Kalyana Veedu Serial: ஊதி ஊதி பெரிசாக்கற மாதிரி இருக்கே.. இது நல்லதுக்கா கெட்டதுக்கா?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கல்லூரி போகும் பெண் இருக்கும் ஒரு தாய், இன்னொரு குழந்தைக்கு தயாகப் போவது போல காண்பித்து இருக்கிறார் திருமுருகன்.
இதை அந்த தாய் சொந்தக்காரரங்களுக்கு பயந்து மறைக்கிறார்.. அவளை பெத்த தாயே என்னடி இது அசிங்கம்னு கேட்கறாங்க..
கலா சிஸ்டர்ஸ் கிண்டல் அடிக்கறாங்க.. நக்கல் அடிக்கறாங்க...

இது சகஜம்
அந்த காலத்தில் பெண்ணும், அம்மாவும் பிள்ளையாண்டு இருப்பது சகஜமகா இருந்தது. அந்த காலத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அதுவும் இல்லாமல் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் சிறிய வயதாகவும் இருந்தது. குடும்பக் கட்டுப்பாடு என்பதும் இல்லை. ஏன் அபார்ஷன் என்பது கூட இல்லை.

எங்காவது இது
இந்த காலத்திலும் இது எங்காவது ஒன்று நடப்பது என்பது இருக்கும் பட்சத்தில் இதை பூத கண்ணாடி வைத்து காண்பித்து ஊதி ஊதி பெரிசாக்கி, என்னவோ கொலைக் குத்தம் போல காண்பித்து பின்னால் அதை என்னவோ இதெல்லாம் பெரிய குத்தம் இல்லை என்பது போல வசனம் பேச வச்சு இதை காட்சியாக்க வேண்டிய அவசியம்தான் என்ன திருமுருகன் என்றுதான் கேட்க தோன்றுகிறது.

சொல்வதையே குறிக்கோளாக
திருமுருகன் அங்கே சுத்தி இங்கே சுத்தி பெண்களை பூத கண்ணாடி வச்சு குத்தம் சொல்வதையே குறிக்கோளாக கொண்டு இருக்கிறார் என்றே சொல்ல தோன்றுகிறது. பத்மா தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டு பிள்ளை உண்டாகி இருக்கக் கூடாதா? அப்படி ஒரு சமாதானம் செய்து கொண்டு இதை ஆரம்பத்திலே விட்டு இருந்திருக்கலாமே..

சின்ன வயசுதானே
என்னதான் கல்லூரி போகும் பெண் இருந்தாலும் பத்மா கதாபாத்திரத்துக்கும் சின்ன வயசுதானே.. அவள் பிள்ளை உண்டாகி இருப்பதை இப்படி நக்கல் அடிப்பது கிண்டல் அடிப்பது என்று மனசாட்சி இல்லாமல் காண்பித்துவிட்டு அப்புறம் ஆயிரம் சமாதானம் சொல்வதில் என்ன இருக்கிறது திருமுருகன்? சின்ன சின்ன விஷயங்களை பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பதில் நீங்கள் கில்லாடி திருமுருகன்.
ஆனால், நிச்சயம் இன்னொரு முறை நீங்கள் தொடர்ந்து வருத்தம் தெரிவிக்கும் காலம் வெகு விரைவில் வரத்தான் போகிறது பாருங்கள்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications