Malar serial: அவள் செய்த கொலை பற்றி அவளிடமே நோட்ஸ் எடுக்க... அய்யோ பாவம் மலர்
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல், எந்த பக்கம் திரும்பினாலும் மலருக்கு அணை போடுவது போல சோதனையாகவே இருக்கிறது. என்னதான் செய்வாள் பாவம்.
தற்காப்புக்கு ஒரு கொலை செய்தாள். மூன்று வருடமாக இந்த கொலை பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில், திருமணம் செய்துகொள்ள வந்தவன் அசிஸ்டென்ட் கமிஷனர் கதிர். அவன் இவளைத்தான் கல்யாணம் செய்துகொள்வது என்று உறுதியாக இருக்க, மலர் முள் மேல் நிற்பது போல தவிக்கிறாள்.
கடைசியில் கல்யாணமும் நடந்துருது.அதே நேரத்தில் மலர் கொலை செய்த கவுசிக் என்பவனின் கேஸும் மலர் புருஷன் கதிரிடம் வந்து சேர்கிறது. இனி எப்படி அவள் நிம்மதியாக இருப்பாள்?

மிரட்டல் நண்பன்
கவுசிக் நண்பன் மலர் கவுசிக் பின்னால் சுற்றியதை தெரிந்து, மலர் இப்போது அசிஸ்டென்ட் கமிஷனர் மனைவி என்பதையும் தெரிந்துகொண்டு, உன் புருஷன் கிட்டே சொல்லிடுவேன், உன் பின்னால்தான் கவுசிக் சுத்தினான்னு என்று சொல்லி மிரட்டி பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்கிறான். மாமியார் ஆசையாக மலருக்கு போட்ட வளையலை பிடுங்கிக் கொள்கிறான்.பத்து லட்சம் ரூபாய் பணத்துக்கு மலர் எங்கே போவாள்?

கதிரின் அத்தை
கதிரின் அத்தையும், அவங்க மகள் பூஜாவும் சேர்ந்து மலர் இந்த வீட்டில் கதிருடன் வாழக் கூடாது என்று பல விதத்திலும் டார்ச்சர் செய்கிறார்கள். அதையும் பொறுத்துக் கொண்டு, கவுசிக் நண்பன் தரும் டார்ச்சரையும் பொருத்துக்கொண்டு, இடையில் கதிர் கவுசிக் கேஸ் பற்றி பேசுவதையும் கேட்டுக் கொண்டு பயந்து பயந்து, பின்னர் தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு இருக்கும் மலரை பார்க்கையில் பரிதாபம் பொத்துக் கொண்டு வருகிறது.

பணம் எப்படி
பத்து லட்சம் ரூபாய் பணம் எப்படி புரட்டுவது என்று பேதை பெண் கலக்கத்தில் இருக்க, கவுசிக் கேஸை விசாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கவுசிக் அக்காவான கஷனரின் பெண் கட்டளை போடுகிறாள். பூனை மாதிரி எல்லா கேஸிலும் வாயை வைக்காதீங்க.ஒரு தட்டில் சாப்பிட்டு முடிக்கும் நாய் மாதிரி ஒரே கேஸில் கவனம் செலுத்துங்கன்னு சொல்லிட்டு போறா. வீட்டுக்கு கவலையோடு வருகிறான் கதிர்.

முகத்தை பார்த்தால்
எத்தனையயோ கஷ்டம் வந்தாலும் உன் முகத்தைப் பார்த்தால் எனக்கு எல்லாம் பறந்து நிம்மதி கிடைக்குது. ஃபிரஷாகிடறேன் மலர் என்று கதிர் சொல்ல, நெகிழ்ந்து போன மலர் நாம் ஏன் கவுசிக் ஃபிரண்டுக்கு பணம் தரணும்? பணம் தராம விட்டுட்டா அவன் கதிர் கிட்டே சொல்லி, அவருக்கு நம்மை காட்டிக் கொடுக்கட்டுமேன்னு நினைக்கிறாள். இப்படி எப்போதும் பயத்திலும், குழப்பத்திலும் இருக்கும் மலரிடமே சென்று, மலர் இந்த நோட்டை பிடிச்சுக்கோ.கவுசிக் கேஸில் நான் சொல்ல சொல்ல நீ குறிப்பெடுன்னு சொல்றான். எப்படி இருக்கும் மலருக்கு?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications