அவர் அப்படிப்பட்டவர் இல்லை.. பயந்த பூர்ணிமா! நான் பிரதீப்கிட்ட எல்லாத்தையும் சொல்ல போறேன் -மாயா ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பிரதீப் குறித்து மாயா மற்றும் பூர்ணிமா பிக் பாஸ் 7ல் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இடையே இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து வரும் பிக் பாஸ் 7 சீசனில் நடிகர் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிராக நடிகை மாயா உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பினார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர் வெளியேற்றப்பட்டு உள்ளார். கமல் விசாரிக்கவில்லை: கமல்ஹாசன் இதை சரியாக விசாரிக்காமல் முடிவு எடுத்துவிட்டார். அதோடு பிரதீப் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை. இதில் கமல் தீர விசாரிக்கவில்லை என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன.

 Maya takes a u-turn in Pradeeps issue while talking with Poornima in Bigg Boss 7 Tamil

முக்கியமாக தற்போது விஜே அர்ச்சனா போன்றோர் கேட்கும் கேள்விகளை பார்க்கும் போது.. மாயா கேங்க் திட்டமிட்டு பிரதீப்பிற்கு இருக்கும் புகழ் காரணமாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அவரை வெளியே அனுப்பிவிட்டார்களோ என்றும் கேட்க தோன்றுகிறது. இதில் மாயா, பூர்ணிமா புகார்களை தாண்டி வேறு ஏதோ நடந்துள்ளது. வேறு அழுத்தம் காரணமாக இவர் நீக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் இதற்கு கமல்ஹாசன் கொடுத்த விளக்கம் கூட பெரிதாக பிரதீப் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

மாயா பேச்சு விவாதம்: இந்த நிலையில்தான் பிரதீப் குறித்து மாயா மற்றும் பூர்ணிமா பிக் பாஸ் 7ல் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இடையே இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாயா: பிரதீப் போன அந்த வீக் எண்ட் பற்றி நினைக்கும் போது பயமா இருக்கு

பூர்ணிமா: பயமா இல்லை.. ஒரு மாதிரி இருக்கு

மாயா: இதை பத்தி பேசலாமானே தெரியல.. இப்போ சார் சொல்றாரு.. உங்ககிட்ட ரெட் கார்டு கொடுத்தோம்.. நீங்கதான் அதை பயன்படுத்துனீங்கன்னு.. ஒரே ஒரு டவுட்தான்.. வெளியே போய் பாதுகாப்பா இருப்போமா?

பூர்ணிமா: வெளியே போனாதான் தெரியும். பிரதீப் அப்படிப்பட்டவர் இல்லைன்னு நினைக்கிறேன். அவன் பிரச்சனைன்னு சொல்றியா.. ஆடியன்ஸை சொல்றியா?

மாயா: அவனுக்கு ஆடியன்ஸ் இருக்காங்களா.. பேன்ஸ் இருக்காங்களா.. வெளியே போய் பாதுகாப்பா இருப்போமா? ------ அதை நான் பண்ணல.. நீங்கதான் பண்ணீங்க.. ஆனா நான் ஒத்துகிறேன்... ------ அது தான்.. ஒத்துகிறேன்.. பயமா இருக்கு.

பூர்ணிமா: இதை "அவர்" ஹேண்டில் செய்வார் என்று நம்புகிறேன்.

மாயா: நான் எல்லாம் நேராக சென்று பிரதீப்பிடம் பேசுவேன். நான் போய் இதுதான் நடந்தது.. இதெல்லாம் நடந்தது என்று எல்லாம் சொல்வேன். நீ இதெல்லாம் செய்தாய்.. எங்களால் சொல்ல முடியவில்லை என்று நான் பிரதீப்பை மீட் பண்ணி சொல்லிருவேன். பாரு இதான் மேட்டரு இதான் அப்படினு எல்லாத்தையும் அவர் கிட்ட சொல்லிடுவேன். இங்கே அவரை அனுப்பியதற்கு யாரும் பொறுப்பேற்பது இல்லை, என்று மாயா திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

நீ இதெல்லாம் செய்தாய்.. எங்களால் சொல்ல முடியவில்லை என்று மாயா எதை கூறுகிறார்.. எல்லாத்தையும் சொல்லிவிடுவேன் என்று அவர் எதை சொல்கிறார்.. என்ற கேள்வி இணையத்தில் விவாதமாக எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+