டேய் பையா..இந்தாடா.. ஐயோ பொண்ணா நீ.. சாரிம்மா...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு டாம் பாயா உங்களை நீங்க நினைச்சுக்கறீங்க. ஸோ கம்ஃபர்டபுள்.. ஸோ ஹேப்பி..மத்தவங்க .உங்களை பையன்னு நினைச்சு பேசின சந்தர்ப்பங்கள் இருக்குல்ல அதை சொல்லுங்க என்றார் கரு பழனியப்பன்.

ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சி ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. வரும் வார நிகழ்ச்சியில் ஆண்களை போல உடை, ஹேர் கட் என்று அனைத்திலும் ஆண்களை போல தோற்றம் அளிக்கும் பெண்கள் அதை விரும்பாத ஆண்கள் கலந்து கொள்கின்றனர்

இருவருக்கும் இடையே நடக்கும் வாதம், இடையில் நிகழ்ச்சியின் நெறியாளர் கரு. பழனியப்பன் எடுத்து வைக்கும் கேள்விக்கான விவாதம் என்று நிகழ்ச்சி களைக் கட்டுகிறது.

பையன்னு நினைச்சு

பையன்னு நினைச்சு

ஒரு பெண் சொன்னார்.. நிஜமாவே பையன் மாதிரி இருந்தார். கரு பழனியப்பன் சொன்ன மாதிரியே தன்னை தோளில் தட்டி இருக்காங்க.. ஹக் பண்ணி இருக்காங்க. லேடீஸ் டாய்லெட்டுக்குள்ள போனால் பயந்து இருக்காங்க. நான் பேசினத்துக்குப் பிறகுதான் நம்பி இருக்காங்க என்றும் சொன்னார். டாய்லெட்டில் வேலை செய்யும் அக்கா கூட பயப்படுவாங்க.. இல்லை நான் பொண்ணுதாங்கன்னு பேசின உடன்தான் சமாதானம் ஆவாங்கன்னு சொன்னார்.

ஒரு பெண்ணின் ஹஸ்பெண்ட்

ஒரு பெண்ணின் ஹஸ்பெண்ட்

இந்த ஷோவுக்கு வர நானும் என் அப்பாவும் சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டில் நின்னுகிட்டு இருந்தோம். அப்போ ஒரு ஹஸ்பெண் அண்ட் வைஃப் வந்தாங்க. அந்த ஹஸ்பெண்ட் என்னை தள்ளுப்பான்னு சொல்லி என்னை தள்ளிட்டு அவர் பாட்டுக்கு போனார். அவங்க வைஃப் என்னை திரும்பி பார்த்துட்டு அவரை தள்ளி பொண்ணுங்கன்னு சொன்னார். அப்புறம் அவர் வந்து என்னை பார்த்து சாரிம்மான்னு சொல்லிட்டு போனார்.இப்படித்தான் டிரெயின்ல கூட என்னை பையன்னு நினைச்சு சீட்டு போடு தம்பின்னு சொல்லுவாங்கன்னு சொன்னார்.

தம்பி பின்னாடி

தம்பி பின்னாடி

காலேஜ் போகும்போது பஸ்ஸில் முன்னாடி பொண்ணுங்க. பின்னால பசங்க. நான் முன்னாடி ஏறுவேன். என்னை பையன்னு நினைச்சு பின்னாடி போயி ஏறுடான்னு சொல்லுவாங்க என்று சொன்னார் ஒரு பெண். இன்னொரு பெண் சொன்னார். வீட்டில் நானும் என் தம்பியும் ஒரே மாதிரி ஹேர் கட் பண்ணி இருப்போம்.

நானும் தம்பியும்

நானும் தம்பியும்

என் சித்தப்பாவே என் தம்பின்னு நினைச்சு இந்த பக்கம் திரும்பி படுத்துகிட்டு இருந்தால் என்னை எழுப்பி விடுவார். அப்புறம் நீயாம்மான்னு சொல்லிட்டு போயிருவார். அவன் டிரஸை நான் போட்டுக்கிட்டு இருந்தால் வீட்டில் குழப்பமாயிருவாங்க என்று சொன்னார்.குரலும் எனக்கும் என் தம்பிக்கும் ஒரே மாதிரி இருக்கும். வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது என்று கூறினார். அக்கா தங்கை ஒரே டிரஸை போட்டுக்கற மாதிரி நீங்க அக்கா தம்பி ஒரே டிரஸை போட்டுக்கறீங்க என்று சொன்னார் கரு பழனியப்பன்.

ஒண்ணுமே புரியலை உலகத்திலே...என்னமோ நடக்குது...மர்மமா இருக்குது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+