மேகலை.. மணிமேகலை.. செம கலாயா இருக்கேம்மா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    போலீஸ் கெட்டப்பில் மணிமேகலை-வைரல் வீடியோ

    சென்னை: டிவி உலகில் ஒரு செல்லப் பிள்ளை யாருன்னு கேட்டா அது நம்ம மணிமேகலைதான்.

    கடும் உழைப்பு, சிரித்த முகம், பன்முகத் திறமை.. இப்படி நிறைய இருக்கு இவரிடம். சன் டிவியில் முன்பு முடங்கிக் கிடந்தார். இப்போது விஜய் டிவியின் வெளிச்சம் கிடைத்தது முதல் பின்னிப் பெடலெடுக்கிறார். காமெடி ஷோக்களில் கலக்குகிறார். கேம் ஷோக்கில் விளையாடுகிறார்.

    இந்த வரிசையில் இப்போது ஒரு டிக்டாக்கில் புகுந்து புறப்பட்டிருக்கிறார். பார்க்கவே செம காமடியாக உள்ளது. அதை ஒருவர் அவரது பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.

    செம கலாய்!

    செம கலாய்!

    சிங்கம் பட காமெடிதான். சிங்கம் போல கிளம்பி வரும் சூர்யா வேடத்தில் மணிமேகலை. பேக்கிரவுண்டில் சிங்கம் சிங்கம் நீ துரை சிங்கம் என பாட்டு வேறு. பெண் சிங்கம் போல மணிமேகலை ஸ்டைலாக நடந்து வருகிறார்.இதைப் பகிர்ந்துள்ள அவரது ரசிகர், யக்கோ இந்த வீடியோ பாத்து உங்களுக்கே சிரிப்பு வந்துருக்குமே என்று கலாய்த்துள்ளார். அதை மணிமேகலையும் லைக் செய்து ரீட்வீட்டியுள்ளார். இதுதாங்க மனசுங்கிறது..

    மணிமேகலை நிஷா

    மணிமேகலை நிஷா

    மணிமேகலை இதுபோல டிக்டாக் செய்வது முதல் முறையல்ல. முன்பு அறந்தாங்கி நிஷாவுடன் ஒரு டிக்டாக் செய்து அந்த வீடியோவைப் போட்டிருந்தார். அப்போதும் இப்படித்தான் ரசிகர்களின் கமெண்ட்ஸ் அள்ளியது இப்போது இந்த வீடியோ.

    சன் மியூசிக்

    சன் மியூசிக்

    சன் மியூசிக் தொகுப்பாளினியாக டெலிவிஷனுக்கு வந்தவர். இவர் பல வருஷங்கள் சன் டிவி, சன் மியூசிக் என்று வலம் வந்து, உசேன் என்கிற நடன மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதில் சிறிது நாட்கள் சானல்களை விட்டு ஒதுங்கி இருந்தார்.

    வரவேற்பு கிடைத்தது

    விஜய் டிவி இவருக்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு அளித்தது.மிஸ்டர் அன்ட் மிஸர்ஸ் கில்லாடி நிகழ்ச்சி மூலம். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு உண்மையாகவே கல்யாணம் செய்து வைத்து அழகு பார்த்தது விஜய் டிவி. மணிமேகலை வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதிக்காததால், இதற்கு முன் சும்மா பேருக்குத்தான் இந்த கல்யாணம் நடந்தது என்று மணிமேகலை உருக்கமுடன் பேசியதால், விஜய் டிவி நிகழ்ச்சியின் போது கல்யாணத்தை நடத்தி அவரின் ஆசையைத் தீர்த்து வைத்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+