Minnale Serial: அடுத்தவன் பொண்டாட்டி கழுத்தில் தாலி கட்டலாமா?
சென்னை: சன் டிவியின் மின்னலே சீரியல், சன் டிவியுடன் இணைந்து ராதிகாவின் ராடான் நிறுவனம் சேர்ந்து தயாரித்து கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் இது.
இப்போதைக்கு இது மட்டும்தான் ராடானுடன் சன் டிவி இணைந்து செல்லும் சீரியல், இதில் நிரோஷா உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கிறார்கள். மூளை ஆபரேஷன் பண்ற அளவுக்கு சிறந்த ரடாக்டர் வசீகரன்.
வசீகரனுடன் சேர்ந்து வேலை பார்க்கும் ஜூனியர் டாக்டர் ஷாலினி. இவள் குடும்பத்துக்கும், வசீகரன் குடும்பத்துக்கும் தீராத பகை இருந்து வருகிறது. வசீகரனின் மனைவி மீராவை கொடுமைப படுத்தி வருகிறான் டாக்டர் வசீகரன்.

மீரா வசீகரன்
வசீகரன் மீராவை கல்யாணம் செய்துகிட்டு, அவளை வேலைக்காரி மாதிரி வைத்து இருப்பதோடு, அவள் வயிற்றில் வளர்ந்த தனது கருவையும் கலைத்து விடுகிறான். வசீகரன் அக்காவும், மீராவை அடிப்பது கீழே தள்ளி விடுவது என்று பயங்கர கொடுமை .இதனால், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறாள் மீரா. அப்போது பழக்கமானவன் வசீகரனுடன் வேலை பார்க்கும் ஷாலினியின் அண்ணன் லாயர்.

மீராவை கடத்தி
விவாகரத்து கேஸ் கடைசி நாளன்று, மீராவை கடத்தி விடுகிறான் புருஷன் வசீகரன்.மீராவின் அப்பாவை கடத்தி கொன்னுடுவேன்னு மிரட்டுவதால், மீராவும் வசீகரனுடன் மனைவியாக இருக்க வேண்டிய கட்டாயம். விவாகரத்து கேஸும் தள்ளிப் போய்விடுகிறது. இதனால், கழுத்தில் இருந்த தாலியை கோயில் உண்டியலில் போட்டுவிட்ட மீரா கழுத்தில் மீண்டும் தாலி கட்ட கல்யாணம் ஏற்பாடு செய்கிறான்.

லாயர் அண்ணன்
இந்த கல்யாணத்தைத் தடுக்க, டாக்டர் ஷாலினி தனது அண்ணன் லாயருடன் சேர்ந்து, வசீகரன் கல்யாணம் வைத்து இருக்கும் கோயிலுக்கு போறாங்க.மீராவின் அப்பாவையும் லாயர் காப்பாத்திடறான். கோயிலுக்கு போய் பார்த்தால் மணக் கோலத்தில் மீராவும், வசீகரனும் உட்கார்ந்து இருக்கிறார்கள். அடியாட்களுடன் வந்து இருக்கும் லாயர் கல்யாணத்தை நிறுத்திடறான். வசீகரனையும் அடித்து துரத்திடறாங்க.

லாயர் ஷாலினி
ஷாலினியின் அண்ணன்தான் மீராவின் லாயர் என்பதால், மீராவுக்கு அவருக்கும் காதல் வந்துருது. இதை தங்கை ஷாலினியும் சப்போர்ட் செய்ய, அதே மேடையில் லாயருக்கும், மீராவுக்கு அனைவரின் ஆசியோடு அதாவது ஷாலினி, மீராவின் அப்பா ஆசிர்வாதத்தோடு லாயர் தாலி கட்டிடறார்.
இப்போது இன்னும் விவாகரத்து பெறாத மீராவின் கழுத்தில் ஒரு லாயராக இருப்பவன் தாலி காட்டினால் அது சரியாக இருக்குமா? என்ன இருந்தாலும் விவாகரத்து பெறாத பட்சத்தில் அவள் அடுத்தவன் பொண்டாட்டிதானே?
அதனால், லாயரின் அம்மா இந்த கல்யாணத்தை ஏத்துக்க மறுக்கறாங்க.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications