மும்பையை மிஞ்சிய நெல்லை! வேல ராமமூர்த்தியின் பேத்தி திருமணத்தில் பிளவுஸ் மட்டும் இத்தனை லட்சமா?
சென்னை:எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவிக்கும் தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகனின் மகன் விஜய் ராகுலுக்கும் இடையே திருமணம் நடந்த நிலையில் அங்கு நடந்த பிரம்மாண்ட விஷயங்களை மேக்கப் ஆர்டிஸ்ட் சத்யா சேகர் விவரித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணம் பிரம்மாண்டமாக பேசப்பட்டது. அதாவது நிச்சயதார்த்தம், ப்ரீ வெட்டிங், வெட்டிங், ரிசப்ஷன் என களைகட்டியது.

அது போலவே தமிழகத்தில் நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எஸ்.முருகன் தனது மகனுக்கு தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
பொண்ணு வேறு யாருமில்லை. நடிகர் வேல ராமமூர்த்தியின் பேத்திதான். பல்லக்கில் பெண் அழைப்பும் மாப்பிள்ளை அழைப்பும் நடத்தப்பட்டது. மணப்பெண் வைஷ்ணவிக்கு தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட 8 லட்சம் மதிப்பிலான புடவை, 3 லட்சம் மதிப்பிலான பிளவுஸ், தலையில் வைத்த பூ முதல் கழுத்தில் போட்டிருந்த மாலை வரை தங்கம்தான்.
புடவையில் கூட ஆங்காங்கே வைரம் பதித்திருந்ததாக சொல்லப்படுகிறது. செண்டை மேளம், பல்லக்கு ஊர்வலம் என மிகவும் பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தில் பெண் அழைப்பு, ஹல்தி, மெஹந்தி ஆகிய 3 வைபவங்களுக்கு சத்யா சேகர் தான் மேக்கப் செய்திருந்தார்.

இந்த திருமணம் குறித்து அவர் யூடியூப் சேனலுக்கு கூறியிருப்பதாவது: இது போன்ற ஒரு பிரம்மாண்ட திருமணத்தை நாம் தியேட்டரில்தான் பார்த்திருப்போம். ஆனால் நேரில் பார்த்து வியந்துவிட்டேன். வைஷ்ணவிக்கு நல்ல சாப்ட்டான ஸ்கின். எனவே அவருடைய ஸ்கின்னில் வொர்க் செய்ய மிகவும் பிடித்திருந்தது.
அந்த அளவுக்கு ஸ்கின்னை மெயின்டெயின் செய்திருந்தார். மேக்கப் ஆர்டிஸ்ட்டுக்காக 5 நாட்களாக தேடி என்னை ஃபிக்ஸ் செய்தார்கள். டிரெண்டிங்கில் இருக்கும் மேக்கப் போதும் என சொன்னார்.
அதற்கேற்றாற் போல் போட்டுவிட்டேன். திடீரென காது குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வந்துவிட்டது. அவர் போட்டிருந்த தோடு அத்தனை ஹெவி வெயிட். உடனே வேப்பமர குச்சியை வைத்து மாய்சுரைசர் போட்டு முதலுதவி செய்து அவரது ஹேர் ஸ்டைலை மாற்ற சொல்லி (ஹேர் ஸ்டைலுக்கு தனி ஆள்), கம்மல் போடாமலேயே அனுப்பி விட்டேன். பெண் அழைப்புக்கு அவர் கட்டிய புடவைக்கான ஜாக்கெட்டை எங்களால் தூக்கவே முடியவில்லை. அத்தனை அதிக எடை கொண்டதாக இருந்தது.

அவருக்கு நான் செய்த மேக்கப் எல்லாம் நன்றாக இருந்ததாக எல்லாரும் சொன்னதாக சொன்னார், எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஹல்தி முடித்தவுடன் 10 நிமிடத்தில் மேக்கப் போட்டு அனுப்பி வைத்தோம். ஹல்தியில் தண்ணீர் ஊற்றியதும் பயங்கர குளிரில் வந்தார். அவரது தலையை துவட்டி விட்டு ஃபுல் மேக்கப்பையும் செய்து விட்டோம். இவ்வாறு சத்யா சேகர் தெரிவித்துள்ளார்.
மணப்பெண்ணின் புகைப்படங்கள் மேக்கப் ஆர்டிஸ்ட் சத்யா சேகரின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications