Web series: நாராயணன் பிள்ளையா.. உங்க பிள்ளையா.. திடுக்கிட்ட டெல்லி கணேஷ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபைனலி யூடியூப் சானல் வெளியிட்டு வரும் மாமனுக்கு மரியாதை வெப்சீரீஸில் நடிகர் டெல்லி கணேஷ் மெயின் கேரக்டரில் ரொம்ப யதார்த்தமாக நடித்து இருக்கார். தங்கை தன்னிடம் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, தங்கை இறந்துவிட அவள் மகனிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் டெல்லி கணேஷ் பணத்தை திருப்பி தந்தாரா, இல்லையா?

தங்கை மகன் பணம் கேட்டு கொடுத்து வரும் டார்ச்சரால் டெல்லி கணேஷ். அடிக்கடி உடம்பு சரியில்லாதவர் போல நடிக்கிறார். பணம் தரும் வரை மாமா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் தங்கை பையனும் நினைக்கிறான்.

ஆனால், டெல்லி கணேஷ் உடம்பு சரி இல்லாதவர் போல நடிப்பது எதற்காக...இப்படி பல சந்தேகம் எழுகிறது. டெல்லி கணேஷ் ரசிக்கும்படி அருமையாக நடிச்சு இருக்கார்.

டாக்டர் வந்துட்டார்

டாக்டர் வந்துட்டார்

டெல்லி கணேஷ் உடம்பை பரிசோதிக்க இளமையா ஒரு பையன் டாக்டர்னு சொல்லகிட்டு வர்றார். டெல்லி கணேஷ்தான் நோயாளி மாதவன். மாதவன் சார் நான் டாக்டர் வந்திருக்கேன்...உடம்புக்கு என்ன பண்ணுதுன்னு கேட்கிறார். நீங்க பார்த்து சொல்லுங்க டாக்டர்னு கூட இருந்த பையன் சொல்றான்.

கதவை சேஃப்டிக்கு

கதவை சேஃப்டிக்கு

உடன் இருந்த பையன் கதவை சாத்த.. எதுக்குப்பா கதவை சாத்தறேன்னு டாக்டர் கேட்கிறார். ஒரு சேஃப்டிக்குத்தான் டாக்டர் கதவை சாத்தறேன்னு சொல்றான். நாங்க ஆபரேஷன் பண்ணினா கூட கதவை சாத்தறது இல்லைன்னு சொன்ன டாக்டர்.. என்னவோ மர்மமா இருக்கே..ஃபீலிங் நாட் குட்னு சொல்றார்.

தங்கை பையன் தன் பையன்

தங்கை பையன் தன் பையன்

தங்கை பையன் கதவை படாரென்று திறந்துக்கொண்டு வந்து டாக்டர் இவர் நல்லாருக்கணும்.. எங்க அம்மா இவர்கிட்டே கொடுத்து இருக்கும் பணத்தை நான் எப்படியாவது வாங்கியாகணும்னு காத்திட்டு டாக்டர் வெளியில் போக சொன்னதும் போயிட்டான். அடுத்து மாதவன் பையன் காலிங் பெல் அடிக்க வந்துட்டான் வந்துட்டான்னு டெல்லி கணேஷ் பயப்படறார்.

அங்கிள் அவன் டாக்டர் அவன்

அங்கிள் அவன் டாக்டர் அவன்

வெளியில் போயி கதவை திறந்துவிட்டு வந்த மாதவனின் நண்பர் நாராயணனின் பையன், ரூமைத் திறந்து வந்து அங்கிள் அவன் வந்துட்டான் என்று டாக்டர் கிட்டேயும், டாக்டர் அவன் வந்துட்டான் என்று அங்கிள் கிட்டேயும் சொல்ல, டெல்லி கணேஷ் தவிர எல்லாரும் குழப்பமாயிட்டாங்க.

என்னை பாருங்க

என்னை பாருங்க

டாக்டர் பிரஷர் அதிகமாகி தனக்குத் தானே ஸ்டெதாஸ் கோப் வைத்து பார்த்துக்கொள்ள , ஐயோ டாக்டர் அதை எனக்கு வச்சு பார்க்கணும்னு டெல்லி கணேஷ் சொல்றார். பின்னர் டாக்டர் காதில் வைக்காமலேயே டெல்லி கணேஷ் நெஞ்சில் வைத்து பார்க்க, சரியாய் போச்சுன்னு சொல்லிக்கிண்டு இருக்கும்போதே.. அங்கிள் உங்க பையனும்...தங்கை பையனும் அடிச்சுக்கறாங்க என்று உடன் இருந்த நண்பர் பையன் சொல்கிறான்.

தென்னை இளநீர்

தென்னை இளநீர்

டெல்லி கணேஷ் எழுந்து ஓடிப்போய் சண்டை வேணாம் என்று விலக்க. பிள்ளையை பெத்தா கண்ணீரு தென்னையை வச்சா இள நீருன்னு பாட்டு பாடறாங்க. இப்போது 3வது எபிசோட் கடந்து இருக்கும் மாமனுக்கு மரியாதை மினி வெப்சீரீஸ் நல்ல டயலாக்ஸ், டெல்லி கணேஷ் அவர்களின் சமயோசிதமாக நடிப்பு என்று அசத்தலா இருக்கு. இரண்டரை லட்சத்துக்கு அதிகமானோர் இதுவரை பார்த்து இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+