருட்டுப் பார்வை, மிரட்டல் விழிகள்னு தப்பா நினைச்சுடாதீங்கப்பா.. இது பெண் நம்பியார்.. ஆமாங்க,, அஸ்வினி நம்பியாரைத்தான் சொல்கிறோம்.
அது யாரு அஸ்வினி நம்பியார்னு மோட்டுவளையைப் பார்க்கும் மக்களே உங்களுக்காக ஒரு தகவல் .. இவர் சினிமாவில் நடித்த அஸ்வினி.. அவர்தான் இப்போது சின்னத்திரையைக் கலக்க வந்துள்ளார் வில்லத்தனத்தில்.. இவரது முழுப் பெயர்தான் அஸ்வினி நம்பியார்.

புது நாத்து
1991ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களை மயக்க வைத்த மரிக்கொழுந்துதான் இந்த அஸ்வினி. ஆமாங்க, அந்த ஆண்டில் வெளியான புது நெல்லு புது நாத்து படம்தான் அஸ்வினிக்கு முதல் படம். கிராமத்து மரிக்கொழுந்து கேரக்டரில் அனைவரையும் வசீகரித்தவர்.

ஆளாகி நின்றவளே
அழகாலும், அழகான நடிப்பாலும். அதன் பிறகு கிழக்கு சீமையிலே, தூரத்து சொந்தம், புதுப்பட்டி பொன்னுத்தாயி, ராமன் அப்துல்லா, பெரிய தம்பி, கள்ளழகர் என நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் என்னவளே. கிழக்கு சீமையிலே படத்தில் வரும் முக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே பாடலில் விக்னேஷுக்கு ஜோடியாக ஆடிப்பாடி கலக்கியவர்.

சிங்கப்பூரில் செட்டில்
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் நடித்துள்ள அஸ்வினி பிறகு ஆளைக் காணோம். சிங்கப்பூரில் போய் செட்டிலாகி விட்டதாக சொல்லப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புப் பக்கம் தலை காட்டியுள்ளார். வசீகரம் இன்னும் இருந்தாலும் கூட வயது ஓடி விட்டதால் டிவி சீரியலுக்கு வந்து விட்டார்.

உதட்டோர மச்சம்
அஸ்வினியின் அழகுக்கு அழகூட்டுவது அந்த உதட்டோர மச்சம்தான். இன்னும் அந்த வசீகரம் அப்படியேதான் இருக்கிறது. இதைப் பற்றிக் கேட்டால் சிரித்தபடி ஆமோதிக்கிறார். சினிமாவை விட்டுப் போன பிறகு அது நிறைய மாறி விட்டது. இப்போதெல்லாம் நிறைய டெக்னிக்கலாக நடிகைகள் திறமையாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறார் அஸ்வினி.

மகராசி சீரியல்
சரி அஸ்வினி எதில் நடிக்கிறார்னு சொல்லவே இல்லையே.. நம்ம மகராசி சீரியலில்தான். நிறைய ஸ்டார் காஸ்ட்டுடன் கலக்கி வரும் மகராசி சீரியலில் அஸ்வினிதான் வில்லி. கோமதி என்ற கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். பெரிய திரை நம்பியாரை இந்த அழகிய அஸ்வினி நம்பியார் தூக்கி சாப்பிட்டு சின்னத்திரை நம்பியார் என்ற பெயரைப் பெறுவாரா.. பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications