கடைசியா என்னை பார்த்துவிட்டு கண்ணை மூடிவிட்டாள்! தங்கை இறப்பு குறித்து மெட்டி ஒலி நடிகை லீலா கண்ணீர்
சென்னை: மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகை லீலா, தனது தங்கை உமா மகேஸ்வரியின் இறப்பு குறித்து பேட்டி அளித்துள்ளார்.
மெட்டி ஒலி சீரியலில் அக்கா தங்கையாக சரோ, விஜி என்ற கேரக்டரில் நடித்தவர்கள் லீலா, உமா மகேஸ்வரி. இவர்கள் இருவரும் நிஜத்திலும் அக்கா தங்கைதான். திருமுருகனின் இந்த சீரியல் பெரிய ஹிட்டடித்தது. அதில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் குடும்பங்களில் நடந்த விஷயங்களாகவே இருந்தது.

இந்த சீரியலில் நடித்து புகழ் பெற்ற உமா, தனது 40 வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அவருடைய இறப்பு குறித்து அவரது உடன்பிறந்த சகோதரி லீலா கலாட்டா சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் பேசுகையில் எனது தங்கை இறந்த போது எனது குழந்தை மிக நீண்ட நேரமாக அழவே இல்லை. அதன் பின்னர்தான் அவள் சித்தி இல்லை என்ற உணர்வுக்கு வந்து தேம்பி தேம்பி அழுதார். உமா இறந்த போதும் அவள் தன்னுடன் இருப்பது போலவே நினைத்துக் கொண்டே என் மகள் பேசிக் கொண்டிருப்பாள்.
முதலில் நாங்கள் அதை பெரியதாக கண்டு கொள்ளவில்லை. காரணம், மனதளவில் அவள், என் தங்கையுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அப்படி பேசுகிறார் என விட்டுவிட்டோம். ஆனால் பள்ளியிலும் இதே நிலை தொடர்ந்தது. உமா இறக்கும் போது ஒரு மாதம் எங்கள் வீட்டில்தான் இருந்தார். நான்தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தேன்.
எனது தம்பி ஆயுர்வேத மருத்துவர் என்பதால் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கும் என சொல்லிவிட்டார். அப்போது முதலே எனக்கு பயம் ஏற்பட்டது. அப்படியொரு தருணத்தை நினைத்து பார்க்கவே என்னால் முடியவில்லை.
அப்போதுதான் உமா, அவருடைய கணவருடன் சில நாட்கள் இருந்துவிட்டு செல்வதாக சென்றார். சில நாட்கள் கழித்து நாங்களும் உமாவை பார்க்க அவருடைய வீட்டிற்கு சென்றோம். நாங்கள் வீட்டில் நுழைகிறோம். எங்களை பார்த்ததுமே என் தங்கை கண்களை மூடிவிட்டார். அத்துடன் அவர் ஆயுள் முடிந்தது. இது எனக்கு தீராத வலியை ஏற்படுத்தியது.
இன்றும் சீரியல்களில் நடிக்கும் போது எமோஷனலாக மொமெண்டை கேட்டால் உடனே நான் என் தங்கையை நினைத்துக் கொள்வேன். தானாக என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிடும். இவ்வாறு நா தழுதழுக்க நடிகை லீலா தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications