Metti Oli: ஒரு எபிசோட்ல இவ்ளோ சீனா இருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் பாப்புலர் சீரியல்களான மெட்டி ஒலி, சித்தி சீரியல்கள் மறு ஒளிபரப்பு சன் டிவியில் துவங்கி உள்ளன. மற்ற சீரியல்கள் கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக பாதியில் நிறுத்தும் நிலை.

என்றாலும், அதே சீரியல்களை ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்ப துவங்கி உள்ளது சன் டிவி. இந்த நிலையில் பழைய சீரியல்களான மெட்டி ஒலி, சித்தி இரண்டும் மறு ஒளிபரப்பிலும் மக்கள் விரும்பிப் பார்க்கும்படி இருக்கின்றன.

பகல் 1 மணி முதல் 1:30 மணி வரை மெட்டி ஒலி சீரியல், இரவு 9 மணி முதல் 9:30 மணி வரை சித்தி முதல் சீசன் சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது.

 சித்தி மெட்டி ஒலி

சித்தி மெட்டி ஒலி

சித்தி நேற்று திங்கள் இரவு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மெட்டி ஒலி கடந்த வாரம் முதலே ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு தனித்தனி முத்திரை பதித்த சீரியல்கள். ஓர் காலக்கட்டத்தில் ஒளிபரப்பாகி வந்த சீரியலும் கூட. இந்த நிலையில், இப்போதும் இரண்டு சீரியல்களும் அதே போட்டியுடன் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

 குளோஸப்ஸ் கட் ஷாட்ஸ்

குளோஸப்ஸ் கட் ஷாட்ஸ்

மெட்டி ஒலி, சித்தி இரண்டு சீரியல்களிலும் அதிக கட் ஷாட்ஸ், குளோஸப்ஸ் என்று இழுக்காமல் கதையை சட்டென்று சொல்லி இருக்கிறார்கள். தேவை இல்லாமல் க்ளோஸப்ஸ் இல்லவே இல்லை... வெறும் இசையாய் மட்டுமே வைத்துக்கொண்டு கட் ஷாட்ஸ் கொடுப்பது என்பதும் இல்லை.

 ஒப்பேற்றல் திட்டமிடல்

ஒப்பேற்றல் திட்டமிடல்

இந்த காலக்கட்ட சீரியல்களில் சரியான திட்டமிடல் இருக்கிறது. ஒப்பேற்றும் காட்சிகள் இல்லவே இல்லை. கதையின் காட்சிகள் அடுத்தடுத்து என்று காண்பிக்கப்பட்டு இவ்வளவு சீனா இருக்கிறது ஒரு எபிசோடில் என்று ஆச்சரியப்படும்படி ஒரு எபிசோட் நகர்வது போரடிக்காமல் இருக்கிறது.

 இன்றைய சீரியல்கள்

இன்றைய சீரியல்கள்

இதை பார்க்கும்போது இன்றைய சீரியல்களில் எவ்வளவு இழுவை.. இப்படியும் மக்களை ஏமாற்றி இருந்திருக்கிறார்களே என்று எண்ண வைக்கிறது. லாக்டவுன் முடிந்து சீரியல் ஷூட்டிங் என்று களம் இறங்குபவர்கள் மக்களை இனியும் இப்படி ஏமாற்றாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+