கண்ணான கண்ணே! மகளை கண்டதும் ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்த ஊர்வசியின் முன்னாள் கணவர்
சென்னை: தனது மகளை பார்த்ததுமே ஊர்வசியின் முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயன் கட்டி அணைத்தார். மகள் தேஜலட்சுமி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அந்த விழாவிற்கு வந்தபோதுதான் மனோஜ் தனது மகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.
மலையாளத் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் ஊர்வசி. இவரை முந்தானை முடிச்சு எனும் படத்தில் பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார். இந்த படத்திற்கு புதுமுக ஹீரோயினை தேடிய போதுதான் ஊர்வசியை பாக்யராஜ் தேடி பிடித்தார்.

இதைத் தொடர்ந்து ஊர்வசி பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கமல்ஹாசனால் நடிப்பு ராட்சசி என பெயர் பெற்றவர் ஊர்வசி! கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஊர்வசி நடித்திருந்தார்.
இவர் காமெடி, குணசித்திரம் என எந்த ரோல் கிடைத்தாலும் தனது 200 சதவீத உழைப்பை போடுவார். இவருக்கும் தூள் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த மனோஜ் கே.ஜெயனுக்கும் காதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2001 ஆம் ஆண்டு தேஜலட்சுமி என்ற மகள் பிறந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள நடிகை ஊர்வசிக்கும் மனோஜுக்கும் கருத்து வேறுபாடு நிலவியது.
இதையடுத்து அவர்கள் 2008ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக் கொண்டார். பின்னர் 2013 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
தனது அம்மாவைப் போலவே மலையாள படத்தில் ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி அறிமுகமாகிறார். "சுந்தரியாயவள் ஸ்டெல்லா" எனும் படத்தில் ஹீரோ சர்ஜனோ காலித் நடிக்கிறார்.
இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இதில் இந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகை ஊர்வசியின் மகள் அறிமுகமாவதாக அறிவித்தார்.
பல்வேறு தமிழ் படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன், 2011 ஆம் ஆண்டு ஆஷா என்பவரை மறுமணம் செய்துக் கொண்டார். தனது மூத்த மகள் தேஜலட்சுமி ஹீரோயினாக போவதை அறிந்த மனோஜ் தான் ரொம்பவே பெருமைப்படுவதாகவும், கண்டிப்பாக சினிமாவில் பெரிய நட்சத்திரமாக தனது மகள் மாறுவார் என்றும் கூறி மகிழ்ந்துள்ளார்.
தனது மகளை மனோஜ் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். அவரது முகத்தில் அத்தனை பூரிப்பு இருந்தது. ஊர்வசி மகளுக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தளபதி, தூள், திருமலை, ஜனா, திருப்பாச்சி, திருட்டுப் பயலே, திமிரு, வில்லு, பில்லா 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் மனோஜ்.












Click it and Unblock the Notifications