சொம்பை தூக்கியடித்த மணிமேகலை.. இன்று மீண்டும் "மணிச்சத்தம்" கேட்குது: ஜீ தமிழில் நிப்பாங்க: பிரபலம்
சென்னை: விஜய் டிவியிலிருந்து வெளியேறிய மணிமேகலை, தற்போது புதிய சேனலுக்கு சென்றிருப்பதால், அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, மணிமேகலை நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் கூறியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு, நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. பிரியங்காவை சாடியே அந்த அறிக்கையை மணிமேகலை வெளியிட்டதாகவும் கூறப்பட்டது.

பிரியங்காவை அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே, விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க முடியும் என்ற குற்றச்சாட்டினை பலரும் முன்வைத்து, மணிமேகலைக்கு ஆதரவை தெரிவித்தனர்.
சொம்பை தூக்கி வீசி
இதற்கு நடுவில், திடீரென பிரபலங்கள் பிரியங்காவுக்கும் ஆதரவை வழங்கினார்கள். இதை பார்த்த மணிமேகலை, "பிரியங்காவின் சொம்பு" என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.. சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை? என்று கேட்டிருந்த கேள்வியும், இணையத்தில் சேர்ந்தே வைரலானது..
விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்தபோது, பெரும்பாலான மக்கள் மணிமேகலைக்கு தங்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.. விஜய் டிவியிலிருந்து மணிமேகலை வெளியேறியதையடுத்து, எந்த சேனலில் இணைவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. குக் வித் கோமாளி போலவே, சன் டிவியில் நடத்தப்பட்டு வரும் குக்கிங் நிகழ்ச்சி படுசூப்பராக நடந்து வந்ததாலும், வெங்கடேஷ் பட் உள்ளிட்டோர் அங்கே உள்ளதாலும், மணிமேகலையின் தாய் வீடு என்பதாலும், சன் டிவிக்கே அவர் செல்லவிருப்பதாக சொன்னார்கள்..
புதிய சேனல் - புதிய நிகழ்ச்சி
பிறகு ஜீ தமிழ் சேனலுக்கு மணிமேகலை செல்லக்கூடும் என்று தகவல்கள் பரபரத்தன.. காரணம், விஜய் டிவியின் பிரபலங்கள் பலர் ஜீ சேனலில் உள்ளதாலும், விஜய் டிவியின் நேரடி போட்டி சேனலாக ஜீ தமிழ் கருதப்படுவதால், மணிமேகலையும் அந்த சேனலுக்கு செல்வார் என்றார்கள். ஆனால் அதற்கு பிறகு அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது ஜீ தமிழ் சேனலில் மணிமேகலை இணைந்திருக்கிறார்.டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க துவங்கிவிட்டார்.
இந்நிலையில், 2nd Floor Tamil யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் மணிமேகலை பற்றி சொல்லும்போது, "ஆங்கர் என்ற பணியையும் சமூக அக்கறையுடன் செய்யலாம்.. இன்றைய ஊடகங்களுக்கு நல்ல ஆங்கர்கள் தேவைப்படுகிறார்கள். சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைவு..
சின்னத்திரை நடிகைகள்
ஆனால், சின்னத்திரையில், மீடியாக்களில் பாதுகாப்பு அதிகமாக உள்ளது. ஒரே குடும்பமாக வேலை பார்ப்பதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும், சின்னத்திரை நடிகைகளே சொல்லி உள்ளார்கள். ஏற்கனவே ஒரு சேனலில் அங்கிருந்த ஆங்கருடன் ஏற்பட்ட மோதல் வெடித்தது. அங்கே குறிப்பிட்ட நபரை மட்டும் வெளியேற்றியிருக்கிறார்கள் என்றால், மற்றொருவருக்கு சப்போர்ட் இருக்கலாம்.. ஆனால், அது எதுக்காக ஆதரவு என்பது தெரியாது.
எனினும், மணிமேகலைக்கு ஒரு வெற்றிடம் சமீப நாட்களாகவே இருந்து வந்தது. இப்போது தன்னால் வெற்றி பெற முடியுமா? என்று ஜீ தமிழ் வருகிறார்.. கண்டிப்பாக ஜெயிப்பார். அன்று விஜய் டிவியுடன் சலசலப்பு ஏற்பட்டபோதே, மணிமேகலை பக்கம்தான் நான் நின்றேன். ஒரு ஆங்கராக மணிமேகலை எப்போதுமே நின்று ஜெயிப்பார்" என்று கூறியிருக்கிறார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications