அதிக வயது வித்தியாச திருமணம்.. செக்ஸ் பற்றிய வெளிப்படையான பேச்சு! பரபரப்பு ஏற்படுத்திய சீரியல் நடிகை
சென்னை: மலையாள சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் இவர்களுடைய புகைப்படம் இணையத்தில் வெளியானது பெரும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் திவ்யா ஸ்ரீதர் திருமணம் பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
மலையாள நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதிலும் "பத்தரைமாற்று" என்ற சீரியல் மூலமாக ஒன்றாக நடித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்து உறவினர்கள் முன்னிலையில் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.

இவர்கள் இருவருடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானதும் பெரிய அளவில் விமர்சனங்களும் சந்தித்து வருகிறது. காரணம் மாப்பிள்ளை வேணுகோபாலன் வெள்ளை தாடியோடு வயது முதிர்ந்த தோற்றத்தில் இருக்கிறார்.
இவரை பார்க்கும் ரசிகர்கள் மாப்பிள்ளைக்கு 60 வயது என்றும் மணப்பெண் சீரியல் நடிகைக்கு 40 வயது என்றும், இந்த வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்கிறார்களே இவர்களுக்கு திருமணம் தேவையா? என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இது குறித்து திவ்யா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் நாங்கள் நாலு பேருக்கு மட்டும் தான் திருமணம் செய்யப் போகிறோம் என்பதை தெரிவிக்க ஆசைப்பட்டோம். ஆனால் பலருடைய கமாண்ட்டுகள் பாசிட்டிவாக இல்லை. எதற்காக பலரும் இப்படி செய்கிறார்கள் என்று எங்களுக்கு தோன்றியது.
திருமணம் செய்வது அவ்வளவு பெரிய தவறான செயலா? நெகட்டிவாக பேசுகிறவர்கள் அவர்களுடைய வாழ்க்கை அப்படி ஆனதால் அவர்கள் இதுபோன்று பேசுகிறார்கள். நாங்கள் திருமணம் செய்து கொண்டால் நெகட்டிவ் கமெண்ட்கள் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு மோசமாக கமெண்ட்கள் வரும் என்று எதிர்பார்க்கல.

நாங்கள் திருமணம் செய்தது செக்ஸுக்காக அல்ல. என் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும், அவர்களுக்கு ஒரு தந்தை வேண்டும். என் கணவர் என்று கூறுவதற்கு ஒரு அடையாளம் வேண்டும். வாழ்க்கை என்பது செக்ஸ் மட்டும்தான் என எங்காவது எழுதி வைத்திருக்கிறார்களா? செக்ஸ் இல்லாமல் வாழவே முடியாதா?
வாழ்க்கையில் ஒரே ஒரு பகுதிதான் செக்ஸ். 60 வயதானவர் 40 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள். ஆனால் உண்மையில் வேணுகோபாலுக்கு 49 வயதும் எனக்கு 40 வயதும் ஆகிறது. இனி எங்கள் வயதைப் பற்றி தவறாக பேசுபவர்கள் பேசி கொள்ளட்டும் என்று திவ்யா ஸ்ரீதர் பேசியிருக்கிறார்.
திவ்யா ஸ்ரீதருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறது. அவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்ட பிறகு தற்போது நடந்த திருமணத்தில் குழந்தைகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். சமூக வலைதளத்தில் இந்த தம்பதியின் புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications