Minnale Serial: கதை முழுக்க இப்படியாங்க கொலை செய்ய திட்டம் போடுவாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்னலே சீரியலில் ஷாலினியை கொலை செய்ய திட்டம் போடறதே முழுக்க முழுக்க கதைங்க.

ஷாலினி சாதாரண பெண்ணா? சூப்பர் வுமனா தெரியலை.. ஒவ்வொரு கொலை முயற்சியிலும் தப்பிச்சு தப்பிச்சு.. அடேங்கப்பா!

வயித்துல இருக்கும் குழந்தையை அழிக்க சதி.. மருந்து குடுத்தாலும் கருவும் அழியலை..

 டாக்டர் ஷாலினி

டாக்டர் ஷாலினி

ஷாலினி நல்ல டாக்டர்.. நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்தான். அவளுக்கு எப்படி வன்மம் நிறைந்த எதிரி இருப்பார்கள். எதற்கு இப்படி கொலை செய்ய துடியாய் துடிக்கிறார்கள். எதற்கும் வலுவான காரணம் இல்லாமல், எப்போது பார்த்தாலும் அவளை கொலை செய்ய நாத்தனார் துடிப்பது. சம்பந்தமே இல்லாத வர்ஷா ஷாலினியின் அத்தையுடன் சேர்த்து இந்த சதியை செய்ய துடிப்பது என்று கதை முழுக்க இப்படித்தான்.

 மின்னலே சீரியல்

மின்னலே சீரியல்

ரடானில் இருந்து சன் டிவிக்கு காலம் காலமாக ஒதுக்கி மதிய நேரத்துக்கு என்று தயாரித்து ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் மின்னலே. வன்மம், குரோதம் மட்டுமே கதை முழுக்க நிரம்பிக் கிடக்கிறது. ஒரு பெண்ணை கொலை செய்ய தினம் தினம் திட்டம் போடுவதும், அந்த திட்டம் கை நழுவி போவதும்தான் கடந்த ஆறு மாச கதை. இதற்கு முன் நடிகை நிரோஷா ஷாலினியை மருமகளாக அடைய, அவள் காதலிக்கும் ராஜேஷை கொலை செய்யத் திட்டம் போடுவது கதை.

 நடிகை நட்சத்திரா

நடிகை நட்சத்திரா

இப்போது சீரியலை நகர்த்த என்ன செய்யலாம் என்று ஆலோசித்து, சன் டிவிக்கு ஸ்டார் என்று போற்றுதலுக்கு உரிய நடிகை நட்சத்திராவை சீரியலுக்கு கொண்டு வந்து கவுரவத் தோற்றத்தில் ரெண்டு எபிசோட் நடிக்க வைத்துள்ளார்கள்.

 கதையை நகர்த்த

கதையை நகர்த்த

கதையை தினம் தினம் நகர்த்திக் கொண்டு போக என்னவெல்லாம் செய்யலாமோ அதை செய்து வருகிறது ரடானின் கதைக் குழு. எபிசோடை வளர்த்துவதை விட கவுரவமாக முடித்துக்கொள்வது நல்லது.ரடானின் குழுமத்தில் இருந்து இப்படி ஒரு சீரியலா? யாரும் கவனிக்கவில்லை என்றால் இப்படித்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+