மனோபாலா கடைசியா சொன்ன வார்த்தை.. உருகிய சுந்தர் சி.. மத கஜ ராஜாவில் தூக்கி சாப்பிட்ட அசத்தல் நடிப்பு
சென்னை: கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து, பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் மதகஜராஜா படம், பலரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருக்கிறதாம். அத்துடன், இந்த படத்தில் மறைந்த மூத்த கலைஞர்கள், மனோபாலா மற்றும் மணிவண்ணனின் நடிப்பு பலராலும மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
12 வருடம் கழித்து விஷால் நடித்துள்ள மதகஜராஜா, தற்போது வெளியாகியிருக்கிறது.. படம் பிரமோஷனிலிருந்தே, இந்த படம் பலரது கவனத்தை பெற்று வந்த நிலையில், படம் ரிலீஸாகி, ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.

வெற்றிநடை: 12 வருடம் முன்பு எடுக்கப்பட்ட இந்த படம் எப்படி இருக்குமோ என்கிற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கவே செய்தது. ஆனால், பாசிடிவ் விமர்சனங்கள் மீடியாக்களிலிருந்தும் வந்துக்கொண்டிருக்கின்றன. பொதுவாக சுந்தர் சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அந்தவகையில், இந்த படத்தில் 3 நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களுக்கு வியப்பை தந்து வருகிறது.
ஹீரோ என்ற கேட்டகிரிக்குள் சந்தானம் சென்றுவிட்டாலும், அவரை மிகச்சிறந்த காமெடியனாக பார்க்கவே, ரசிகர்கள் இன்னமும் விரும்புகிறார்கள் என்பதுதான், மதகஜராஜா படத்தில் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.. சந்தானத்தின் காமெடியை பார்ப்பதற்காக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்தவண்ணம் உள்ளனராம்.
லாஜிக்: அதேபோல, முதல் நாள் 3.2 கோடியும், 2வது நாளிலேயே மதகதராஜா படம் 3.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதுடன், கமர்ஷியல் படங்கள் ஓடுவதில்லை என்ற லாஜிக்கையும் இந்த படம் அடித்து நொறுக்கியிருக்கிறது.
அதேபோல, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு என காலஞ்சென்ற நடிகர்களை மறுபடியும் இந்த படத்தில் பார்ப்பது நல்ல அனுபவம் என்றும், அதிலும், மனோபாலா, மணிவண்ணன் இரண்டு பேரின் கதாபாத்திரங்களும் ரசிக்கும்படியாக உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ள மணிவண்ணனின் நடிப்பு இதில் அசாத்தியமாக இருக்கின்றதாம்.
கடைசி படம்: மனோபாலா இறப்பிற்கு பிறகு அவரது கடைசி படமாக இந்த படம் வெளிவந்துள்ளது. மொத்தம் 15 நிமிடக்காட்சிகளில் சிரிக்க வைத்து கொண்டேயிருக்கிறாராம் மனோபாலா.. இந்த படம் ரிலீஸானால் நான் வேற லெவலுக்கு போய்விடுவேன் என்று சுந்தர் சி யிடம் சொல்லிக் கொண்டே இருந்தாராம் மனோபாலா.
அரண்மனை 4 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் சுந்தர் சி, மனோபாலா பற்றி நிறைய விஷயங்களை கூறியிருந்தார். "மனோபாலா இல்லாதது அரண்மனை 4 படத்துக்கு மிகப்பெரிய இழப்புதான். இந்த படத்தில் அவருக்கென ஒரு முக்கியமான கேரக்டர் இருந்தது. நாங்கள் வெளியூரில் ஷூட்டிங் வைத்திருந்தோம். ஒரு வாரத்தில் அவருடைய சீன்களும் ஷூட் செய்ய முடிவாகியிருந்தது.
பெரிய மெசேஜ்: அப்போது மனோபாலாவிடம் இருந்து எனக்கு ஒரு பெரிய மெசேஜ் வந்தது. அதில் "என்னால் இந்த படம் பண்ண முடியாது. நான் ஹாஸ்பிடலில் இருக்கிறேன். என்னால் உனக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது. அதனால் எனக்கு பதில் அரண்மனை 4 வேறு யாரையாவது நடிக்க வைத்துக் கொள்" என தெரிவித்திருந்தார்.
நான் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இருந்தே மனோபாலா எனக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தார். என்னை "வாடா போடா" என கூப்பிடும் வெகு சில மனிதர்களில் அவரும் ஒருவர். மருத்துவமனையில் இருக்கும் போட்டோ எல்லாம் அனுப்பி, என்னிடம் ஸாரி கேட்டிருந்தார். நான் உடனே மனோபாலாவுக்கு கால் பண்ணி, "விடுங்க சார், இந்த ஒரு படம் தானே அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்றேன்.
உருக்கம்: உடனே அவர், 'இல்லடா ரொம்ப நாள் நான் இருக்க மாட்டேன்" என்றார்.. அவர் சொன்னதை இப்போதுவரை என்னால் மறக்க முடியவில்லை என்று கண்கலங்கி சுந்தர்.சி கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications