அன்று ஒர்க் ஷாப் பாடகர், இன்று சரிகமப போட்டியாளர்.. செந்தமிழன் யார் தெரியுமா? வியக்க வைக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை தான் பிரமாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வரும் மெக்கானிக் செந்தமிழன் கலந்து கொண்டிருக்கிறார். இவர் instagramல் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்தபடியே பாடல் பாடி வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அவர் இப்போது சரிகமப நிகழ்ச்சியில் பாடிய பாடல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

உண்மையான உழைப்பும் திறமையும் இருந்தால் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும் என்பதற்கு சான்றாக பலர் சாதித்திருக்கிறார்கள். அதுபோன்ற பலரை நாம் அன்றாடம் சந்தித்து வியந்து கொண்டிருக்கிறோம். அதேபோலத்தான் இப்போது சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்திருக்கும் செந்தமிழனும் அவருடைய பெயருக்கு தகுந்தது போலவே செந்தமிழ் பாடலால் அனைவரையும் மயக்கியிருக்கிறார்.

Sa Re Ga Ma Pa Zee Tamil

மெக்கானிக் பாடகர்

சரிகமப நிகழ்ச்சி அடி மட்டத்தில் இருக்கும் பல திறமையானவர்களையும் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது ஒரு திறமைசாலியை கண்டுபிடித்து அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. சோசியல் மீடியா பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதன் மூலம் பல நல்ல விஷயங்களும் நடக்கிறது, சில கெட்ட விஷயங்களும் நடக்கிறது.

செந்தமிழன் பயோகிராபி

பலர் தங்களுடைய திறமையை வெளியே காட்டி மேலும் மேலும் வளர்ந்து வருகிறார்கள். அதுபோல செந்தமிழனும் கரூரில் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்தபடி வீடியோக்கள் வெளியிட்டு சோசியல் மீடியா பிரபலமாக மாறி இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும் வீடியோக்கள் ரசிகர்களை வியக்க வைக்கிறது. கடுமையான வேலையாக இருந்தாலும் கொஞ்ச நேரம் ஃப்ரீயாக இருக்கும்போது, தான் கேட்டு ரசித்த தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், ஹிந்தி பாடல்களையும் பாடி பதிவிட்டு வருகிறார்.

திறமைக்கு அங்கீகாரம்

அதுபோல செந்தமிழனுக்கு சோசியல் மீடியாவில் 133கே பாலோவர்ஸ் இருக்கிறார்கள். ஒரு சிலர் அரைகுறை ஆடை, ஆபாசமாக பேசி வீடியோக்கள் போடுபவர்களுக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது ஆனால் திறமை இருப்பவர்களுக்கு சினிமா வாய்ப்பு எட்டாக்கனியாக இருக்கிறது. தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்கு சரியான இடம் கிடைக்காமல் பலர் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது சோசியல் மீடியா பிரபலமான செந்தமிழனுக்கு ஜீ தமிழ் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஆடிஷனில் செலக்ட் ஆகி இருக்கிறார்.

சரிகமப செந்தமிழன் வீடியோ

சரிகமப நிகழ்ச்சியில் தான் செலக்ட் ஆனது குறித்து செந்தமிழன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் செந்தமிழன் மகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார். "நீங்க எல்லாரும் இல்லன்னா நான் இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. நான் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்தபடியே ஏதோ வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருப்பேன்‌. எனக்கு பாட்டு பாடுவது தான் ரொம்ப பிடித்தது அதனால் அதை வீடியோவாக பதிவு செய்தேன்.

நான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடி வீடியோ போட்டேன். ஆனால் அதை நீங்கள் தான் எல்லோரும் ஷேர் செய்தீங்க, நீங்கதான் என்ன பாராட்டுனீங்க. நீங்க என்னுடைய பாடலை ஸ்டோரியா வச்சீங்க அதன் மூலமாக எனக்கு இன்னைக்கு ஒரு அங்கீகாரமும் அடையாளமும் கிடைத்திருக்கிறது. நான் இப்போது சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனில் செலக்ட் ஆகிவிட்டேன் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்.

சரிகமப செந்தமிழன் பாடிய பாட்டு

சரிகமப சீசன் 5 சீனியர் நிகழ்ச்சியில் வெற்றிக்கொடி கட்டு என்ற பாடலை செந்தமிழன் பாடி அவருடைய வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இன்று கஷ்டப்படுபவர்களுக்கும் நாளைக்கு நல்ல வாழ்க்கை இருக்கிறது என்று மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+