Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வசூல் என்னவோ 172 கோடி.. படமோ தோல்வி.. மகேஷ் பாபு ரசிகர்கள் ஷாக்! தெலுங்கு சினிமா உலகம் இப்படித்தான்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: படத்தின் ஹீரோ மகேஷ் பாபு. படத்தின் வசூல், 172 கோடி ரூபாய். ஆனால், படம் தோல்வியடைந்துவிட்டது. இதை சேர்த்து படித்தால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இப்படித்தான் போய்க்கொண்டுள்ளது தெலுங்கு திரை உலகம்.

சமீப காலங்களில், முன்னணி நடிகர்களின் படங்கள் வெற்றி பெற பல காரணிகள் உள்ளன. படத்தின் கதையை விட, சமூக ஊடகங்களில் நடிகர்களைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை சமாளிப்பதுதான் பெரும் சவாலாக உள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அந்த படத்தைப் பற்றி எதிர்மறையாக பிரச்சாரம் செய்கிறார்கள். அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், மகேஷ் பாபு, என்டிஆர், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம் சரண் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தோல்வி என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

cinema mahesh babu

சமூக ஊடகங்களில் இந்த எதிர்மறையை சமாளிக்கும் படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. என்டிஆரின் 'தேவரா', அல்லு அர்ஜுனின் 'புஷ்பா-2' படங்கள் எதிர்மறை விமர்சனங்களை சமாளித்து வெற்றி பெற்றன. இந்த நிலையில்தான் தெலுங்கில் ஒரு நடிகரின் படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைந்த போதிலும், சுமார் ₹172 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விமர்சகர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த நடிகர் வேறு யாருமல்ல, அந்த ஊர் லீடிங் ஸ்டார் மகேஷ் பாபு. அவர் நடித்த 'குண்டூர் காரம்' (Guntur Kaaram,) படம் தோல்வியடைந்த போதிலும் சுமார் ₹100 கோடிகளை வசூலித்தது.

குண்டூர் காரம் படம்

மகேஷ் பாபு மற்றும் இயக்குனர் த்ரிவிக்ரம் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்பதால், 'குண்டூர் காரம்' மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. அதற்கேற்ப டிரெய்லர் மற்றும் பாடல்கள் கவர்ந்ததால், குண்டூர் காரம் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்தன. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கடந்த பொங்கலுக்கு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கதையில் புதுமை இல்லை என்று மகேஷ் பாபுவின் ரசிகர்களே விமர்சித்தனர். மகேஷ் பாபுவின் ரசிகர்களைக் கூட இந்த படம் கவரவில்லை.

மகேஷ் பாபு

த்ரிவிக்ரமின் முத்திரை இல்லாததோடு, அவரது முந்தைய படங்களை நினைவுபடுத்தியதால், பாக்ஸ் ஆபிஸில் 'குண்டூர் காரம்' தோல்வியடைந்தது. அந்த படம் சுமார் 172 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடியாகும். பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற முன்னணி நடிகர்கள் சம்பளம் உட்பட பல விஷயங்களால் பட்ஜெட் இவ்வளவு தூரம் போனது. ஆனால் படத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்ற பிரமாண்டம் தென்படவேயில்லை. மொத்தத்தில், தோல்வியுடன் 172 கோடி வசூல் செய்த நடிகராக மகேஷ் பாபு உள்ளார். தெலுங்கு படங்களின் பட்ஜெட் அதிகரிப்பு இதுபோன்ற தோல்விகளுக்கு காரணமாகிறது. இங்குதான் சுந்தர் சி-யிடம் பாடம் படிக்க வேண்டும். 15 கோடி பட்ஜெட்டில் படத்தை எடுத்து 50 கோடியை வசூலிக்கும் சூட்சுமக்காரர் அவர். மதகஜராஜா லேட்டஸ்ட் உதாரணம். எது எப்படியோ, நெட்ப்ளிக்சில் குண்டூர் காரம் திரைப்படம் உள்ளது. போய் பார்த்து உங்களுக்கு பிடித்துள்ளதா பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+