மெய்யழகன் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது.. அரவிந்த்சாமி, கார்த்தி ரசிகாஸ் ரெடியா!
சென்னை: நெஞ்சை உருக்கும் கதையுடன் வெளியான 'மெய்யழகன்' திரைப்படம், விரைவில் உங்கள் வீட்டு வரவேற்பரைக்கு வர இருக்கிறது! அரவிந்த்சாமி, கார்த்தி உள்ளிட்டோரின் நடிப்பு, 96 என்ற திரைப்படத்தை இயக்கிய, பிரேம் குமாரின் 2வது இயக்கத்தில் வெளியான படம் என எல்லாமே சேர்ந்து மெய்யழகன் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
22 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது சித்தப்பா மகள் திருமணத்திற்காக, தன் சொந்த ஊருக்குத் திரும்பும் அருள்மொழிவர்மன், அங்கே எதிர்பாராத சில சம்பவங்களை எதிர்கொள்கிறார். அவர் வாழ்க்கையை பார்க்கும் கோணம் மாறுபட ஆரம்பிக்கிறது. இது பல ரசிகர்களுக்கும் பர்சனலாக கனெக்ட்டையும் ஏற்படுத்துகிறது.

கிராமத்து இளைஞனாக கார்த்தி கச்சிதமாக பொருந்தி இருப்பார். அவரது உணர்வுபூர்வமான நடிப்பு படம் முழுவதும் நம்மை கட்டிப்போடும்.
கார்த்தியின் அத்தானாக வரும் அரவிந்த் சாமி, தனது பக்குவமான நடிப்பால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார். '96' படத்தை இயக்கி உணர்வுகளுடன் விளையாடும் ஸ்க்ரீன் ப்ளேக்காகவே, பிரபலமான பிரேம் குமார், மெய்யழகன் படத்திலும் தனது இயக்க திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

படம் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டு இன்னும் ஷார்ப் ஆக்கப்பட்டது சிறப்பு. சமீபத்தில் படத்தின் காட்சிகளை Sneak Peek என்ற வகையில், பட நிறுவனம் யூட்யூப்பில் வெளியிட்டிருந்தது. அந்த காட்சிகள் பல லட்சம் பார்வைகளையும், பாராட்டுகளையும் சேர்த்தே பெற்றது (அந்த வீடியோவை இந்த லிங்க்கில் நீங்கள் காணலாம்).
மெய்யழகன் ஓடிடி ரிலீஸ்: செப்டம்பர் 2024ல் திரையரங்குகளில் வெளியான இந்த படம், அக்டோபர் 25, 2024 அன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது என்று ஆங்கில செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன. இனி உங்கள் வீட்டிலேயே உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து இந்த படத்தை ரசிக்கலாம்.
வசூலில் சறுக்கல்: லப்பர் பந்து போன்ற பரபரப்பான திரைக்கதை கொண்ட படத்தோடு ஒரே காலகட்டத்தில் ரிலீசாகியதால் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்கவில்லை என்றாலும், படத்தின் தரம் குறித்த எந்த சந்தேகமும் இல்லை. நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் இந்த படம், புதிய பார்வையாளர்களை ஈர்த்து படக்குழுவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என நம்புகிறது படக்குழு.

மெய்யழகன் படம் பற்றி: சி. பிரேம் குமார் இயக்கிய இப்படம், சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இசையமைப்பை '96' திரைப்பட புகழ் கோவிந்த் வசந்தா கவனித்துக்கொள்ள, ஆர். கோவிந்தராஜ் எடிட்டிங் பணியை செய்தார். ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு. படத்தின் தயாரிப்பு செலவாக ரூ.35 கோடி முதலீடு செய்யப்பட்டது. இந்தியாவில் வெளியான முதல் 23 நாட்களில் நிகர வருவாயாக ரூ.33.72 கோடி வசூலாகியுள்ளது. வெளிநாடுகளில் இதுவரை ரூ.12.30 கோடிசூலாகியுள்ளது. இப்படம் தெலுங்கில் 'சத்தியம் சுந்தரம்' என்ற டைட்டிலுடன் டப் செய்யப்பட்டது. நெட்பிளிக்சில் தெலுங்கு மொழியிலும் அக்டோபர் 25ம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்த படத்தை நீங்கள் பார்க்கக் காத்திருக்கிறீர்களா? படம் பிடித்திருந்ததா? கமெண்டில் தெரிவிக்கவும்!

-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications