மரண மாஸ் கூலி ரஜினிகாந்த்.. 1000 மடங்கு ஜெயிலர் படம் தேவலை! அனிருத் கீ-போர்டிலிருந்து கையை எடுக்கலயே
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் கூலி. நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டாக தயாரித்துள்ளது. இன்று இப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், படத்தை பத்திரிகையாளர் சுபைர் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "கூலி படத்தில் வின்டேஜ் ரஜினியை பார்க்க முடிந்தது.. பழைய ஸ்டைல், பழைய வாய்ஸில் ரஜினியை பார்ப்பது அல்ட்டிமேட்டாக உள்ளது.. சண்டைகள், எதிர்பாராத ட்விஸ்ட்கள், பில்டப் சீன்கள் என ரஜினி ரசிகர்களுக்கேற்ற அத்தனை விஷயங்களும் இதில் உள்ளன.

விஷூவல் எஃபெக்ட்
பிளஸ் போலவே சில மைனஸ்களும் படத்தில் உள்ளன.. 2 மணிநேரம் 50 நிமிடம் படம் ஓடுகிறது.. இப்படத்தின் நீளம் வேண்டுமானால் சற்று குறைத்திருக்கலாம்.. கேமரா, விஷூவல் எபெக்ட, எல்லாமே நன்றாக செய்திருக்கிறார்கள்.. அதேபோல, நிறைய கிளைக்கதைகள் உள்ளதால், அதை விரிவாக சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.. சில கேரக்டர்கள் யார் யார் என்றே புரியவில்லை..
அதேபோல, வன்முறைகள் அதாவது படத்தில் கொலைகளை செய்வதுகூட கொடூரமாகவே காட்டப்படுகிறது. அதேபோல சில இடங்களில் தேவையில்லாத விஷயங்களை விஷூவலாகவும், தேவையுள்ள விஷயங்களை டயலாக்காகவும் வைத்துவிட்டார்கள்..
விசிலு பறக்குதே
அதேபோல அனிருத், படம் ஆரம்பித்தபோது கீபோர்டில் வைத்த கை தான்.. எல்லாம் படம் முடிச்சிட்டு வெளியே வரும்வரை கையை எடுக்கவே இல்லை போல. அரங்கம் அதிர விசிலு பறக்குதே என்ற சத்தம் தியேட்டர் வெளியே வரை கேட்டுக் கொண்டே இருக்கிறது.. பில்டப் சீன்கள், சண்டை காட்சிகளில் BGM இருக்கும் என்றால், எல்லாரும் டயலாக் பேசும்போதுகூடு மியூசிக் வாசிக்கிறார்.. வாங்கின காசுக்கு வஞ்சனையில்லாமல் வேலை பார்த்துள்ளார் அனிருத்..
வின்டேஜ் ரஜினிதான் இதில் அல்டிமேட்.. அதே பீடி, அதே குரல், அதே போன்ற கெட்டப்பில் ரஜினியை பார்த்ததுமே தியேட்டரில் விசில் பறக்கிறது.. எனவே, அந்த காட்சிகளை எல்லாம் சற்று அதிகப்படுத்தியிருக்கலாம்.. பழைய ரஜினியை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் கைகளை தட்டுவதால், உபேந்திரா ரஜினி, சத்யராஜ் ரஜினி வரும் காட்சிகளை எல்லாம் இன்னும் நீளப்படுத்தி இருக்கலாம்..
நாகார்ஜூனா செம ரோல்
பஸ்ஸில் வரும் சண்டைக்காட்சிகள் அல்டிமேட்டாக இருக்கிறது.. அறிமுக காட்சிகள் நன்றாக இருக்கிறது.. அனைத்து நடிகர்களுமே தரப்பட்ட வேலைகளை சரியாக செய்துள்ளனர்.. ரஜினிகாந்துக்கு இணையாக நாகார்ஜுனாவுக்கு கேரக்டர் தரப்பட்டுள்ளது..
சுருதிஹாசன் படம் முழுக்க அழுதுட்டே இருக்காரு.. நடிப்பதற்கான பெரிய ஸ்கோப் அவருக்கு இதில் கிடைக்கவில்லை.. லோகேஷ் இருந்தும், நடிப்பதற்கான வாய்ப்பை ஸ்ருதிஹாசனுக்கு தரவில்லையே என்று வருத்தமாக உள்ளது.. சார்லி நல்ல நடிகர்.. 4 சீன்களில் வருகிறார், ஆனால், அவரையும் இந்த படத்தில் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
லோகேஷ் டச் இருக்கா
சில இடங்களில் படத்தில் தொய்வு காணப்படுகிறது. சில விஷயங்களை இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம்.. அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் என்று நினைத்திருக்கலாம், எல்லாருக்குமே எல்லா விஷயங்களுமே புரிந்துவிடுவதில்லை. மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது, லோகேஷின் டச் இந்த படத்தில் இல்லை என்றே சொல்லலாம்..
கூலி படம் தற்போது கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.. A certificate, ஓவர்சீஸில் போகக்கூடிய பிசினஸ், ஃபேமிலி ஆடியன்ஸ் பார்ப்பார்களா? அடுத்தடுத்த நாட்களுக்கு மக்களின் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது, போன்றவற்றை வைத்துதான், வசூலை பற்றி சொல்ல முடியும்..
ரூ.1000 கோடி அடிக்குமா?
எல்லாரும் சொல்லி வந்ததுபோல, கூலி படம் ரூ.1000 கோடி அடிக்குமா என்பது தெரியவில்லை.. கேரக்டர்களை தெளிவாக சொல்லாமல், குழப்பத்திலேயே படத்தை பார்ப்பதால், B & C-யில் இந்த படம் புரியுமா என்றும் தெரியவில்லை.. ஆனால், இந்த வயதிலும் ரஜினியின் எனர்ஜி அப்படியே இருக்கு.. ஃபைட் சீன்களில் சூப்பராக செய்திருக்கிறார்..
ஜெயிலர் - கூலி இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், ஜெயிலர் படம் கூலியைவிட 1000 மடங்கு நல்ல படம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications