என்னாது மாட்டுக்குட்டியா...?... ஏம்மா மணிமேகலை.. என்னாம்மா இது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே மணிமேகலைக்கு இன்று பிறந்தநாளாம்...கேக் வெட்டி மாட்டுக்கு சாப்பிட கொடுக்கிறார். இதில் ஒரு கூட குறை இல்லை...மாட்டுக்கு கேக்கை ஊட்டிவிட்டு, அதை மாட்டுக்குட்டின்னு சொல்லி இருக்கார் பாருங்க...அதுதாங்க அறியாமை.

Recommended Video

    Vj Manimegalai Surprise Birthday Celebration | Manimegalai Hussain

    கன்றுக்குட்டி கேள்விப்பட்டு இருக்கோம்...அதென்ன மாட்டுக்குட்டி? தமிழ் இனி மெல்லச் சாகும் என்று கூவி கூவி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பிரபல தொலைக்காட்சியின் விஜே இப்படியாக தமிழ் தெரிந்து வைத்து இருக்கிறார்.

    ஊடக வேலை என்று வருவதும், ஆங்கிலத்தில் குறிப்பெடுத்து, தமிழில் பேசுவதும் சகஜமாக்கிப் போன காலக்கட்டத்தில் மாட்டை மாட்டுக்குட்டி என்று சொல்லலாம் போல!

     விஜய் டிவி மணிமேகலை

    விஜய் டிவி மணிமேகலை

    விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை, ஆரம்பத்தில் சன் மியூசிக் சானல் மூலம் பிரபலம் ஆனவர். காலப்போக்கில் சன் டிவியின் முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தார். உசேன் எனும் நடன கலைஞரை காதல் திருமணம் செய்துக்கொண்ட மணிமேகலை, விஜய் டிவி பக்கம் போனார்.

     நகைச்சுவையும் உண்டு

    நகைச்சுவையும் உண்டு

    மணிமேகலைக்குள் ஒரு நகைச்சுவையாளர் ஒளிந்துக்கொண்டு இருப்பதை அடையாளம் கண்ட விஜய் டிவி, இவரை குக்கு வித் கோமாளியின் கோமாளிகளில் ஒருவராக்கியது. குக்க்கரி ஷோவில் கலந்துக்கொண்டு இருந்தாலும் பாவம் மணிமேலைக்கு சமைப்பது சுத்தமா வரவில்லை.

     குக்கர் வெடித்தது

    குக்கர் வெடித்தது

    குக்கரில் அரிசி ஒரு ஆழாக்கு, தண்ணீர் ஒரு ஆழாக்கு என்று அளந்து வைத்தும் கூட குக்கர்தான் வெடித்ததே தவிர சாதம் வேகவில்லை. பட்டிமன்ற பேச்சாளராகவும் மணிமேகலை அவதாரம் எடுத்து, அதிலும் சபாஷ் வாங்கியவர்தான்.

     குழந்தைக்கு பிறந்தநாள்

    குழந்தைக்கு பிறந்தநாள்

    பாவம் குழந்தை பொண்ணு மணிமேகலைக்கு இன்று பிறந்தநாள். லாக்டவுன் நேரத்தில் கொண்டாட்டம் எதுவும் இல்லாமல், கேக் வெட்டி, மாட்டுக்கு ஊட்ட நினைத்து, கேக் ஒரு துண்டை மாட்டுக்கு ஊட்டியும் விட்டு இருக்கார். அப்போதுதான் மாட்டுக்குட்டி.. இன்னிக்கு எனக்கு பிறந்தநாள். கேக் சாப்பிட்டுட்டு எனக்கு ஹேப்பி பர்த் டே சொல்லுன்னு ஆசையா கேட்கிறார். மாட்டை மாடுன்னுதான் சொல்லணும்.. அது ஈன்ற குட்டியைத்தான் கன்றுக்குட்டின்னு சொல்லணும்...

    இது பிறந்தநாள் பாடம்...!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+