அரண்மனை கிளியிலும் மாயன் அலப்பறையா.... இதென்ன கதை....? ஆனா நல்லாருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் மாயன் ஒரு கேரக்டரா உள்ளே போயிருப்பது சுவாரஸ்யமான விஷயமா இருக்கு.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் ஒரு கேரக்டர்தான் மாயன். இவன் அரண்மனை கிளி சீரியலில், தன் தம்பி அரவிந்த் டாக்டர்னு சொல்லிக்கிட்டு உள்ளே வந்திருக்கான்.

ஏற்கனவே அரண்மனை கிளி அர்ஜுனின் நண்பன் போலவும், நண்பனுக்கு உதவி செய்யவும் தம்பி பேரை சொல்லி டாக்டர் மாதிரி உள்ளே வந்திருக்கான்.

ஜானுவும் அர்ஜுனும்

ஜானுவும் அர்ஜுனும்

அர்ஜுன் பணக்கார தொழிலதிபர் மீனாட்சி அம்மாவின் செல்ல மகன். இவனுக்கு திடீர்னு ஒரு விபத்து ஏற்பட்டு, நடக்க முடியாம போயிடுது. சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை. இவனுக்கு ஜானுவை கல்யாணம் செய்து வைக்கறாங்க.

ஏழை ஜானு

ஏழை ஜானு

மீனாட்சி அம்மா வீட்டில் எடுபிடி வேலை செய்பவரின் பெரிய மகளை அர்ஜுனுக்கு மனம் முடிக்க ஏற்பாடுகள் செய்ய, மீனாட்சி அம்மா வீட்டில் இருக்கும் கெட்டவர்கள் அவள் மனதை மாற்றி தப்பிச்சு ஓட செய்துவிடுகிறார்கள். இதனால் அக்காவுக்கு பதில் தங்கை இந்த கல்யாணத்துல மாட்டிக்கறா.

பிடிக்கலை அர்ஜுனுக்கு

பிடிக்கலை அர்ஜுனுக்கு

ஜானுவை அர்ஜுனுக்கு பிடிக்காமல் அவளை மனுஷியாவே மதிக்கறதில்லை அர்ஜுன். கொஞ்சம் கொஞ்சமாக ஜானு அர்ஜுன் மனசில் இடம் பிடிக்கறா. ஆனால், அதுக்குள்ளே ஜானுவை விவாக ரத்து பண்ணிடணும்னு ஆரம்பத்தில் அர்ஜுன் எடுத்த முடிவை குடும்பம் மாத்திக்கறதா இல்லை.

ஜானு அதிர்ச்சி

ஜானு அதிர்ச்சி

விவாகரத்து செய்யப் போறார் அர்ஜுன் சார்னு கேள்விப்பட்ட உடனே அதிர்ச்சியாகிடறா ஜானு. ஆனால், விவாகரத்துக்கு சரியான காரணம் இரு தரப்பிலும் சொல்லப்படலைன்னு சொல்லிட்டு இவங்க விவாக ரத்து கேஸை ரத்து செய்துடுது நீதிமன்றம்.

கேஸ் மீண்டும்

கேஸ் மீண்டும்

மீண்டும் கோர்ட்டில் விவாகரத்து கேஸ் நடக்குது. எப்படியும் அர்ஜுனையும், ஜானுவையும் பிரிச்சுடணும்னு வீட்டார் நினைக்கறாங்க. ஜானுவுக்கு இதில் விருப்பம் இல்லை.. அர்ஜூனுக்கும் விருப்பம் இல்லைன்னாலும் தன்னை கல்யாணம் செய்துகிட்டு ஜானு எந்த சுகத்தையும் அனுபவிக்கலை...பிரிஞ்சுட்டாலாவது வேற கல்யாணம் செய்துகிட்டு நல்லாருப்பான்னு நினைக்கறான்.

மாயன் சேர்த்து

மாயன் சேர்த்து

இவர்களை சேர்த்து வைக்க மாயன் தன் தம்பி டாக்டர் அரவிந்த் கேரக்டரில் அரண்மனை கிளி சீரியலில் அர்ஜுன் நண்பனா வர்றான். இவன் வந்து அர்ஜுனையும், ஜானுவையும் சாப்பிட சேர்ந்து உட்காருங்கன்னு சொன்னதுமே வீட்டாருக்குப் பத்திகிட்டு வருது.

ஊட்டிவிட சுவீட்

ஊட்டிவிட சுவீட்

சாப்ப்பாட்டிலிருந்த சுவீட்டை ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டிவிட சொல்றான். வீட்டிலிருக்குமீனாட்சி அம்மாவுக்கு ஆகாதவங்க எப்படா டைவர்ஸ் வாங்குவாங்கன்னு நாங்க இருக்கோம்.. இவன் ஊட்டிவிட சொல்றான்னு முணுமுணுக்க..

டாக்டர் சந்திரமுகி

டாக்டர் சந்திரமுகி

என்ன இங்கே மைண்ட் வாய்ஸ் நிறைய ஓடிக்கிட்டு இருக்கேன்னு சொல்றான். என்னது உங்களுக்கு மனசுல இருக்கறது கேட்குமான்னு கேட்கறாங்க.. எனக்கு சந்திரமுகி டாக்டர்னு பேருங்கன்னு சொல்றான் மாயன்...

ஒரு சீரியலின் கேரக்டர் இன்னொரு சீரியலில் வர்றதும் நல்லாத்தான் இருக்கு.இந்த புது யுக்திக்கு விஜய் டிவியை பாராட்டலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+