துபாயின் 29வது மாடியில் நம்ம லால் ஏட்டன்.. மனைவிக்காக வாங்கிய மிரட்டலான கிப்ட்.. விலை இத்தனை கோடியா?
சென்னை: துபாயின் உலக புகழ்பெற்ற அடையாளமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது மனைவி சுசித்ராவின் பெயரில் புதிய சொகுசு இல்லம் ஒன்றை வாங்கியுள்ளார். சர்வதேசப் பிரபலங்கள் மட்டுமே வசிக்கும் இந்த விஐபி கட்டிடத்தில், கோடிகளைக் கொட்டி நடிகர் மோகன்லால் மாஸ் என்ட்ரி கொடுத்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகளாவிய அந்தஸ்தும் மிரள வைக்கும் விலை பட்டியலும் கொண்ட இந்த சொகுசு வீட்டின் சுவாரசிய பின்னணியை இந்தச் செய்தியில் விரிவாகப் பார்ப்போம்.
சினிமா பிரபலங்கள் என்றாலே ஆடம்பரத்துக்கும் சொகுசுக்கும் பஞ்சம் இருக்காது. அதுவும் நம்ம மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என்றால் கேட்கவே வேண்டாம்.

நடிப்பில் மிரட்டுவது ஒருபுறம் என்றால், நிஜ வாழ்க்கையிலும் மனிதர் எப்போதுமே கிங் சைஸ் தான். இப்போது ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஆச்சரியப்பட்டுப் பார்க்கும் படியாக ஒரு சூப்பரான காரியத்தைச் செய்திருக்கிறார் மோகன்லால். உலகிலேயே மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீபாவில், தனது அன்பு மனைவி சுசித்ராவின் பெயரில் ஒரு பவர்ஃபுல் வீட்டை வாங்கி, அவருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
துபாய் புர்ஜ் கலீபா
"நான் துபாயில் இருக்கிறேன்" என்று சொல்வதற்கும், "நான் புர்ஜ் கலீபாவில் வசிக்கிறேன்" என்று சொல்வதற்கும் பெரிய அந்தஸ்து வித்தியாசமே இருக்கிறது பாஸ். துபாயின் அடையாளமாக இருக்கும் இந்த கட்டிடத்தை சும்மா வேடிக்கை பார்க்கவே காசு அள்ளி வீச வேண்டியிருக்கும் போது, அங்கேயே சொந்தமாக வீடு வாங்குவது என்றால் சும்மாவா?
உலகப் பணக்காரர்களை காந்தம் போல இழுக்கும் இந்த புர்ஜ் கலீபாவில் வீடுகளின் விலை நிலவரம் என்ன தெரியுமா? பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிராப்பர்ட்டி ஃபைண்டர் வெளியிட்டுள்ள ரிப்போர்ட் நம்மை அப்படியே வாயடைக்க வைக்கிறது.
இங்கு ஒரு சின்ன ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டும் என்றாலே இந்திய மதிப்பில் சுமார் 3.4 கோடி ரூபாய் முதல் 5.7 கோடி ரூபாய் வரை தேவைப்படும்.
சொகுசு அப்பார்ட்மெண்ட்
ஆனால் நம்ம மோகன்லால் வாங்கியிருக்கும் ஒரு பெட்ரூம் கொண்ட சொகுசு அபார்ட்மெண்ட்டின் விலை 5 கோடி ரூபாய் முதல் தொடங்கி 9 கோடி ரூபாய் வரை எகிறுகிறது. இதுமட்டும் இல்லாமல் இரண்டு பெட்ரூம் வீடுகள் 10 கோடி முதல் 16 கோடி வரையிலும், மூன்று பெட்ரூம் சொகுசு வீடுகள் 20 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுகின்றன.
காசை பற்றி கவலையே படாத பெரும் பணக்காரர்களுக்காகவே இருக்கும் பென்ட்ஹவுஸ் மற்றும் அர்மானி குடியிருப்புகளின் விலையோ 80 கோடி ரூபாயில் தொடங்கி 230 கோடியைத் தாண்டிப் போகிறது. இதோடு ஏஜென்ட் கமிஷன், ரிஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ், வருடாந்திர மெயின்டனன்ஸ் எல்லாம் சேர்த்தால் இன்னும் சில கோடிகள் எக்ஸ்ட்ராவாக பில் ஏறும்.
மோகன்லாலுக்கு பிரம்மாண்டமான வீடு
ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் மோகன்லாலுக்கு இந்த 5 கோடி ரூபாய் என்பது பெரிய விஷயம் இல்லை என்றாலும், ஒரு பெட்ரூம் கொண்ட வீட்டிற்கு இது மிக பிரம்மாண்டமான விலை தான். இந்த வீட்டின் 29வது மாடியில் இருந்து ஜன்னல் வழியே பார்த்தால் உலகப் புகழ்பெற்ற துபாய் ஃபவுண்டன் நீரூற்றின் பேரழகு அள்ளிக் கொண்டு போகும்.
மோகன்லாலுக்கு ஏற்கனவே துபாய் கடற்கரையில் ஒரு பிரம்மாண்ட பங்களா இருந்தாலும், ஷூட்டிங் அலைச்சல் இல்லாமல் ஜாலியாகவும் தனிமையாகவும் ஓய்வெடுக்க இந்த புர்ஜ் கலீபா வீட்டைப் பயன்படுத்தப் போகிறாராம்.
விஐபி கட்டிடங்கள்
ஏற்கனவே இந்த விஐபி கட்டிடத்தில் பாலிவுட் பாட்சா ஷாருக்கான் ஒரு சொகுசு குடியிருப்பு வைத்துள்ளார். இவர்களைத் தவிர, 2009-லேயே சர்வதேச கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் தன் மனைவியுடன் சேர்ந்து இங்கு வீடு வாங்கினார்.
2010-ல் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தன் மனைவி ஷில்பா ஷெட்டிக்கு திருமணப் பரிசாக இங்கிருந்த வீட்டைத் தான் கொடுத்தார். உலகப் புகழ்பெற்ற பேஷன் டிசைனர் அர்மானியும் இங்கு வசித்து வருகிறார். இந்த சர்வதேசப் பிரபலங்களின் வரிசையில், இப்போது நம்ம லால் ஏட்டனும் தன் மனைவியின் பெயரில் மாஸ் என்ட்ரி கொடுத்து, சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்..!!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications