எல்லாமே நல்லாருக்கு.. வியூவர்ஸும் இருக்காங்க.. பட் ரேட்டிங் இல்லியேப்பா!
சென்னை: சன், விஜய், ஜீ தமிழ் தொலைக்காட்சிகளின் பல சீரியல்களுக்கு வியூவர்ஸ் அதிகமா இருக்காங்களாம். பட் ரேட்டிங்கில் இடம் பிடிக்க முடியலை என்று ஒரு கருத்து இருக்கு.
வியூவர்ஸ் அதிகம் இருந்தால் எப்படி அந்த சீரியல் ரேட்டிங்கில் இடம் பிடிக்காமல் இருக்கும் என்று கேள்வி எழுகிறது. ஆனால், பல சீரியல்கள் அப்படி ரேட்டிங்கில் இடம் பிடிக்காமல் இருக்கே...
சன் டிவியில் காலை முதல் மதியம் 12:30 மணி வரையான சீரியல்களுக்கு வியூவர்ஸ் இருந்தாலும் ரேட்டிங்கில் இல்லவே இல்லை. அதே போல என்னென்ன சீரியல்கள், எந்தெந்நத டிவியில் என்று பார்ப்போம்.

சன் டிவி ரன் சீரியல்
சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் ரன். இது விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பு சீரியல், இதில் கிருஷ்ணா ஹீரோவாக நடிச்சு இருக்கார். ஜோடியாக இவரது மனைவி சாயாசிங்கே நடிச்சு வர்றார். என்றாலும், இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு மக்களிடம் ரீச் ஆகவில்லை. இரவு நேரத்தில், பகலில் மறு ஒளிபரப்பாகும் நேரத்தில் என்று இரண்டு முறை ஒளிபரப்பாகி ஓரளவுக்கு வியூவர்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஈரமான ரோஜாவே
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் பகலில் இரண்டு முறை விஜய் டிவியில் ஒளிபரப்பப் படுகிறது. நிறைய பேர் இந்த சீரியலை ஹாட் ஸ்டாரின் விரும்பிப் பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு வெற்றி, மலர் ஜோடி ரொம்ப பிடித்த ஜோடி. இவர்களின் முதலிரவு எப்போது நடக்கும் என்று ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இளைஞர்கள் இந்த சீரியலை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள். இதனால் வியூவர்ஸ் அதிகமாகி இருந்தாலும் ரேட்டிங் மட்டும் சுத்தமாக இல்லவே இல்லை.

பாரதி கண்ணம்மா சீரியல்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கருப்பு கண்ணம்மா, கறுப்பே ஆகாது என்று சொல்லும் சவுந்தர்யா அம்மா என்று கதை ஆரம்பிச்சதால், ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்கத் துவங்கி இன்று தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பார்த்து வருகின்றனர்.இந்த சீரியலுக்கும் வியூவர்ஸ் அதிகம் என்றாலும் ரேட்டிங் இல்லை.

நாச்சியார் புரம் ஜீ டிவி
ஜீ தமிழ் டிவியில் நாச்சியார் புரம்னு ஒரு சீரியல், இதில் ரீல் ஜோடியாக ரியல் ஜோதியே நடிப்பதால், மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். நல்ல ரேட்டிங்கில் இடம் பிடிக்க வேண்டிய இரவு நேரத்தில்தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருது. நிறைய பேர் விரும்பிப் பார்த்தாலும், ரேட்டிங்கில் மட்டும் இடம் பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
எதாவது ஒரு வகையில் ஸ்பெஷலாகி மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டு, விளம்பரதாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்பான்சர் தர முன்வந்தால் மட்டுமே அந்த சீரியல் ரேட்டிங்கில் உள்ளது என்று பொருள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications