விளையாட்டுக்கு கூட ஆக்ஷன் சொல்லணுமாமே...!
சென்னை: சின்ன பசங்களை போங்காட்டம் காண்பிச்சு விளையாடி பொழுதை கழிச்சுகிட்டு இருக்கார் விஜே மணிமேகலை. லாக்டவுன் நேரத்தில் ரைட்டா தப்பா விளையாட்டை சமூக இடைவெளி விட்டு விளையாடி வீடியோ போட்டு இருக்கார் மணிமேகலை.இந்த விளையாட்டை விளையாட ஆக்ஷன் சொல்லணுமாம்...
மணிமகேலை விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக மணிமேகலை பங்கு பெற்றபோதுதான் சுத்தமாக சமையல் தெரியாதவர் மணிமேகலை என்பது தெரிந்தது.
அதோடு, ஒரு காமெடி பீஸாக அந்த நிகழ்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட மணிமேகலை, அடுத்தடுத்து செய்த வேலைகள் எல்லாமே காமெடியில்தான் முடிந்தது. சமைக்கிறேன் என்று குக்கர் சாதத்தை வீடெங்கும் பரவ விட்டார்.. இப்படி பல...!

சன் மியூசிக்
சன் மியூசிக் சானலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகம் ஆன மணிமேகலை, சன் டிவியிலும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது தொகுத்து வழங்கி வந்தார். பிரபலங்களை நேருக்கு நேர் என்று இவர் பேட்டி கண்ட விதம் கூட மிக அருமையாக... கேலி கிண்டலுக்கு ஆகாமல் நன்றாகவே இருந்தது.

உசேன் மணிமேகலை
டான்ஸ் மாஸ்டர் உசேனை காதலித்த மணிமேகலை, உசேனிடம் தான்தான் முதலில் காதலை வெளிப் படுத்தியதாக கூறி இருக்கிறார். மணிமேகலை தனது பெற்றோர் சம்மதம் இல்லாமலே உசேனை திருமணமும் செய்துக்கொண்டார். என்ன காரணத்தினாலோ சன் டிவியை விட்டு விலகிய மணிமேகலை விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆனார்.

பெற்றோர் ஏக்கம்
பெற்றோர் தனது கல்யாணத்தை இன்னும் அங்கீகரிக்கவில்லை, தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மனக் கவலையில் இருந்தாலும் மணிமேகலை அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வருகிறார். விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆன பின்னர்தான் மணிமேகலை ஜோக்கர் மாதிரி வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.

ரைட்டா தப்பா
லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் மணிமேகலை தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், கட்டம் கட்டி விளையாடும் ரைட்டா தப்பா விளையாட்டை சிறுவர்கள் இருவருடன் சமூக இடைவெளிவிட்டு விளையாடி இருக்கார்.ரைட்டா ரைட்டா என்று கேட்டு தப்பு தப்பாக விளையாடிய மணிமேகலை இதுக்கு கூட ஆக்ஷன் சொல்ல கேட்டு இருப்பது...என்னத்த சொல்ல...!
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications