மனோஜ்ஜூக்கு கடைசி நொடியிலும்.. வர்றவங்க அதை சொன்னதுமே உடைந்து போன பாரதிராஜா.. இப்ப இது வேற: பிரபலம்
சென்னை: வயது மூப்பு காரணமாக பாரதிராஜாவுக்கு சிலசில பிரச்சனைகளும் இருக்கிறது.. நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இந்த நேரத்தில் மகன் இறந்ததை அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. துடிதுடித்து போய்விட்டார். கடைசிவரை மனோஜூடன் பேசாமலேயே இருந்துவிட்டோமே? என்பதை நினைத்து கடுமையான மனவேதனைக்கு ஆளாகியிருக்கிறார் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Madras Wing என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "பாரதிராஜா தனக்கு 85 வயது ஆனாலும், இளமையாகவே இருக்கக்கூடிய கேரக்டர்.. வயதின் காரணமாக சில சோர்வுகள், தளர்வுகள் இருந்தாலும், எப்போதுமே உற்சாகமாகவே தன்னை வைத்துகொள்பவர்.. ஜீன்ஸ், டி-ஷர்ட்தான் போடுவார்..

ஆரம்பத்தில் நடிக்க வந்த பாரதிராஜா, எதிர்பாராத விதமாக இயக்குனராகிவிட்டார். அந்த படங்களும் ஹிட்டாகின.. ஒருகட்டத்தில் இயக்கிய படங்களில் தொடர் தோல்விகள் கிடைக்கவும், நடிக்க ஆரம்பித்துவிட்டார்..
பல இளம் இயக்குனர்கள், பாரதிராஜாவை அப்பா என்றுதான் கூப்பிடுவார்கள்.. "அப்பா, எங்க படத்தில், இந்த கேரக்டரில் நீங்க நடிச்சால் நல்லா இருக்கும் " என்று அவரிடம் உரிமையாக கேட்டார்கள்.. அந்தவகையில், தாத்தா, அப்பா என்று பல அழுத்தமான கேரக்டர்களில் நடித்தார்.. இது பாரதிராஜாவுக்கும் பிடித்திருந்தது.. இறுதியில் பிசியான நடிகராகிவிட்டார்.
செல்லமாக வளர்த்த மகன்
ஒரே மகன் என்பதால், அவர் மீது உயிரையே வைத்திருந்தார். மனோஜ் பிறந்ததுக்கு பிறகுதான் பல வெற்றிகள் பாரதிராஜாவுக்கு தேடி வந்தது.. ஆனால், தன்னுடைய மகனை பெரிய நடிகராக்க வேண்டும் என்று விரும்பினார்.. அதேபோல, பெரிய இயக்குனராகவும் அவரை பாரதிராஜாவால் கொண்டுவர முடியவில்லை. தன்னுடைய உயரத்துக்கு மகனை கொண்டு வரமுடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது..
மணிரத்னத்திடம் உதவியாளராக மனோஜ்ஜை சேர்த்துள்ளார்.. முதல்நாள் கடுமையாக வேலைபார்த்த அசதியில், வீட்டுக்கு வந்து மனோஜ் தூங்கிவிட்டாராம்.. அப்போது, பாரதிராஜா சார், அறைக்கு வந்து பார்த்தபோது, மகன் தூங்கி கொண்டிருந்ததை கண்டு, மனோஜ்ஜுக்கு கால் அமுக்கிவிட்டாராம்..
கால் அமுக்கிய பாரதிராஜா
திடீரென கண் விழித்த மனோஜ், ஏன்ப்பா, என்னுடைய காலை பிடித்து விடறீங்க? என்று கேட்டதற்கு, "நீ செல்லமா வளர்ந்த பையன்.. கஷ்டம்னா என்னவென்று உனக்கு தெரியாது.. அசிஸ்டெண்ட் டைரக்டர் என்றால் என்னென்ன வேலை இருக்கும் என்று எனக்கும் தெரியும்.. இன்னைக்கு நாள் முழுக்க நீ நின்னுட்டு இருந்திருப்பே.. அதனால்தான் உனக்கு கால் அழுத்திவிடறேன்னு சொன்னாராம். அந்த அளவுக்கு மகன் மீது பிரியம் வைத்திருந்தார்..
பட வாய்ப்புகள் கிடைக்காதது, டைரக்ஷன் செய்ய தருணங்கள் சரியாக அமையாதது என விரக்தியில் இருந்தார் மனோஜ்..இதனால் அப்பாவுக்கும், மகனுக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்துவிட்டது.. இது எல்லாருடைய வீட்டிலும் நடப்பதுதான்..
ஏதோ ஒரு காரணத்துக்காக, பேச்சுவார்த்தை சரியாக இல்லை போல.. மனோஜ் பேச போனாலும், பாரதிராஜா சரியாக பேசவில்லையாம்.. மனோஜ் இறந்தநேரத்தில்கூட, பேசாமல்தான் இருந்திருக்கிறார்.. ஆனால், மனோஜ் இறந்ததுமே பாரதிராஜா துடிதுடித்து போய்விட்டார். கண்ணீர் விட்டு கதறினார்.. புத்திர சோகம் யாருக்குமே வரக்கூடாது..
கடைசிவரை முடியல
வயது காரணமாக பாரதிராஜாவுக்கு சிலசில பிரச்சனைகளும் இருக்கிறது.. நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இந்த நேரத்தில் மகன் இறந்ததை அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. துடிதுடித்து போய்விட்டார். கடைசிவரை மனோஜூடன் பேசாமலேயே இருந்துவிட்டோமே? என்பதை நினைத்து கடுமையான மனவேதனைக்கு ஆளாகியிருக்கிறார்.
இதுபோக, பாரதிராஜாவை சந்தித்து பேசுபவர்கள் பலரும், "மனோஜ் உங்க கிட்டபேசணும்னு ஆசைப்பட்டார் சார், உங்களுடன் சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்பட்டார் சார்" என்று சொல்வதை கேட்கும்போதெல்லாம் மனம்புழுங்கி துடித்துவிடுகிறார்.. இதற்கெல்லாம் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் இழப்பை ஈடுகட்ட முடியாது.
பாராட்ட வேண்டிய கங்கை அமரன்
இந்த இடத்தில் கங்கை அமரன் அண்ணனை நாம் பாராட்டவே செய்ய வேண்டும். அடிக்கடி பாரதிராஜா வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்லி வருகிறார்.. எனினும் பாரதிராஜாவால் மனோஜ் நினைவிலிருந்து மீள முடியவில்லை..
இங்கே இருந்தால் மகனின் நினைப்பு அதிகமாக வருகிறது என்பதால், மலேசியாவிலுள்ள மகள் ஜனனி வீட்டுக்கு சென்றுவிட்டார் பாரதிராஜா. எனினும், இந்த கடினமான சூழ்நிலையிலிருந்து எப்படி கடந்து வரப்போகிறார் என்று தெரியவில்லை. இந்த நேரத்தில், பாரதிராஜாவின் அக்கா சமீபத்தில் இறந்துவிட்டார்.. சின்ன வயதிலிருந்தே பாரதிராஜாவை செல்லமாக வளர்த்தவர் இந்த அக்கா..
தாங்குவாரா இந்த செய்தியை
இந்த விஷயத்தை பாரதிராஜாவிடம் சொன்னாங்களா தெரியவில்லை.. இன்னும் மனோஜ் இறந்த அதிர்ச்சியிலிருந்தே அவர் வெளியே வரவில்லை.. அக்கா இறந்ததை சொன்னால், பாரதிராஜா தாங்குவாரா? தெரியாது.. அதனால் அக்கா மரணம் குறித்து அவரிடம் சொல்லியிருப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை.
அதுமட்டுமல்லாமல், அங்கே சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார்.. உடல் நிலை குணமடைந்து பழையபடி பாரதிராஜா சார், உற்சாகத்துடன் வரவேண்டும் என்பதே அனைவரின் ஆசையும்" என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications