ச்சீ.. போய்யா நீ ரொம்ப மோசம்... தினம் தினம் பார்ப்பேன்!
சென்னை: சன் டிவியின் லொள்ளுப்பா நிகழ்ச்சிக்கு நடிகை மீனா சிறப்பு நடுவராக இருந்து, இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை ரசித்து சிரித்தார்.
நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு வளர்ந்து மிகச் சிறிய வயதிலேயே தமிழ், தெலுங்கு படங்களில் பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழில் ராஜ்கிரண், ரஜினிகாந்த், விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார், பாக்யராஜ், சத்யராஜ், கமல்ஹாசன்னு எல்லாருமே வயதில் ரொம்ப மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
நடிகர்கள் முரளி, கார்த்திக் போன்ற ஒரு சில நடிகர்கள் மட்டுமே இவருடன் நடித்த இளம் நடிகர்கள்... இவருக்கு சரியான இணையான ஜோடி சேர்ந்தவர்ன்னா அது தல அஜீத்.
தளபதி விஜய்க்கு ரொம்ப பிடிச்ச நடிகை மீனா. இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டாலும், இயக்குநர்கள் ஒத்துவரலைன்னுதான் அப்போ பேச்சு. ரொம்ப இளம் வயதிலேயே நடிக்க வந்த மீனா, அதே போல மிக இளம் வயதிலேயே ஓரம்கட்டப்பட்டும் விட்டார்.

பிறகு கல்யாணம், குடும்பம்னு செட்டிலான அவர், இப்போது தனது பெண் நைனிகாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி இருக்கார்.
ஒரே நேரத்தில் தெலுங்கிலும், தமிழிலும் கொடி கட்டிப் பறந்த நடிகை மீனா. எஜமான் படம் அவரை உச்சத்துக்கு கொண்டு உட்கார வச்சுது. பிறகு வரிசையாக ரஜினியுடன் நடித்த முத்து, வீரான்னு அத்தனையும் சூப்பர் ஹிட்.. ஜப்பானில் இவருக்கும் ரசிகர்கள் உருவான கதை இப்படித்தான்.
மீனா ஆடும் டான்ஸ்..அது எந்தவகை டான்ஸாக இருந்தாலும், அதில் நளினம் இருக்கும். முகபாவனையில் அசத்திருவார் மீனா. விரல்களின் அசைவு நளினம் கூட நடனத்தில் தெரியும்.
மீனா நிகழ்ச்சியில் பேசும்போது, டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எனக்கு பிரபுதேவா டான்ஸ் மாஸ்டார்னா பயம் வந்துரும். அவர் சொல்றதைத்தான் நாம் ஆடணும். ராஜு மாஸ்டர் அப்படி இல்லை, நமக்கு எது நல்லா வருமோ.. அதை ஆட வச்சு எடுத்துக்குவார்.
பிரபு தேவா மாஸ்டர்கிட்டயே நான் சொல்லி இருக்கேன்.. மாஸ்டர் எனக்கு உங்களை பிடிக்கலை.. உங்க அண்ணன் ராஜு மாஸ்டரைத்தான் பிடிச்சுருக்குன்னு.. ஆனா, பிரபு தேவா மாஸ்டர் என்னை ஆடவச்சதை ஸ்கிரீன்ல பார்க்கும்போதுதான் அவர் நமக்காக எவ்வளவு மெனக்கெட்டு இருக்கார்னு புரியும்னு சொல்லிட்டு அழகாக சிரித்தார் மீனா.
முன்பு ஒருமுறை மீனா பேசும்போது, வெளிநாட்டிலிருந்து வந்த ரசிகர் ஒருவர், இரணியன் படத்தில் முரளியுடன் மீனா ஆடிய சீ போய்யா நீ ரொம்ப மோசம்.. நீ தொட்டா உடம்பு கூசும் அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். தினம் காலையில எழுந்து அதை ஒரு தடவை பார்த்துருவேன்னு சொன்னாராம்.. அதை நினைவு கூர்ந்திருந்தார் மீனா
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications