பேசிக் கொண்டிருந்த போதே கணவர் ஹூசைன் கன்னத்தில் பளார் விட்ட விஜே மணிமேகலை.. ஷாக்கான தேவதர்ஷினி
சென்னை: வாங்க சிரிக்கலாம் எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி மணிமேகலை தனது கணவர் ஹூசைனை கை நீட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காமெடி களைகட்டுவதால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சன் மியூசிக்கில் டிவியில் விஜேவாக அறிமுகமானார் மணிமேகலை.

இவர் டான்ஸ் மாஸ்டரான ஹூசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணத்திற்கு மணிமேகலையின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மணிமேகலை 12 ஆண்டுகளாக தமிழ் தொலைகாட்சியில் இருந்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தேவையில்லாமல் காமெடி செய்யாமல் தன்னை வைத்தே காமெடி செய்ததால் மணிமேகலைக்கு அதிக ரசிகர்கள் கிடைத்தனர். இவர் ரசிகர்களால் ஆங்கர் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.
விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் மணிமேகலையும் ஹூசைனும் ரன்னர் அப்பாக வந்தார்கள். இவர் கல்லூரி விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள், விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். மணிமேகலைக்கு நடிப்பதற்கு விருப்பம் இல்லை. ஆனால் ஆங்கரிங்கில்தான் விருப்பம்.

தம்பதி இருவரும் சேர்ந்து யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஓராண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை பெற்றது. மொத்தம் இவர்களுடைய யூடியூப் சேனலுக்கு 1 கோடிக்கு மேல் சந்தாதாரர்கள் உள்ளனர். குக் வித் கோமாளியின் சீசன் 4 லும் வந்த மணிமேகலை திடீரென நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
தற்போது குக் வித் கோமாளியின் ஆங்கராக களமிறங்கியுள்ளார் மணிமேகலை. இந்த நிலையில் கணவருடன் மணிமேகலை வாங்க சிரிக்கலாம் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அதில் தனது கணவரை ஒரு கட்டத்தில் கை நீட்டி அறைந்துள்ளார். இதை பார்த்த நடுவர் தேவதர்ஷினி ஷாக்காகிறார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் காமெடியாக பார்க்கப்பட்டது. ஆனாலும் கணவரை பொது இடத்தில் இப்படியா அசிங்கப்படுத்துவது என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications