பார்க்கத்தான் ஜிங்குச்சான்... டக்குன்னு வருதே மாயனுக்கு ரொமான்ஸ்..!
சென்னை: விஜய் டிவியின் 6 வது விருது வழங்கும் விழா நாளைக்கு 3:30 மணிக்கு தொடங்கி நடக்குதாம்.
விஜய் டிவியில என்ன பண்ணிட்டாங்க.. சீரியல் குடும்பங்களுக்கு போயி, ஒரு விசிட் அடிச்சு, எந்த விருது உங்களில் யாருக்கு கிடைக்கும்.. இப்படி அப்படின்னு முன்னோட்டம் சூட் செய்து காமிக்கறாங்க.
ஆர்.ஜெ.செந்தில் நடிக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஷூட்ல நுழைஞ்சுட்டாங்க. இதுலதான் செந்தில் மாயன் அரவிந்த்னு ரெட்டை வேஷத்துல நடிக்கறார்.

இப்போ முன்னோட்டம் போயிருக்கறது மாயன் வீட்டுக்கு. மாயன் எப்படி இருப்பான்னு விளக்கிய செந்தில் இந்த கெட்டப் இயக்குனர், வசனகர்த்தா, டயலாக் ரைட்டர்னு பல பேருடைய ஐடியாவுல உருவானதுன்னு சொன்னார்.

அதாவது மாயன் ரெட்டை காலர் சட்டை, ரெண்டு கூலிங் கிளாஸ், உள்ள ஒரு கலர், வெளிய ஒரு கலர்னு ஜிங்குச்சா லுங்கி.. நெத்தியில கருப்பு கோடு, அச்சு அசல் மதுரை பாஷை.. இதான் மாயன். மாயனின் இந்த கெட்டப்புக்கு நிறைய கேர்ள்ஸ் ஃபேனா இருக்காங்களாம்.

மாயனை, தேவியோடு ரொமான்ஸ் பண்ண சொன்னபோது, உடனே தயாராகிட்டார். கிட்ட போயி, ரொமான்ஸ் லுக் விட்டு, ஏங்க.. இன்னிக்கு ராத்திரி மலையாள படம் பார்க்க போலாமாங்கன்னு கேட்கறான். அவள் ஒரு மாதிரி அதிர்ச்சியில் பார்க்க, ஐயோ..நீங்க நினைக்கற மாதிரி படமில்லைங்க மலையாள படம்னா இது கருத்துள்ள படம்ங்கன்னு சொல்றான்.

இல்லை நான் வரலைன்னு சொல்ல, சரி ஊரு கோயில்ல ஒரு பட்டிமன்றம் நடக்குதாம் போலாமாங்கன்னு கேட்கறான். நான் வரலைன்னு சொல்ல, இதுக்கு நீங்க வரலேன்னு சொல்லவே மாட்டீங்க அப்படி ஒரு இடத்துக்கு கூப்பிட போறேன்னு சொல்றான்.
எங்கன்னு தேவி கேட்க விஜய் டிவியின் 6 வது விருது வழங்கும் விழாவுக்கு போலாமான்னு கேட்கறான்.. ஓ..போலாமேன்னு சொல்றா தேவி.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications