நெப்போலியன் மகனை கல்யாணம் செய்ய அக்ஷயா கொடுத்து வச்சிருக்கணும்.. மீனா சொன்ன காரணம்
சென்னை: நடிகர் நெப்போலியன் மகனுக்கு நேற்று முன்தினம் ஜப்பானில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண பங்க்ஷனில் நடிகை மீனாவும் கலந்து கொண்டார். அப்போது நெப்போலியன் மகனை திருமணம் செய்வதற்கு மணப்பெண் அக்ஷயா கொடுத்து வச்சிருக்கணும் என்று பேசி இருக்கிறார்.
நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகனுக்கு பிரம்மாண்டமாக ஜப்பானில் திருமணத்தை முடித்து இருக்கிறார். இந்த செய்தி தான் சில நாட்களாக இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. காரணம் நெப்போலியனின் மகன் தசை சிதைவு நோயால் 10 வயதிலிருந்து எழுந்து நடக்க முடியாமல் வீல்சேர் உதவியோடு தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைத்திருப்பது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

நெப்போலியனின் மகன் கைகளை தூக்கி தாலி கூட கட்ட முடியவில்லை இன்னொருவர் தான் மணப்பெண்ணின் கழுத்தில் மாலை போடுவதற்கு உதவி செய்கிறார்கள் இவரால் எப்படி ஒரு பெண்ணிற்கு இல்லற சுகத்தை கொடுக்க முடியும்? அந்த பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் கெடுத்துவிட்டார், என்றெல்லாம் அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் நெப்போலியன் மகன் திருமணத்தில் கெஸ்ட் ஆக கலந்து கொண்ட மீனா இந்த திருமணம் குறித்தும் அது பற்றி வரும் நெகடிவ் கமெண்ட் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் மீனா பேசுகையில் சிலர் வெளியே இருந்து தப்பு தப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெப்போலியன் மகனை கல்யாணம் செய்வதற்கு அந்த பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும் என்று தான் சொல்வேன்.
அக்ஷயா ரொம்பவும் நல்ல பொண்ணு. அவங்களை பார்த்ததுமே எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. தனுஷுக்கு வரன் பார்க்கிறார்கள் என்ற செய்தி தெரிந்ததும் அக்ஷயா குடும்பத்தினர் நெப்போலியன் குடும்பத்தில் சம்பந்தம் வைப்பதற்கு சரி என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் நெப்போலியன் அந்தப் பெண்ணிடம் உங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த பெண் எனக்கு முழு சம்மதத்தோடு தான் எங்க வீட்டில் உங்களிடம் பேசினாங்க என்று சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகு நெப்போலியன் மகனிடமும் அந்தப் பெண் பேசி இருக்கிறார் அவருக்கு பிடித்துப் போனதால்தான் இந்த திருமணம் நடைபெறுகிறது. ஆனால் சிலர் என்னென்னவோ பேசுகிறார்கள். அதுவெல்லாம் உண்மை கிடையாது.
நெப்போலியனுக்கும் அவருடைய மனைவி சுதாவின் குணத்திற்கும் இப்படிப்பட்ட ஒரு நல்ல மருமகள் தான் கிடைக்கும். காரணம் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அவங்களுக்கு நல்லபடியான ஒரு வாழ்க்கை கிடைப்பதற்கு கடவுள் அருளி இருக்கிறார். திருமணத்திற்கு முந்தைய நாள் சங்கீத் பங்க்ஷன் நடக்கும் போது அக்ஷயாவின் அம்மா பேசும்போது கூட நாங்கள் நெப்போலியன் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்வதற்கு கொடுத்து வச்சிருக்கணும் என்று சொன்னாங்க.
அக்ஷயாவின் அம்மா பேசிய அந்த வார்த்தை அவர்களுடைய மனதில் இருந்து சொன்ன வார்த்தை தான். அதுபோல கல்யாண பங்க்ஷனில் ஒரு இடத்தில் கூட அக்ஷயா வருத்தப்படவோ, பீல் பண்ணவோ இல்ல. அவங்க ரொம்பவும் என்ஜாய் பண்ணுனாங்க என்று அந்த பேட்டியில் மீனா பேசி இருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications