ஆளே மாறிட்டாங்களே மணிமேகலை.. இப்பவெல்லாம் முகத்தில் மலர்ச்சி! ஞாயிறும் செம பிஸியாமே.. குஷியில் போஸ்ட்
சென்னை: விஜய் டிவியிலிருந்து வெளியேறிய மணிமேகலை, தற்போது புதிய சேனலுக்கு சென்றுள்ள நிலையில், ஞாயிறு பணிக்கு செல்வது குறித்து மகிழ்ச்சியுடன் போஸ்ட் போட்டிருக்கிறார்.. இந்த போஸ்ட்டுக்கு, அவரது ரசிகர்கள் திரண்டு வந்து வாழ்த்துக்களையும், பாராட்டையும் சொல்லி வருகிறார்கள.
விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருந்த மணிமேகலை வெளியிட்டிருந்த அறிக்கை மிகப்பெரிய பரபரப்பை சமீபத்தில் ஏற்படுத்தியிருந்தது.. சக நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்காவை சாடியே அந்த அறிக்கையை மணிமேகலை வெளியிட்டதாகவும் கூறப்பட்டது.

கிரேஸ் பெருகியது
ஆனால் விஜய் டிவியின் பிரிபலங்கள் பிரியங்காவுக்கு ஆதரவு தந்திருந்த நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் மணிமேகலைக்கு தங்கள் ஆதரவை திரண்டு வழங்கியிருந்தனர்.. இதனால் மணிமேகலைக்கான கிரேஸ் அதிகமாகியது.. சுயமரியாதையுடன் வெளியேறுகிறேன் என்று மணிமேகலை கூறியிருந்த வார்த்தையும் இணையத்தில் வைரலாகி, பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
இதையடுத்து, விஜய் டிவியிலிருந்து மணிமேகலை வெளியேறியதையடுத்து, எந்த சேனலில் இணைவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. சன் டிவியில் இணைவதாக தகவல் வெளியாகிய நிலையில், ஜீ தமிழ் சேனலில் சமீபத்தில் மணிமேகலை இணைந்திருக்கிறார்.டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க துவங்கிவிட்டார்.
புதிய அத்தியாயம்
"எனது தொழிலில் புதிய அத்தியாயம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டான்ஸ் ஜோடி உருவாகி வருகிறது. உங்கள் அனைத்து ஆசீர்வாதங்களும் தேவை. என்றும் அன்புடன் என்று பதிவிட்டிருந்தார்.. மேலும், கடினமாக உழையுங்கள், கடவுளை நம்புங்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.
சினேகா, ரம்பா, வரலட்சுமி சரத்குமார், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை ஆர்ஜே விஜய்யும், மணிமேகலையுடன் சேர்ந்து தொகுத்து வழங்குகிறார்.
தன்னம்பிக்கை
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே வேலையே இல்லாத சூழலில் தற்போது ஞாயிற்றுக்கிழமையும் பணிக்கு செல்வதை குறிப்பிடும் வகையில், போட்டோக்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் மணிமேகலை பகிர்ந்துள்ளார்.. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், மணிமேகலையின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் பாராட்டி, கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications