Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசையாய் சொன்னாரே மு.க. முத்து.. நடக்கலையே.. அத்தையின் ஆசியுடன் பாட்டு பாடி.. காதலின் பொன் வீதியில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதியின் மகனாக இருந்தாலும்கூட, மு.க. முத்து சினிமாவில் சோபிக்கவில்லை.. எனினும் அவரது பாடல்கள் இன்றுவரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது.. சின்ன வயதிலிருந்தே பாட்டு மீது உயிராக இருந்தாராம் முக.முத்து.. கடைசிகால கட்டத்திலும்கூட, சினிமாவில் பாடும் அளவுக்கு, இசை மீது அவருக்கு நாட்டம் இருந்திருக்கிறது. அந்தவகையில் தேவா இசையில் பாடியிருந்ததை பற்றி மு.க. முத்து செய்தியாளர்களிடம் அப்போது பூரித்து கூறியிருந்ததை மறக்க முடியாது.

எம்ஜிஆரை அரசியல், சினிமாவில் வீழ்த்த, எம்ஜிஆருக்கு போட்டியாகவே, கருணாநிதி அவரை களமிறக்கியதாக சொல்வார்கள்..

Television mk muthu deva

சமீபத்தில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, மு.க. முத்து பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.. "திமுகவுக்கு ஒரு வரலாறு உள்ளது. முக முத்துவை அன்று கொம்பு சீவி விட்டார்கள்.. அவரது ஹேர்ஸ்டைலை மாற்றி, எம்ஜிஆர் மாதிரியே அவரை நடிக்க வைத்தார்கள்..

வண்டிக்காரன் மகள் என்ற படத்துக்கு கலைஞர்தான் கதை வசனம் எழுதினார்.. அதில் எம்ஜிஆருக்கு எதிராக, ஜெய்சங்கரை களமிறக்கினார்கள்.. சினிமாவில் எம்ஜிஆருக்கு இணையாக ஒருவரை கொண்டு வரும் முயற்சிதான் இவையெல்லாம்.. ஆனால், தோல்வி முகமே அமைந்தது" என்று கூறியிருந்தார்.

ஹேர்ஸ்டைல், மேக்கப்

அந்தவகையில், தன்னுடைய ஹேர்ஸ்டைல், மேக்கப் என அனைத்தையும் மாற்றிக் கொண்டுதான், மு.க.முத்து சினிமாவில் களமிறங்கனிர்.. 'பூக்காரி' , 'பிள்ளையோ பிள்ளை', 'சமையல்காரன்', 'அணையாவிளக்கு', 'இங்கேயும் மனிதர்கள்' என அத்தனை படங்களிலும் எம்ஜிஆர் பாணியில் நடித்தாலும், படங்கள் தோல்வியை சந்தித்தன.

அதேசமயம், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோருக்குகூட அமையாத தோற்றம், மு.க. முத்துவுக்கு அமைந்தது அப்போது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

தம்பி முக. முத்து

ஆனால், இதை எம்ஜிஆரே ஊக்குவிக்கவில்லை என்பார்கள்.. ஒரு மேடையில் எம்ஜிஆர் தான் தன்னுடைய ஆசான் என்று முக. முத்து பேசினார்..

அதற்கு எம்ஜிஆர், "தம்பி முக முத்து என்னை அவரது ஆசான் என்றார்.. நான் சினிமாவில் வரும்போது யாரையும் பின்பற்றவில்லை. டிஎம்எஸ் பாடும்போது, தியாகராஜ பாகவதரை போல பாடவில்லையே.. அவருக்கென தனி பாணியை உருவாக்கினார். அதுபோல முக முத்துவும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றாராம்.

இத்தனைக்கும் 'பிள்ளையோ பிள்ளை' பட ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே வந்து கிளாப் அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்தவர் எம்ஜிஆர்தான்..

மேடைப்பாடகர்

நடிப்பு போலவே பாடல்களை பாடுவதிலும் முக. முத்துவுக்கு ஆர்வம் அதிகம் உண்டு.. சின்ன வயதிலேயே தன்னுடைய அப்பாவுடன் கட்சி மேடைகளிலும் பங்கேற்று, கொள்கை விளக்க பாடல்களை பாடுவாராம்.. இதுபோல பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று பாடியுள்ளார்

சினிமாவில் 'காதலின் பொன் வீதியில்', 'எந்தன் மனதில் குடி இருக்கும் நாகூர் ஆண்டவா' போன்ற பாடல்கள் ஒருகாலத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.. கடந்த 2006- ம் ஆண்டு தேவா இசையில் 'மாட்டுத் தாவணி' படத்தில் மு.க.முத்து ஒரு பாடல் பாடினார் முக முத்து..

அண்ணன்மாரே, தம்பிமாரே

இந்தப் பாட்டின் ரெக்கார்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. அண்ணன்மாரே, தம்பிமாரே, அருமையுள்ள அய்யாமாரே என்று தொடங்கும் இந்த பாட்டை முக. முத்து, படுசூப்பராக பாடி அசத்திவிட்டதாக தேவா கூறியிருந்தார்..

பல வருட இடைவெளி கழித்து, மீண்டும் சினிமாவில் பாடியது குறித்து மு.க. முத்து அப்போது ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், என்னுடைய மாமா சிதம்பரம் ஜெயராமன் (அவரது மகளைத்தான் முத்து மணந்துள்ளார்) ரத்த பாசம் போய் விடுமா என்ன? அதனால்தான் எனக்கும் நல்ல குரல் வளம் வாய்த்துள்ளது. இந்தப் பாடல் பதிவுக்காக நான் சிறப்பான பயிற்சி எதையும் எடுத்துக் கொள்ளவில்லை.

அத்தையின் ஆசீர்வாதம்

என்னுடைய அத்தை சண்முகசுந்தராம்பாள் (முரசொலி மாறனின் தாயார் மற்றும் கருணாநிதியின் அக்காள்) ஆசிர்வாதத்தை மட்டும் வாங்கிக் கொண்டு நேராக பதிவுக்கு வந்து விட்டேன்.. மறுபடியும் நடிப்பீர்களா? என்று எல்லாரும் கேட்கிறார்கள்.. நான் எப்பவுமே நடிக்க தயார்.. வாய்ப்பு வரணுமே? என்று கூறியிருந்தார்.. ஆனாலும், கடைசிவரை அந்த ஆசை நிறைவேறவில்லை.

மு.க.முத்துவின் அரசியல், சினிமா தோல்வியை தழுவியிருந்தாலும், அவரது நாகூர் ஆண்டவா பாடலும், காதலின் பொன் வீதியிலும்.. அவரை குரலை இன்றுவரை மக்களிடம் அவரை அடையாளம் காட்டி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+