மிஸ் பண்ணிறாதீங்க.. வீக் என்ட்டில் பார்க்க வேண்டிய அருமையான மலையாள படங்கள்.. ஓடிடி லிஸ்ட் இதோ
சென்னை: மலையாள சினிமா, அதன் தனித்துவமான கதைசொல்லல் மற்றும் இயக்கத்தால் எப்போதும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு படமும் ஒரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் அற்புதமான கதைகளை வழங்குகிறது. தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகி வரும் புதிய மற்றும் வரவிருக்கும் 9 மலையாள படங்கள், சினிமா ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளன.
மஞ்சுமல் பாய்ஸ்: இந்த ஆண்டு வெளியான இந்த படம், உலகளவில் ரூ. 241.56 கோடி வசூல் செய்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. குணா குகைகளில் காணாமல் போன தோழனைத் தேடும் நண்பர்கள் குழுவின் கதை இது. கேட்க சாதாரணமாக இருந்தாலும் பரபரப்பு, எமோஷனல் கனெக்ட் என பல மாயங்களைச் செய்தது இந்த படம். 8.7 IMDB மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. சிதம்பரம் இயக்கிய இந்த படம், நட்பு மற்றும் மனித உணர்வுகளை அழகாக பின்னிப் பிணைத்து, உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. ஹாட்ஸ்டாரில் படம் உள்ளது.

மரிவில்லின் கோபுரங்கா: நவீன உறவுகளை ஆராயும் இந்த படம், இரண்டு ஜோடிகளின் வாழ்க்கையில் நிகழும் சிக்கலான சூழ்நிலைகளை படம் பிடிக்கிறது. அருண் போஸ் இயக்கிய இந்த படம், 'சம்மர் இன் பெத்லஹேம்' படத்தின் பிரபலமான பாடலை மீண்டும் பயன்படுத்தி, கதைக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. சோனிலைவ் ஓடிடி தளத்தில் படம் உள்ளது.

டர்போ: மம்முட்டி நடத்த இந்த படம், நண்பனின் கொலைக்கு பழிவாங்கும் ஒரு அசாதாரண மனிதனின் கதையை சொல்கிறது. ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பி வழியும் இந்த படம், பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. மலையாளத்தில் ஆக்ஷன் படங்கள் குறைவு. அந்த குறையை டர்போ போக்குகிறது. லாஜிக் பிரச்சினைகள் இருந்தாலும் மம்முட்டியும் அவரது அம்மா பாத்திரமும் மேஜிக் செய்திருக்கிறார்கள். மம்முட்டியின் பிரம்மயுகம் போலவே இந்த படமும் சோனிலைவ் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது.

இடியன் சந்தூ: விஷ்ணு உன்னிகிருஷ்ணன் நடிக்கும் இந்த குடும்ப பொழுதுபோக்கு படம், ஒரு கோபக்கார பையன் தனது தாயை காப்பாற்ற போராடும் கதையை சொல்கிறது. ஸ்ரீஜித் விஜயன் இயக்கிய இந்த படம், ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் டிராமா காட்சிகள் ஆகியவற்றை சமமாக இணைத்து, அனைத்து தரப்பு மக்களையும் கவரும். டிபிஏ ஓடிடியில் உள்ளது.

1000 பேபிஸ்: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இந்த தொடர், குழந்தை கொலை என்ற சமூக பிரச்சினையை விவாதிக்கிறது. நீனா குப்தா நடிக்கும் இந்த தொடர், இந்த பிரச்சினை குறித்து நம்மை சிந்திக்க வைக்கும்..

கல்லும் பகவதியும்: ஒரு திருடனின் வாழ்க்கையில் தெய்வம் ஏற்படுத்தும் மாற்றத்தை சொல்லும் இந்த படம், ஆன்மீகம் கலந்த அழகான சினிமா அனுபவத்தை வழங்குகிறது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் உள்ளது.
பட்டப்பகல்: இரண்டு நண்பர்களின் வாழ்க்கை எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதை விவரிக்கும் இந்த படம், விதி மற்றும் சூழ்நிலைகளின் சிக்கலான தன்மையை ஆராய்கிறது. Sainaplay ஓடிடி தளத்தில் படம் உள்ளது.
SainaPlay

இந்த படங்கள் அனைத்தும் தனித்துவமான கதைகளை சொல்லி, மலையாள சினிமாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. திகில், நாடகம், ஆக்ஷன், குடும்ப பொழுதுபோக்கு என பல்வேறு வகையான படங்கள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மலையாள சினிமாவின் ரசிகர்கள் இந்த படங்களை தவறவிடக்கூடாது.












Click it and Unblock the Notifications