மைனர் வேட்டிகட்டி..சுந்தரி அப்பத்தாவின் அல்டிமேட் டான்ஸ்...என்ன ஒரு வெட்கம்
சென்னை: தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர் சுந்தரி சீரியலில் வரும் அப்பத்தா. கஷ்டத்தில் தவிக்கும் போது சுந்தரிக்கு சொல்லும் அட்வைஸ்கள், ஆறுதல் வார்த்தைகள் சீரியல் பார்க்கும் அனைவருக்குமே ஆறுதலாக தலை வருடி விடும் விதமாக இருக்கும். நம்முடைய வீட்டில் உள்ள பாட்டி எப்படி பேசுவாரோ அதே போல அன்பாக ஆறுதலாக பேசுவார் அப்பத்தா. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பக்கத்தில் அப்பத்தா பேரன் கிருஷ்ணா உடன் க்யூட்டாக நடனமாடியுள்ளது வைரலாகி வருகிறது.
சுந்தரி சீரியல் சன் டிவியில் தினசரி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தமிழ் மொழியில் ஹிட்டடித்த இந்த சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியின் பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. கலெக்டராக வேண்டும் என்ற பேத்தியின் கனவுக்கு ஆதரவாக இருக்கிறார். கால சூழ்நிலையால் பேத்தி சுந்தரிக்கு கல்யாணமாகி விட, படிப்பும் தொடர வேண்டும் என்று உதவியாகவும் உறுதியாகவும் இருக்கிறார் அப்பத்தா.
கணவன் கார்த்திக் தன்னை விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட விசயம் தெரிந்து உடைந்து போகிறாள். பேத்தியின் வாழ்க்கையில் நடத்திருக்கும் பிரச்சினை பாட்டிக்கு தெரியாது என்றாலும் அவளை ஆறுதல் படுத்தி படிப்பை தொடர வைக்கிறாள். சைரன் வைத்த காரில் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார் அப்பத்தா.

கண்ணில் பிரச்சினை
ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு சுந்தரிக்கு கண் பார்வையில் பிரச்சினை ஏற்படவே, அதில் இருந்து மீண்டு வந்து நீ கலெக்டர் ஆகி விடுவாய் என்று நம்பிக்கை கொடுத்து படிக்க வைத்தவர் அப்பத்தா. கிராமத்தில் இருந்து சென்னை வந்திருந்தாலும் பேத்திக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து கொடுப்பார். பாட்டி சொல்லும் வார்த்தைகள்தான் சுந்தரிக்கு ஆறுதல்.

கிருஷ்ணாவின் ரீல்ஸ்
சுந்தரியின் கணவன் கார்த்திக்கின் தோழனாக இருந்தாலும் தங்கச்சிம்மா என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்து பாசத்தில் நெகிழ வைப்பான் கிருஷ்ணா. அண்ணன் கிருஷ்ணாவின் உதவியால் எத்தனையோ பிரச்சினைகளை சமாளித்திருக்கிறாள் சுந்தரி.

சூட்டிங் ஸ்பாட் கலாட்டாக்கள்
சீரியல் சூட்டிங் சீரியஸ் ஆக அழுகையாக போய் கொண்டிருக்கும் போது இடை இடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் நடிகர், நடிகைகள் இன்ஸ்டா கிராம் பக்கங்களில் ரீல்ஸ் போடுவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். பல மில்லியன் ரசிகர்கள் டிவி சீரியல் நடிகர் நடிகைகளை பாலோ செய்கின்றனர். சுந்தரியும் கிருஷ்ணாவும் தினசரியும் ரீல்ஸ் பதிவிட்டு வருகிறார்.

இளம் நடிகர்களுக்கு போட்டி
சீரியலில் நடிக்கும் இளம் நடிகர்கள் மட்டும்தான் ரீல்ஸ் பதிவிடுவதில்லை. அம்மா, பாட்டி நடிகைகளும் அசத்தலாக ஆடி பாடி வசனம் பேசி ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.சுந்தரியின் அப்பாவும் பேரன் கிருஷ்ணா உடன் இணைந்து ஆடிய ரீல்ஸ்தான் இப்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்.

மைனரு வேட்டி கட்டி
நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா படத்தில் வரும் மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு கிருஷ்ணா உடன் அப்பத்தா ஆடிய க்யூட்டான நடனம் இப்போது ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. அதுவும் செம ஸ்மார்ட்டாக முகத்தில் சின்னதாக வெட்கப்புன்னகையுடன் ஸ்டைலாக கண்ணாடி போட்டு அப்பத்தா ஆடிய நடனம் அல்டிமேட் என்று கமெண்ட் அடித்துள்ளனர் ரசிகர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications