குளிக்கப் போன மீனா.. கூட நுழைந்த மகேஷ்.. பனி மழையில் .. கூல் ரொமான்ஸ்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் நாகினி சீரியல் மூன்றாம் பாகம்... என்னத்த சொல்றது... பெண் உருவம் எடுத்த பாம்புதான் காதலின்னு தெரிஞ்சும் செம ரொமான்ஸ்... பார்க்கற நாமதான் இதை பார்க்க முடியாம பாம்பு மாதிரி நெளிய வேண்டி இருக்கு.
காதலர்கள் பாம்பு மீனாவும், மகேஷும்... எதிரிக்கு பயந்து தப்பிச்சு ஓடி வந்த போது, அழகான ஃபார்ம் ஹவுஸ்ல தங்கறதுக்கு வாய்ப்பு கிடைக்குது. ஏற்கனவே ரொமான்ஸ் மூட்ல ரெண்டு பேரும் காட்டு, மலைன்னு கடந்து வராங்க.
ஃபார்ம் ஹவுஸ் பங்களா மாதிரி இருக்கு, அங்க எல்லா வசதியும் இருக்கு.நான் குளிக்க போறேன்னு சொல்லிட்டு மீனா குளியல் அறைக்குள் வர, உடன் வரும் மகேஷ் நானும் குளிக்கறேன்னு சொல்றான்.

காதலர் மொழி
அப்போ சரின்னு சொல்லிட்டு மீனா திரைக்குப் பின் மறைந்துகொள்ள, என்ன நீ போறேன்னு கேட்கறான். நீங்கதானே குளிக்கறேன்னு சொன்னீங்க... அதான்னு சொல்லிகிட்டே ஹேண்ட் ஷவரை மகேஷ் பக்கம் திருப்பி விடுகிறாள் மீனா.

மீனாவின் மீது
நனைத்த மகேஷ் மீனாவின் மீது தண்ணீரை இறைக்க, இவளும் பதிலுக்கு இறைக்கிறாள். கடைசியில் பாத் டப்பில் விழுகிறான் மகேஷ். என்ன இப்படி வழுக்கி விழுந்துட்டீங்க என்று மீனா கேட்க, வழுக்கி விழுந்தேனா? இது ஒருவகை ஸ்டிராடஜி... என்று இவளையும் தண்ணிக்குள் இழுக்கிறான். அவளும் விழ அங்கும் ஒரு ஐ லவ் யூ காட்சி அரங்கேறுகிறது.

உடை நனைஞ்சுருச்சே
இப்போதான் ஹை லைட்... உடைகள் ஈரமாயிருச்சு எதை போட்டுக்க என ஒன்றும் அறியாதவள் போல கேட்க, என் சட்டையைப் போட்டுக்கோ...(இதுதானே பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்துலேர்ந்தே நடக்குது|) என்று சட்டையைக் கொடுக்கிறான்.

நேரில்தான் பாரேன்
என்ன கண்ணாடி வழியா பார்க்கற..ஆசையிருந்தா திரும்பி பாரேன் நீ என மகேஷ் சொல்ல, நான் உங்களை பார்க்கலை, இந்த சட்டை எனக்கு சரியா இருக்குமான்னு பார்த்தேன் என்று இவள் திரும்பிப் பார்த்து சொல்ல, பார்த்தியா இப்போ திரும்பி என்னை இந்த கோலத்துல நேரில் பார்க்கறன்னு மறுபடியும் அவளை உசுப்பேத்தறான்.

முதலிரவு
இவன் முதலில் குளித்து, கீழே வந்து பார்க்க விதம் விதமாய் மெழுகு வர்த்தி கண்ணில் படுகிறது. மீனா மெதுவா குளிச்சுட்டு வா என்றவன், அந்த வீட்டையே ஒரு முதலிரவு அறை போல தயார் செய்கிறான். மெழுகுவர்த்தி விளக்குகள், பூ, அலங்காரம் என்று அழகு அள்ளுகிறது.

வியப்பு
மகேஷ் கொடுத்த சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு கவர்ச்சியுடன் வந்தவள், மகேஷ் செய்து வைத்த அலங்காரத்தில் கிறங்கி விடுகிறாள். எல்லாம் இருக்கு மீனா சாப்பிடத்தான் ஒன்றுமில்லை, ஆனால் குடிக்க இருக்கிறது என்று பிராந்தியை எடுத்து வருகிறான்.

பிராந்தி
இது டீ இல்லை என்கிறாள் மீனா, ஆமாம், இது டீ இல்லை பிராந்தி குடி என்கிறான் மகேஷ். இப்போது ஸ்னோ ஃபால்ஸ் இருந்தா நல்லா இருக்கும்னு மகேஷ் சொல்ல, அதுவும் பொழிகிறது. என்ன அதிசயம், சட்டை குட்டியா இருக்குன்னு சொன்ன மீனா இப்போது மகேஷின் பிடியில் படுக்கையில் கிடக்கிறாள்.
நாகினி கதையாச்சே, அடுத்த எபிசோடில்தான் கதைப்படி, காட்சியில் என்ன ட்வீஸ்ட்னு தெரியும். அதுவரைக்கும் நாம பார்த்தது....ஹும்... பாம்பு ரொமான்ஸ் என்பது இதுதானோ!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications