"ஸ்டைலு ஸ்டைலுதான்" பாடல் டியூன் முதலில் எந்த படத்திற்கு தேவா போட்டார் தெரியுமா? நடிகர் மாரிமுத்து
சென்னை: பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல் டியூன் முதலில் எந்த நடிகருக்கு போடப்பட்டது என்பதை எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் டிரெண்டிங்கில் உள்ள சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு இருக்கும் வரவேற்பால்தான் இது வாரத்தில் 7 நாட்களும் ஒளிபரப்பப்படுகிறது. இதன் இயக்குநர் திருச்செல்வன் இந்த சீரியலை மிகவும் நேர்த்தியாக இயக்கி வருகிறார்.

இதில் வசனம் எழுதியது சீரியல் நடிகை ஸ்ரீவித்யா. இந்த சீரியலில் நடிக்கும் ஒரு கதாபாத்திரம் கூட அப்படி இப்படி இல்லாமல் பயனுள்ள வகையில் அதே சமயம் அவர்களிடம் இருந்து நடிப்பை பிழிந்து எடுத்தது போல் அனைவருமே சூப்பராக நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டர்தான் ஹைலைட்டே. இவர் பேசும் வசனங்கள் காமெடி நடிகர்களின் டெம்ப்ளேட் போல் மாறி சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக கலக்கி வருகிறது. அதிலும் இவர் பேசும் ஏய் இந்தாம்மா ஏய் மிகவும் பிரபலமான டயலாக் ஆகும். இவரது பாடி லேங்குவேஜ் மிகவும் அருமையாக இருக்கும்.
இதுவரை மாரிமுத்து இயக்குநராக சில படங்களை எடுத்துள்ளார். அது போல் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு அப்போதெல்லாம் கிடைக்காத மிகப் பெரிய வரவேற்பு இவருக்கு இந்த சீரியல் மூலம் கிடைத்துள்ளது. பொதுவாக வில்லன்களை மக்கள் திட்டுவார்கள். ஆனால் ஆதி குணசேகரனுக்கு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அதிலும் சன் டிவி விருது வழங்கும் விழாவில் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை கயல் சீரியலில் தர்மலிங்கம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் தட்டிச் சென்றார். இதனால் ஏன் மாரிமுத்துவுக்கு கொடுக்கவில்லை என சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அந்த அளவுக்கு மாரிமுத்துவுக்கு ஃபேன் பேஸ் இருக்கிறது.
அண்மையில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு ஜோதிடர்களுக்கு எதிராக பேசிய நிலையில் அவர் மீது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜோதிடர்கள் புகார்களை தெரிவித்தனர். இதில் ஜோதிடர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என்றும் நாடு பின்தங்கி இருப்பதற்கு ஜோதிடர்கள்தான் காரணம் என்றும் சரமாரியாக பேசியிருந்தார். இதற்காக அவர் அந்த சபையிலேயே மன்னிப்பும் கேட்டு விட்டதாக ஜோதிடர் ஒருவர் பேட்டி அளித்திருந்தார்.
இந்த நிலையில் மாரிமுத்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு சீனில் வில்லன் விநாயகத்திடம் பேசும் போது தமன்னா நடித்த தஞ்சாவூர் ஜில்லாகாரி பாடலை பாடி தியேட்டரையே சிரிப்புக்குள்ளாக்கினார். இவர் அண்மையில் சன்டிவிக்கு அளித்த பேட்டியில் பாட்ஷா படத்தில் வரும் ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல் இசை, நடிகர் அஜித்தின் ஆசை படத்திற்காக முதலில் போடப்பட்டது. ஆனால் சற்று மெலடியாக வேண்டும் என இயக்குநர் வசந்த் கேட்டுக் கொண்டதால் மீனம்மா பாடலை தேவா கொடுத்தார். ஸ்டைலு ஸ்டைலுதான் பாடலை பாட்ஷா படத்திற்கு பயன்படுத்திக் கொண்டார் என மாரிமுத்து தெரிவித்திருந்தார். இவர் ஆசை படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications