மணி மணியா மியூசிக் போட்ட மரகதமணி.. அடுத்து தேவா.. ஆமா, மக்களுக்கு இசைஞானி செய்த உதவி என்ன: பிரபலம்
சென்னை: வருடத்துக்கு 40, 50 படங்களுக்கு இளையராஜா இசையமைத்து கொண்டிருந்தபோது, பணம் அளவுக்கு அதிகமாக சேர துவங்கியது.. ஆனால், தன்னுடைய சமூகத்துக்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை.. தன் சமூகத்தை பற்றி பேசுவதைகூட தவிர்த்தார்.. தான் இந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பதை சொல்லி கொள்வதையும் தவிர்த்தார்.. எனினும் கல்விச்சேவை உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்காக இளையராஜா நிறைய செய்திருக்க வேண்டும்" என்று பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கருத்து தெரிவித்துள்ளார்.
King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், ஆரம்பத்தில் இளையராஜா ஜாலியாக இருந்தார்.. ஸ்டைலிஷ் லுக்கில் இருப்பார்..

ஜாடை மாடை காதல்
ஒருமுறை தன்னுடைய பேட்டியில், "நான் ஒரு பெண்ணை காதலித்தேன், அந்த பெண்ணும் என்னை காதலித்தார்.. ஆனால் ஜாடை மாடையாகத்தான் பேசிக்கொள்வோம்.. ஒருநாள் அப்படி பேசும்போது திடீரென என்னுடைய அக்கா வந்துவிட்டார்.. ஆனால், அந்த பெண்ணை நான் உயிருக்கு உயிராக காதலித்தேன். அந்த பெண்ணுக்கு இன்று 3 பிள்ளைகள் இருக்காங்க.. அவர்தான் என்னுடைய மனைவி" என்று கூறியிருந்தார்..
இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியதுதான் என்று வனிதா விஜயகுமார் சமீபத்தில் கூறியிருந்தார்.. நெருப்பில்லாமல் புகையாது.. இப்படியான பேச்சு அப்போது இருந்திருக்கலாம்.. மரம் சும்மாயிருந்தாலும் காற்று சும்மாயிருக்காது என்பது போல அன்று இளையராஜா உச்சத்தில் இருந்தபோது, பலரும் இளையராஜா குடும்பத்துடன் நெருக்கமாக இருக்க ஆர்வம் காட்டினார்கள்.
இளையராஜாவின் கறார் கண்டிஷன்
அதேபோல இளையராஜா நேரத்தை சரியாக கடைப்பிடிப்பார்.. தினமும் காலை 7 மணிக்கெல்லாம் ஸ்டுடியோ வந்துவிடுவார்.. அத்துடன் இரவுதான் வீட்டுக்கு கிளம்பி செல்வார்.. தன்னுடைய ஸ்டுடியோவுக்குள் யார் வந்தாலும், மது அருந்திவிட்டு வரக்கூடாது என்பதில் கறாராக இருப்பார்..
ஒருகட்டத்தில் உச்சத்துக்கு இளையராஜா வந்த பிறகு யாருக்குமே கை கொடுக்க மாட்டார்.. அப்படி கை தந்தால், தன்னுடைய கையிலுள்ள அருள், கை கொடுப்பவருக்கு சென்றுவிடும் என்று நினைப்பார்..
பிறகு தன்னை ஒரு சாமியாராக காட்டிக் கொண்டார்.. தன்னுடைய பாடல்கள் வெற்றிக்கு காரணமே அம்மனின் அருள் என்று சொல்ல துவங்கினார்.. இதற்கு ஒருவர், "அப்படின்னா நேத்து ராத்திரி எம்மா பாடல் கூட, அம்மன் அருளியதா சார்?" என்று கிண்டலாக கேட்டிருந்தார்.
தான் ஒரு சாமியார், உயரிய அந்தஸ்துடையவன் என்பது போலவே சொல்லி கொண்டார்.. ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் நிறைய செய்தார்.. ஆனால், கருவழைக்குள் நுழைய அனுமதியில்லை..
கல்விச்சேவை செய்திருக்கலாம்
வருடத்துக்கு 40, 50 படங்கள் செய்தபோது, பணம் அளவுக்கு அதிகமாக சேர துவங்கியது.. ஆனால், தன்னுடைய சமூகத்துக்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை.. தன் சமூகத்தை பற்றி பேசுவதைகூட தவிர்த்தார்.. தான் இந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பதை சொல்லி கொள்வதையும் தவிர்த்தார்.. எனினும் கல்விச்சேவை உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்காக இளையராஜா நிறைய செய்திருக்கணும்.
சிலசமயம் வார்த்தைகள் எல்லை மீறி போய்விடும்.. தன்மையாக பேசுவது என்பது சிலசமயம் வராது.. ஒரு இசை விழா மேடையில், மியூசிக் பற்றி உனக்கென்ன தெரியும்? என்று பார்த்திபனிடம் கேட்டார்.. கிண்டல் செய்யலாமே தவிர, இப்படியெல்லாம் பொதுவெளியில் கேட்கக்கூடாது.. தன்னை அறியாமல் இப்படி பேசிவிடுகிறார்..
ஏஆர் ரஹ்மானுக்கு இசைக்கருவிகள் கையில் கிடைக்காதவாறு, அவரை ஒரு வருடத்துக்கு இளையராஜா அலைய விட்டதாகவும் புரளிகள் உண்டு..
மரகதமணி, தேவா
பாடலில் திருப்தியில்லாத பட்சத்தில், இந்த பாடலை சற்று மாற்றி தாருங்கள் என்று மணிரத்னம், பாலச்சந்தர் போன்ற டைரக்டர்கள் கேட்டால், "ஏன், பாட்டு பாடல் நல்லாதானே இருக்கு? என்று சொல்லி மாற்றித்தர மாட்டாராம் இளையராஜா..
இதற்கு பிறகுதான், சில இயக்குனர்கள் இளையராஜாவை தவிர்க்க நினைத்து, வேறு புதிய நபர்களை வைத்து இசையமைக்கலாம் என்று முடிவெடுத்தனர்.. அப்போது தேவாவை வைத்து அண்ணாமலை, ரஹ்மானை வைத்து ரோஜா, மரகதமணியை வைத்து பாலச்சந்தரும் புதிய இசையமைப்பாளர்களை அப்போது களமிறக்கினார்கள்.. அப்போது அந்த வருடத்தில் மேற்கண்ட இசையமைப்பாளர்களுக்கு இளையராஜாவைவிட ரீச் அதிகமாக கிடைத்தது" என்றெல்லம் கூறியிருக்கிறார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications