ஒரு பொண்ணை காதலிக்கறது.. இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்துக்கறது.. எங்கடா போயிட்டிருக்கோம் நாம?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் பற்றி பேசி ரொம்ப நாளாச்சு.. ஜனனியும், சந்தோஷும் இப்போது பிரிஞ்சு இருக்காங்க. சந்தோஷ் அண்ணி மாயா, பரிகாரம், பூஜைன்னு சொல்லி ஜனனியை அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.

ஜனனி சந்தோஷையே நினைச்சுகிட்டு, தனது மாமனார் உடல்நிலை எப்படி இருக்குதோன்னு கவலைப்பட்டுக்கிட்டும் இருக்கா. சந்தோஷும் ஜனனியை நினைச்சுக்கிட்டுத்தான் இருக்கான்.

ஜனனிக்கு திடீர்னு லாயர்கிட்டேருந்து போன் வருது. ஜனனி எடுத்து பேச, நீயும், சந்தோஷும் என் வீட்டு வரைக்கும் வந்து போங்கம்மா.. கொஞ்சம் பேசணும்னு சொல்றார்.சரி, வர்றோம் சார்னு சொல்லி போனை வைக்கறா ஜனனி.

சந்தோஷ்

சந்தோஷ்

சந்தோஷ் உங்க வீட்டுக்கு வந்து நான் அழைச்சுட்டு போறேன் ஜனனின்னு சொல்றான். இல்லைங்க.. நான் ஆட்டோவில் வந்துடறேன்னு சொல்றா. என்ன ஜனனி இப்படி சொல்றீங்க.. நானே வந்து அழைச்சுட்டு போறேன்னு சொல்றான் சந்தோஷ். ஜனனியும் ஓகே சொல்றா.

சந்தோஷ்

சந்தோஷ்

சந்தோஷ் மாமனார் வீட்டுக்கு வர, ஜனனி அப்பாவும், அண்ணனும் சந்தோஷமா இருக்காங்க.ஜாலியா வெளியில போயிட்டு, ஏதாவது சாப்பிட்டுட்டு சந்தோஷமா வாங்கன்னு அனுப்பி வைக்கறாங்க.

 லாயர் அட்வைஸ்

லாயர் அட்வைஸ்

லாயர் தான் மனைவியை பிரிந்து வாழ்வது குறித்து மிகவும் கவலையுடன் பேசறார். பணம் புடுங்கின லாயரா இதுன்னு ஆச்சரியப்படும் அளவுக்கு பேசறார். கண்ணீர் விடறார்.. நீங்க ரெண்டு பேரும் டிவோர்ஸ் பண்ணாம வாழ்ந்து பாருங்களேன்..அப்பறமா ஒருத்தரை ஒருத்தர் மிஸ் பண்ணிட்டோமேன்னு வறுத்தப்படக்கூடாதுன்னு சொல்றார்.

 ஒருவர் பார்க்க

ஒருவர் பார்க்க

ஜனனியும், சந்தோஷும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கறாங்க. அதுவும், லாயர் வேற ஜனனி மாதிரி ஒரு மனைவி கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும் சந்தோஷ்னு சொல்றார். இருவர் மனமும் கனிந்து இருக்குமான்னு நினைக்கற அளவுக்கு கண்ணால பேசிக்கறாங்க..

காரில்

காரில்

ரெண்டு பேரும் பேசாம மவுனமா காரில் கிளம்பறாங்க. கூடவே சந்தோஷ் ஃபிரண்டும் வர்றான். ஜனனி ஏதாவது வீட்டுல வேலை இருக்கான்னு கேட்கறான் சந்தோஷ்.. இல்லை.. ஏன் கேட்கறீங்கன்னு கேட்க, ஜூஸ் சாப்பிட்டு போலாமான்னு கேட்கறான். ஜனனியும் ஓகே சொல்றா.

 வில்லங்கம்

வில்லங்கம்

சந்தோஷ் சில சமயம் தனிமையில் உங்களை மிஸ் பண்றேன் ஜனனின்னு சொல்றான். ஆனா, அவன் காதலிச்ச சக்தியையும் அவனால மறக்க முடியலை போல, ஜூஸ் கடையில் ரெண்டு பெண்கள் வர, தலையை குனிஞ்சுக்கறான் சந்தோஷ். இதை தெரிஞ்சுக்கிட்ட ஃபிரண்ட், சந்தோஷ், சந்தோஷ்னு வேகமா கூப்பிட, சந்தோஷ், உஷ்..உஷ்..னு அடக்கறான்.

 சொந்தகார பெண்

சொந்தகார பெண்

கடைசியில் அந்த பெண் திரும்பி பார்த்துட்டு, ஏய் சந்தோஷ்டி.. சக்தியோட ஆள்.. வாடி போய் பேசலாம்னு அந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் வர்றாங்க. ஹாய் சந்தோஷ்.. என்னை தெரியலையா.. நான் சக்தியோடு சொந்தகார பொண்ணுன்னு சொல்றா.. சந்தோஷ் தர்ம சங்கடத்தில் நெளிய, இவங்க யாரு இவ்ளோ அழகா இருக்காங்களேன்னு ஜனனியைப் பார்த்து சொல்றாங்க அந்த பொண்ணுங்க.

 இவன் தங்கச்சி

இவன் தங்கச்சி

சந்தோஷ் அவசரத்துடன்.. இந்த பொண்ணு இவனோட தங்கச்சின்னு சொல்லி சமாளிக்கறான். சீக்கிரமா சக்தியை கல்யாணம் செய்துக்கோங்க சார்னு சொல்லிட்டு கிளம்பறாங்க. சந்தோஷின் வார்த்தைகளைக் கேட்டு சுக்கு நூறாக உடைந்து போன ஜனனி, கிளம்பலாம்னு சொல்றா.

 வீட்டுக்கு

வீட்டுக்கு

காரில் வீட்டில் கொண்டு வந்து விட்ட சந்தோஷிடம், இனி நானே போயிக்கறேன்.. நீங்க கிளம்புங்கன்னு சொல்றா. ஜனனி..சந்தோஷ் சக்தியை கல்யாணம் செய்துகிட்டா, நீங்க தனியா இருக்க முடியுமா.. ஏதாவது வாழ்க்கையை தேர்ந்தெடுங்கன்னு சொல்றான் ஃபிரண்ட். அண்ணா நீங்க எனக்கு அண்ணன்தானே.. அப்படியே இருங்க. என் வாழ்க்கையை எப்பண்ணா நான் தீர்மானிச்சு இருக்கேன். மத்தவங்கதானே தீர்மானிக்கறாங்கன்னு சொல்லிட்டு வேதனையுடன் உள்ளே போறா...

ஒரு பொண்ணை காதலிக்கறது.. இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்துக்கறது.. அப்புறம் காதலிச்ச பொண்ணு நினைப்புல கல்யாணம் பண்ணின கையோட டிவோர்ஸ் பண்றது.. எங்கடா போயிகிட்டு இருக்கோம் நாம?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+