மக்கள் டிவியில் தினமும் மொழிப்பெயர்ப்பு படங்கள்!
சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுன் காலத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தினமும் மதிய நேரத்தில் மொழிப்பெயர்ப்பு படங்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இப்படியான படங்களையும் ரசிகர்கள் விரும்பிப் பார்த்து வருகின்றனர்.
மக்கள் தொலைக்காட்சி வசம் அதிகமான தமிழ் படங்கள் இல்லை. அதோடு, மக்கள் தொலைக்காட்சி அடிக்கடி படங்களை ஒளிபரப்பு செய்து வருவதும் இல்லை. சனி, ஞாயிற்று கிழமைகளில்தான் திரைப்படங்களை மக்கள் டிவி ஒளிபரப்பு செய்யும்.
இந்த லாக்டவுன் நேரத்தில்தான் தினமும் எதாவது ஒரு மொழிப்பெயர்ப்பு படங்கள் என்று ஒளிபரப்பு செய்து வருகிறது.அதிகமாக கொரியன், மற்றும் ஆங்கில மொழி படங்களை மொழிப்பெயர்ப்பு செய்து ஒளிபரப்பி வருகிறது.இதில் பழைய காலத்து கருப்பு வெள்ளை படங்களும் அடக்கம்.

மக்கள் தொலைக்காட்சி
மக்கள் தொலைக்காட்சியில் எப்போதும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சிகள், கலாச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் என்றுதான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இப்படியான நிகழ்ச்சிகள் மட்டும்தான் ஒளிபரப்பாகும்.

மக்கள் செய்திகள்
மக்கள் செய்திகள் என்று காலை, மதியம், இரவு என்று செய்திகள் ஒளிபரப்பாகும். மருத்துவ நேரம் என்று தினம் தோறும் டாக்டர் ஆலோசனை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இப்படி மக்கள் டிவி நிகழ்ச்சிகளை எளிதில் கூறிவிடலாம். இதில் பணியாற்றுபவர்கள் தமிழில் பேச வேண்டும்.. ஆங்கில வார்த்தை கலக்க கூடாது என்பதிலும் மக்கள் டிவி உறுதியாக இருக்கிறது.

தொலைக்காட்சிகளில் படங்கள்
தொலைக் காட்சிகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பப் படுவது என்பது ஒரு விதிமுறை மாதிரி. படம் ஒளிபரப்பு செய்யப்படாத சானல்களுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இருக்காது. டிவி ரேட்டிங்கிலும் இடம்பிடிக்க முடியாது.இப்படியான நேரத்தில் மக்கள் டிவி இப்போது மொழிப்பெயர்ப்பு படங்களை தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறது.

கொட்டித் தீர்த்துவிடு தோழி
வீட்டில் உள்ளவர்களிடம் குடும்பத்த தலைவிக்கு பிரச்சனை எனும்போது, மன நல ஆலோசகர் ஆலோசனை தேவைப்படும். இதை கருத்தில் கொண்ட மக்கள் டிவி, தினமும் கொட்டித் தீர்த்துவிடு தோழி என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மன நல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் பெண்கள் தங்கள் மனக்குமுறலை சொல்லி ஆறுதல் அடையும்படியான இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications