Metti Oli Serial:தொலைக்காட்சியில் அந்த காலத்து சீரியல்களே தேவலை போல இருக்குதே...!
சென்னை: கோவிட 19 தொற்று அபாயம்...லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில் எந்தவித படப்பிடிப்பும் இல்லை. இதனால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டு இருக்கின்றன.
சானல்களில் ஏற்கனவே ஒளிபரப்பாகி ஹிட்டான சீரியல்களை அதே சானல்கள் மறு ஒளிபரப்பு செய்யத் துவங்கி உள்ளன. சன் டிவியில் மட்டும்தான் கடந்த பல வருடங்களுக்கும் முன் ஒளிபரப்பான சீரியல்களை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
இப்படியான மறு ஒளிபரப்பு சீரியல்களை இப்போது பார்க்கையில், அப்போது ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் இவ்வளவு இழுவையாக இல்லை. வேண்டும் என்றே இழுக்கும் இழுவைக் காட்சிகளும் இல்லை என்பதால் அன்றைய கால சீரியல்கள் தேவலை என்று நினைக்கத் தோன்றுகிறது.

மெட்டி ஒலி சீரியல்
இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன் ஒளிபரப்பு செய்யப்பட்ட மெட்டி ஒலி சீரியல்...இன்று பார்த்தாலும் நன்றாகவே இருக்கிறது. காரணம் வீணான இழுவை காட்சிகள் இல்லை. நல்ல திரைக்கதை, வசனம் என்று சினிமா மாதிரி திட்டமிட்டு எடுத்து இருக்கிறார்கள்.வசனம், திரைக்கதை அம்சம் என்று புதிய படைப்பாளர்கள் கற்றுக்கொள்ளும் அம்சங்கள் இதில் நிறைய இருக்கின்றன.

தங்கம் சீரியல்
ரம்யா கிருஷணன் நடிப்பில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் கூட ஓரளவு இழுவை இல்லாமல் இருக்கிறது. நடிகர் விஜயகுமார் முதன்முதலாக சின்னத்திரையில் நடித்து இருந்ததும் சீரியலுக்கு பிளஸ் சேர்க்கும் அம்சங்கள். இதிலும் தேவை இல்லாத இழுவைகள் இல்லை. இதை இரண்டாவது முறை பார்க்கும்போது கற்றுக்கொள்ளும் தொழில் நுட்பம் என்று எதுவும் இல்லை.

இயக்குநர் திருமுருகன்
இயக்குநர் திருமுருகன் ஆரம்பத்தில் கதை,இயக்கம் என்று மட்டும்தான் மெட்டி ஒலி களத்தில் இறங்கினார். தயாரிப்பு, திரைக்கதை நாதஸ்வரம் சீரியலில்தான் ஆரம்பித்தார். இவரின் மெட்டி ஒலி சீரியல் எந்த அளவுக்கு சுறு சுறுப்பாக இழுவை இல்லாமல் இருந்ததோ.. அதே போலவே இன்றைய கல்யாண வீடு சீரியலும் இருக்கிறது.

சித்தி - சித்தி 2
ராதிகா சரத்குமாரின் சித்தி முதல் சீசன் இழுவை இல்லாமல் இருக்கும். சித்தி 2 இழுவையோ இழுவை என்று அநியாயத்துக்கு இழுவையாக இருக்கிறது. சித்தியை பார்த்து ரசித்த மக்களால் சித்தி 2 சீரியலை உட்கார்ந்து பார்க்க கூட முடியவில்லை. பொறுமையை சோதிக்கும் இந்த சீரியல் வேண்டாம் என்பது போலத்தான் ரசிகர்கள் கருத்து இருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications